உன் பையன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? My story #159

Posted By:
Subscribe to Boldsky

எனக்கு நண்பர்கள் தான் எல்லாமே... பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி என் உலகம் எல்லாமே நண்பர்களைச் சுற்றியே தான் இருந்தது. கல்லூரி முடித்து பத்துவருடங்கள் கடந்து வந்து விட்டிருக்கிறேன்.... இன்னமும் அந்த நட்பு அப்படியே தொடர்கிறதா என்ற கேள்விக்கு முடிவில் பதில் சொல்கிறேன்.

இது எனக்காக அல்ல.... என் நண்பர்களுக்காக

நாங்கள் மொத்தம் எட்டு பேர். ஹாஸ்டலை துவம்சம் செய்வதிலிருந்து வகுப்பை கட் செய்து விட்டு ஊர் சுற்றுவது, இரவில் தாமதமாக வந்து வார்டனிடம் மாட்டிக் கொள்வது என எப்போதும் எதாவது கலாட்டா செய்து கொண்டே இருப்போம்.

எங்களையாவது தறுதலைங்க சொன்னா எங்க கேக்குறாங்க என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் எங்களோட பழகிய தோழிகளின் நிலைமை தான் பாவம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் இல்லாமலா? :

காதல் இல்லாமலா? :

என் நண்பன் ரமேஷுக்கு இசை மீது அதிக ஆர்வம், மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிப்பதிலும், பாட்டுப்பாடுவதில் அவன் கில்லாடி, கல்லூரிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகளில் அவன் வென்றிருக்கிறான்.

கொஞ்சம் சொன்னால் எங்கள் கேங்கின் விடிவெள்ளி, அவனுக்கு எங்கள் வகுப்புத் தோழி சுபாவை ஒன் சைடாக காதலித்தான்.

பயம் :

பயம் :

சுபாவைப் பற்றி சொல்ல எனக்கு தைரியமில்லை, அமைதியான பெண் யாரிடமும் பேச மாட்டாள். நானும் ரமேஷும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருப்போம் வகுப்பிலும் ஒன்றாகவே உட்கார்ந்திருப்போம்.

சுபா மீதான காதலை முதலில் என்னிடம் தான் சொன்னான். நானும் அவனுக்கு சப்போர்ட் செய்ய அவளின் கண்ணிலிருந்து, ஜிமிக்கி,பறக்கும் கூந்தல், பொட்டு,பேக்,செருப்பு,அவளின் சுடிதார் என அவளை அங்குலம் அங்குலமாக பார்த்து விவரிப்பான்.

இப்டித்தான் தேவதைங்க இருப்பாங்களா? :

இப்டித்தான் தேவதைங்க இருப்பாங்களா? :

ஒரு கட்டத்தில் நானே கடுப்பாகி.... சரி டா விடு.... அழகாதாண்டா இருக்கா என்று சலித்துக் கொள்வேன். இல்ல மச்சி நீ ஒரு தடவ பாரேன்.... எப்டியிருக்கான்னு பாரேன் என்று வலுக்கட்டாயமாக என்னை அவள் பின்னால் இழுத்துக் கொண்டு போவான்.

கிட்டத்தட்ட ரமேஷ் என்ற என் நண்பன் நாய்க்கு நான் அஸிஸ்டண்ட் நாயாக சுற்றினேன்.

போய் சொல்ல வேண்டியது தானா ? :

போய் சொல்ல வேண்டியது தானா ? :

காதலைச் சொல்லுகிற வரையில் யாருக்கும் இந்த காதல் தெரிய வேண்டாம் என்று நினைத்தானோ என்னவோ அவன் என்னைத் தவிர வேறு யாரிடமும் சுபாவைப் பற்றி அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

சுபாட்ட பேச வேண்டியது தானா.... டப்புனு மேட்டர சொல்லுடா

இல்லடா... அவ பாத்தாலே கொஞ்சம் ரிச் மாதிரி தெரியுது. என்னையெல்லாம் அவளுக்கு புடிக்குமா? எங்க வீட்ல எல்லாம் வந்து அவ இருப்பாளாடா, கிளாஸ்லயே நம்மகிட்ட எல்லாம் பேசமாட்றா நம்ம் ஏன் தேவையில்லாம ஆசை வளர்த்துட்டு.....

சுபா உனக்குத் தான் :

சுபா உனக்குத் தான் :

காதல் முகத்தை பார்த்து வருவதல்ல... நீயாக தேவையில்லாமல் எதையாவது கற்பனை செய்யாதே... உன் நிலைமையை நீ படிக்கிற படிப்பு மாற்றும் என்றெல்லாம் வகுப்பு எடுத்து அவன் மனதிலிருந்த தாழ்வு மனப்பான்மையை உடைக்க உதவினேன்.

படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பித்தான்.

நீ போய் பேசு :

நீ போய் பேசு :

அவனின் மாற்றத்தை வைத்தே எங்கள் கேங் விஷயத்தை மோப்பம் பிடித்தது. அவ்வப்போது சுபாவின் பெயரைச் சொல்லி கிண்டல் செய்வது,சுபா வகுப்பறைக்குள் நுழைந்ததும் கத்துவது என சீண்ட ஆரம்பித்தனர்.

அவங்க போய் சொதப்புறதுக்குள்ள ஒழுங்கா போய் நீயா பேசிடு என்றேன்... இல்லடா பயமா இருக்கு நீ போய் பேச ஆரம்பி நான் வந்து ஜாயிண்ட் பண்ணிக்கிறேன் என்று அனுப்பிவிட்டான்.

இருதலைப்பாம்பு :

இருதலைப்பாம்பு :

மொபைல் நம்பர் வாங்கினேன்... பாடத்தில் சந்தேகம் கேட்டேன், உதவி கேட்டேன், அவசரத்தேவை என்று சொல்லி இரண்டாயிரம் ரூபாய் வாங்கினேன். அதை நான்கு முறையாக யாருக்கும் தெரியாமல் அவளிடம் கொடுத்துச் சென்றேன்.

இந்த காலத்தில் எல்லாம் அவளிடம் அதிக நேரம் பேசவில்லை, நீ என் வகுப்பில் படிக்கிறவள் பிறருக்கு என்ன முன்னுரிமை தருகிறேனோ அதே தான் உனக்கும் என்ற ரீதியில் தான் அவளை டீல் செய்தேன். வகுப்பில் பிறர் முன்னால் அவளை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டேன்......

ரமேஷ் உன்ன லவ் பண்றான் :

ரமேஷ் உன்ன லவ் பண்றான் :

எனக்கு சற்று நெருக்கமானாள் சுபா. ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் போது பேச்சு வாக்கில் ரமேஷ் உன்ன ரொம்ப லவ் பண்றான் என்று சொல்லிவிட்டேன்.... சட்டென எழுந்து நகர்ந்து விட்டாள்.

விஷயத்தை ரமேஷ் கேள்விப்பட்டு அப்போதும் புலம்ப ஆரம்பித்தான்.... நான் தான் முன்னாடியே சொன்னேன்லடா.... எங்கள மாதிரி பசங்கள எல்லாம் இவங்களுக்கு பிடிக்காதுன்னு

லூசு மாதிரி பேசாத உன்னையும் சுபாவையும் சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு.

 தூதுவன் :

தூதுவன் :

தூதுவன் என்ற முறையில் சுபாவிடம் நெருங்கினேன்.... தொடர்ந்து ரமேஷ் பற்றி பேச ஆரம்பித்து எங்களைப் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்து விடுவோம். மெல்ல மெல்ல சுபா மீதான ஈர்ப்பு எனக்கு அதிகமானது, ஆனால் அதனை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை.

தொடர்ந்து அவள் பின்னால் சுற்ற ஆரம்பித்தேன். ரமேஷுக்காக என்ற போர்வையிலிருந்து மெல்ல விலகி எனக்காக என்று செல்வது எனக்கு மட்டும் தெரிந்திருந்தது.

உன்ன தான் லவ் பண்றேன் :

உன்ன தான் லவ் பண்றேன் :

ஒரு நாள் ரமேஷுக்கும் எனக்கும் இது தொடர்பாக மனஸ்தாபம் ஏற்பட்டது, அவ்ளோ சந்தேகம் இருந்தா நீயே போய் சொல்ல வேண்டியது தானா என்று கேட்டுவிட்டேன்... என்னிடமிருந்து கோபித்துக் கொண்டு நேராக சுபாவிடம் சென்று கேட்டுவிட்டான்.

அவள் என்ன பதில் சொன்னாளா அதன் பிறகு என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான் ரமேஷ். நானாக பேசினாலும் என்னை தவிர்க்கவே செய்தான்.

நீ தப்பு பண்ற :

நீ தப்பு பண்ற :

அதன் பிறகு அவன் வகுப்பிற்கு வருவதும் வெகுவாக குறைந்தது, எங்களோடு தொடர்பற்றுப் போனான்.

தேவையில்லாம ஒருத்தன் லைஃப் ல விளையாடாத.... ஆரம்பத்தலயிருந்தே அவனுக்கு இந்த விஷயத்துல சப்போர்ட் பண்ணது நீ தான் உங்க மூணு பேருக்குள்ள என்ன நடக்குது ஒழுங்க இந்த சால்வ் பண்ற வழியப் பாரு என்று என் நண்பர்கள் சொன்னார்கள்.

நான் தப்பு பண்றேனா என்று கேட்டுக் கொண்டேன்.

சுபாவிடம்.... :

சுபாவிடம்.... :

சரி, இந்த பிரச்சனையை இதோடு முடித்து விடுவோம் என்று சொல்லி, நேராக ரமேஷிடம் சென்றேன் இதுவரை நடந்தது எல்லாவற்றிற்கும் என்னை மன்னித்து விடு இன்றைக்கு வகுப்புக்கு வா, உன் முன்னாலேயே நேராக உன்னை ரமேஷ் தான் காதாலிக்கிறான், அவன் சொல்லிதான் நான் உன்னிடம் பேச ஆரம்பித்தேன் எனக்கு உன் மீது எந்த அபிப்ராயமும் இல்லை என்று சொல்லிவிடுகிறேன் என்றேன்.

வேண்டாம். அவசியமில்ல கொஞ்ச நாள்ல சரியாப்போகும் என்று என்னை அனுப்பி வைத்தான்.

என்னிடமிருந்து கிளம்பும் போது... நல்லாயிருங்கடா என்றுவேறு சொல்ல, எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சுபாவிடம் கேட்டேன், அன்றைக்கு ரமேஷ் அவளிடம் கேட்ட போது என்னை காதலிப்பதாக சொல்லியிருக்கிறாள்.

குற்றவுணர்ச்சி :

குற்றவுணர்ச்சி :

எங்கள் நட்புக் கூட்டம் இரண்டாக உடைந்தது, ஏதோ நானே அவனை ஆசைகாட்டி ஏமாற்றியதாக, துரோகம் செய்தததாக பேச ஆரம்பிக்க.... எல்லாரிடமிருந்து விலகி தனித்திருக்க ஆரம்பித்தேன்.

ஏதோ பெரிய தவறு செய்துவிட்டேன்.... போன்ற குற்றவுணர்ச்சி என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

ஊருக்குப் போலாம் :

ஊருக்குப் போலாம் :

எங்கள் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக சிதற ஆரம்பித்தனர், கல்லூரி முடியும் தருவாயில் மீண்டும் எங்கள் பிரச்சனை சூடு பிடித்தது. ஒரு பக்கம் என் நண்பன் ரமேஷ் இன்னொரு பக்கம் மறைமுக காதலியான சுபா.

நண்பனின் காதலியாக அறிமுகமானலும், அவள் என்னைத் தான் காதலிக்கிறாள் என்று உறுதியானதும் அவளை விட்டு வரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். சரி, நாம் அனைவரும் சேர்ந்து ஊட்டிக்குச் செல்லலாம் கல்லூரி நாட்களின் கடைசி அவுட்டிங் எல்லாரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று உறுதியேற்றோம்.

மனுஷனாடா நீ :

மனுஷனாடா நீ :

ரமேஷும் வந்திருந்தான். நண்பர்களோடு சேர்ந்து குடித்து விட்டு, உளர ஆரம்பித்தான் என்னை வசைபாட ஆரம்பித்தான் கூட வந்து குழி பறிச்சுட்டான் என்று திட்ட ஆரம்பிக்க நானும் குடித்து விட்டு கத்த ஆரம்பித்தேன்

பயந்தாங்கோலி மாதிரி என் பின்னாடி ஒளிஞ்சிட்டா அவளா உன்னத் தேடி வருவாளா? லவ் பண்றேன்னு முகத்துக்கு நேரா போய் சொல்ல துப்பில்ல இப்போ பேச வந்துட்டியா என்று கேட்டேன்....

சுயநினைவோடு இருந்திருந்தால் நிச்சயம் அப்படி கேட்டிருக்க மாட்டேன்.

 அதிர்ச்சி :

அதிர்ச்சி :

குடித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து தள்ளாடியபடி என்னருகே வந்து ஓங்கி அடிக்க ஆரம்பித்தான், நானும் திருப்பியடிக்க கைகலப்பானது, வார்த்தைகளும் என்னை மீறி வந்து விழுந்தது, எல்லாரும் எங்களை விளக்கி விட்டார்கள்.

பின் எழுந்து ரோட்டுப்பக்கம் செல்ல அவன் பின்னால் நான் ஓடினேன், போடா போ.... எனக்கு யாரும் வேணாம், என்கிட்டயிருந்து சுபாவ பிரிச்சுட்டல்ல என்றான். எங்கடா உன்னைய பிரிச்சேன் என்று விளக்கம் தருவதற்குள் என்னைத்தட்டிவிட்டு விலகி நடந்தான். உச்சக்கட்ட போதையில் இருவரும் தள்ளாடியபடி ரோட்டுக்கு வந்தாம்.

மீண்டும் கைகலப்பு, அப்படியே கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தோம். ஒரு குற்ற உணர்ச்சி என்னை அவனை நோக்கியே உந்தித்தள்ளியது.

 திருடன் ! :

திருடன் ! :

நாங்கள் நடந்து கொண்டிருந்த சாலையில் கார் ஒன்று வந்தது, தூரத்திலேயே அதனை பார்த்து விட்ட ரமேஷ்.... இந்த கார்ல விழுந்து நான் செத்துப் போறேன் என்று சொல்லி காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான், அவனைப் பிடிக்க நான் ஓடினேன். திடிரென்று இருவர் தன்னை நோக்கி வருகிறார்கள் என்பதை அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார்காரன் என்ன நினைத்தானோ எங்கள் அருகில் வந்து சட்டன் ப்ரேக் அடித்தான்.

ரமேஷை காப்பாற்ற நினைத்து வலப்பக்கம் தள்ளிவிட்டேன், கார் மரத்தில் மோதி நின்றது, நான் கார் மோதி இடப்பக்கம் விழுந்தேன். லூசுப்பய சாவுறேன்னு போய்ட்டான் நான் தான் காப்பாத்தினேன் தெரியுமா? என்று மனதில் நினைத்துக் கொண்டேன், இடது கையில் எலும்பு உடைந்ததிருந்தது, அதைத் தாண்டி சின்ன சிராய்ப்புகளுடன் நான் தப்பித்தேன்.

நான் நானாக இல்லை :

நான் நானாக இல்லை :

எப்படியோ காப்பாத்தியாச்சு வந்து சேர்ந்துவிடுவான் என்று அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மறுநாள் போலீஸ் வந்தது, எங்களை எல்லாம் விசாரிக்க வேண்டும் என்றார்கள். இரவு அவனோடு நானும் இருந்தேன் என்றேன் என்னை அந்த பட்டியலிலேயே என்னைச் சேர்க்கவில்லை

பிறகு ஊர் வந்து சேர்ந்த பிறகு தான் விஷயம் தெரிந்தது, அன்றைக்கு நான் தள்ளிவிட்டதில் வலது புறம் இருந்த அதளபாதாளத்தில் போய் விழுந்திருக்கிறான். கார் மோதியதோ எதோ ஓர் வழக்கறிஞரின் மகன். அவன் காரில் இருப்பவரை தாக்கி கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்தவன், திருடுவதற்காக காரை வழிமறித்திருக்கிறான். வேகமாக வந்த கார் நிலைதடுமாறிய போது இவன் வலதுபக்கம் ஒதுங்க நினைத்து அப்படியே கீழே விழுந்து விட்டான் என்று கேஸ் முடிக்கப்பட்டது.

உன் புள்ள கொள்ளையடிச்சது எல்லாம் எங்க என்று சொல்லி அவனின் பெற்றோரை கைது செய்து விசாரித்தார்கள். நண்பனின் மரணமும் அம்மா அப்பாவை அந்த கோளத்தில் பார்த்த பிறகு நான் நானாகவேயில்லை.

வாழ்க்கை :

வாழ்க்கை :

இந்த விஷயம் வெளியில் சொல்லவும் எனக்கு தைரியம் வரவில்லை, என்னை நானே முடக்கிக் கொண்டேன். பைத்தியம் போல வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தேன் போலீஸ் துரத்துகிறது, ரமேஷ் திட்டுகிறான் என்று உளர ஆரம்பித்தேன் பேய் பிடித்திருப்பதாக மந்திரிக்கச் செய்தார்கள்.

ஐந்து வருடங்கள் சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் பிறகு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவள் எனக்கானவள் தானா அல்லது அவளையும் வேறு யாரிடமிருந்தாவது நான் பிரித்து விட்டேனா என்ற சந்தேகத்திலேயே என் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I missed the balance between love and friendship

I missed the balance between love and friendship
Story first published: Wednesday, January 31, 2018, 16:00 [IST]
Subscribe Newsletter