என்னை டிஷ்யூ பேப்பர் போல் கசக்கி எறிந்தனர் - My Story #192

Posted By: Staff
Subscribe to Boldsky

நான் சிவில் என்ஜினியரிங் படித்த மாணவி. மற்ற பொறியியலில் துறைகளுடன் ஒப்பிடுகையில் சிவில் மற்றும் மெக்கானிக் துறையில் ஒரு பெண் படிப்பது கொஞ்சம் அரிதானதாகவே காணப்படுகின்றன. ஒருவேளை, நான் இப்போது கடந்து வரும் அனுபவங்களுக்கு கூட அது காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

வழக்கமாக அனைவரும் கூறும் அந்த அழகு என்னிடம் இல்லை. மேலும், சிறு வயதில் இருந்தே நான் கொஞ்சம் உடல் தடிமனாக தான் இருந்து வருகிறேன். இவை இரண்டும் தான் எனது இன்றைய மன அழுத்தத்திற்கு காரணம். என் கல்லூரியில் ஆண்கள் வகுத்து வைத்திருக்கும் அந்த அழகு கோட்பாட்டுடன் பல பெண்கள் இருந்தனர், என்னை தவிர.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டாம் வருடம்!

இரண்டாம் வருடம்!

நான் அப்போது கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்தேன். அப்போது எனது சீனியர் ஒருவர் மீது எனக்கு அளவு கடந்த விருப்பம் இருந்தது. அவர் அப்போது கடைசி வருடம் பயின்று வந்தார். ஒருமுறை, தேர்வு நாளின் போது நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் அவருக்கானவள் நானோ என்ற எண்ணம் முதல் முறையாக என்னுள் பிறந்தது.

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

அதன் பிறகு பெரிதாக அவரை நான் நேரில் காணவே இல்லை. ஓரிரு முறை தேர்வு இடைவேளை நேரங்களில் பார்த்ததோடு சரி. பிறகு ஒருவருடம் கழித்து நாங்கள் இருவரும் ஃபேஸ்புக் மூலம் சந்தித்து கொண்டோம். அது எனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருந்தது. அவருக்கும் என் மீது விருப்பம் இருக்கிறதோ என்ற உணர்வு அன்று தான் வெளிப்பட்டது. கால தடையின்றி எங்கள் கலந்துரையாடல் நீடித்தது.

செக்ஸ்டிங்!

செக்ஸ்டிங்!

ஓரிரு வாரங்கள் கழித்து எங்கள் இருவர் இடையே இருந்த டெக்ஸ்டிங், செக்ஸ்டிங்காக மாறியது. நான் அவர் மீது பைத்தியமாக மாறினேன். ஆனால், அவர் அப்படியாக இல்லை. திடீரென எங்கள் சாட்டிங் கலந்துரையாடல் முற்றிலுமாக தடைப்பட்டு போனது. ஓரிருமுறை செய்திகள் வரும், அதுவும் ஜஸ்ட் லக் தட் என முடிந்துவிடும். நாங்கள் இப்போது ஏதோ மூன்றாம் நபர்கள் போல மாறிப் போனோம்.

உடைந்து போனேன்!

உடைந்து போனேன்!

அவர் என்னை காதலிப்பதாக ஒருபோதும் கூறவில்லை. ஆனால், நான் அப்படியாக தான் உணர்ந்து வந்தேன். இந்த திடீர் பிரிவு என் இதயத்தை உடைய செய்ததது. இதே சமயத்தில் தான் எனது நெருங்கிய நண்பன் ஒருவன் என்னுடன் வினோதமாக பழக துவங்கினான். அவனுக்கு என் மீது விருப்பம் இருப்பதாக தெரிவித்தான். ஆனால், அது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. மேலும், எனக்கெல்லாம் ஒரு உண்மையான காதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தேவையில்லாத ஈர்ப்பு!

தேவையில்லாத ஈர்ப்பு!

எனக்கு தேவையில்லாத ஒருவர், ஒரு விஷயத்தின் மீது நான் ஏன் ஈர்ப்பு கொள்கிறேன் என்ற கேள்வி என்னுள். இந்த ஆண்களிடம் நான் எதையும் கூற விரும்பவில்லை. ஏனெனில், அது என்னுடைய தவறு. அவர்கள் பொய் சத்தியம் செய்வதில்லை. அவர்களது நோக்கம் என்னவோ அதில் தெளிவாக இருக்கிறார்கள். நான் தான் அவர்களை என் இதயத்தை உடைக்க செய்கிறேன்.

யாரிடம் கூறுவது?

யாரிடம் கூறுவது?

இதை யாரிடமாவது கூற வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், இதை நிச்சயம் சிலர் கேலியாக எண்ணலாம். ஆனால், மனதுக்குள் எத்தனை நாட்கள் இதை அடைத்து வைத்துக் கொண்டிருப்பது. வீட்டில் குப்பை வைத்துக் கொண்டே இருந்தால், நாள்பட நாற்றம் அடைக்கும் அல்லவா.. அதே போல தான். இந்த தவறான அனுபவங்கள் என் மனதுக்குள் வைத்துக் கொண்டே இருந்தால் என்னை மிகவும் சோர்வடைய செய்கிறது.

தவறு என்னுடையது!

தவறு என்னுடையது!

தவறு என்னுடையது தான். பிடித்த நபர் என்பதால் நான் செக்ஸ்டிங் செய்யாதிருந்தால் எனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. இதை ஒரு காரணமாக கொண்டு வேறு சிலர் என்னிடம் தவறாக, வினோதமாக கருதி இருக்க மாட்டார்கள். நமக்கு பிடித்தவரோ, நெருக்காமான நபரோ, யாராக இருந்தாலும் எல்லை மீறிய விஷயங்களை செய்வது இந்த டிஜிட்டல் யுகத்தில் உங்கள் கதாபாத்திரத்தை மிக எளிதில் சீரழித்துவிடும் என்பதற்கான எடுத்துக்காட்டு நான்.

வேண்டாம் ப்ளீஸ்!

வேண்டாம் ப்ளீஸ்!

காதலானாகவே இருந்தாலும் கூட, தாலி கட்டும் வரை இங்கே உங்களுக்கு நூறு சதவிதம் பாதுகாப்பாக இருப்பாரா என்பது ஊர்ஜிதம் இல்லை. இன்று இல்லை என்றாலும், நாளை பிரிவு ஏற்படலாம். நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட படங்கள், பேசிக் கொண்ட ரொமான்ஸ் வார்த்தைகள் உங்களை ஒரு மோசமான பெண்ணாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க செய்யலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது உங்கள் கடமை.

பொன் வைத்திருப்பவர்கள் தான் பத்திரமாக இருக்க வேண்டும், திருடர்கள் அல்ல....!

எதிர்புறம்!

எதிர்புறம்!

பெரும்பாலும் இன்று நடக்கும் தவறுக்கு முக்கிய காரணம்... அனைவரும் தங்கள் பக்கம் இருக்கும் நியாயம் மற்றும் நிலைப்பாடு குறித்தே ஆலோசித்து செயற்படுகிறார்கள். நமக்கு எதிர்புறம் இருக்கும் நபர்களின் நியாயம் மற்றும் நிலைபாடு என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும். தொழில் முனைவோர்கள் இந்த வழியை தான் பின்பற்றுவார்கள் இல்லையேல் அவர்களால் போட்டியில் வெல்ல முடியாது.

என்ன தவறு?

என்ன தவறு?

என் சீனியர் மனதுக்கு பிடித்த நபர் என்ற காரணத்தால் அவர் செக்ஸ்டிங் செய்ய முனைந்த போது அதை நான் ஏற்றுக் கொண்டேன். மேலும், அவர் என் மீது காதல் கொண்டிருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார் என்று கருதினேன். ஆனால், செக்ஸ்டிங்கின் வெளிபாடு காதல் இல்லை என்பதை பிறகே புரிந்துக் கொண்டேன்.

அவர் என்ன செய்திருப்பார்?

அவர் என்ன செய்திருப்பார்?

நான் பேச துவங்கிய ஒரு வாரத்தில் செக்ஸ்டிங் செய்த உடனேய அவள் (நான்) அதை ஏற்று ரிப்ளை செய்தாள். அவள் கொஞ்சம் அப்படி இப்படி என்று இருப்பாள் போல என்ற எண்ணம் என் சீனியர் மனதில் எழுந்திருக்கலாம். அதை அவர் அவரது நண்பர்கள், ஜூனியர்களுடன் பகிர்ந்திருக்கலாம்.

இனி யாரும் செய்திட வேண்டாம்...

இனி யாரும் செய்திட வேண்டாம்...

அன்று கழிவறை சுவர்களில் எழுதி வைத்து பெண்களை மோசமாக சித்தரித்தனர். இன்று வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசேஞ்சரில் பல சாட்டிங் பகிர்வுகளில், ஸ்க்ரீன்-ஷாட்களில் மோசமாக சித்தரிக்கிறார்கள்.

தவறு அவர்கள் மீது மேல் மட்டுமல்ல, என் மீதும் தான். நான் செய்த இந்த தவறை, வேறு எந்த பெண்ணும் இனிமேல் செய்திட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I Shown True Love. But, They Just Squeezed Me Like a Tissue Paper!

I Shown True Love. But, They Just Squeezed Me Like a Tissue Paper!