காதலிக்கிறதுக்கு முன்னாடி இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க! My Story #219

Posted By:
Subscribe to Boldsky

இதை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்திருப்பீர்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய ஒர் பிம்பத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு அந்த பிம்பமே நிஜமாக வேண்டும்.கற்பனையில் பார்த்த பிம்பமே நிஜ வாழ்க்கைக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்குவோம்.

அப்படி ஏங்கித் தவித்து. இன்று மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்.இரண்டாடுகள் காதலித்தோம். எக்கச்சக்க சண்டைகள், காதலர்களில் இதெல்லாம் சகஜம் தானே என்று எடுத்துக் கொண்டு அதனை எளிதாக கடந்து சென்றேன்.

ஒரு கட்டத்தில் வீட்டில் திருமணப்பேச்சு எடுக்க, காதல் விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டிய கட்டாயம். இதைத் தொடர்ந்து அவனில் தெரிந்த மாற்றங்கள் தான் அத்தனை குழப்பங்களுக்கும் காரணம். ஒரு கட்டத்தில் அவன் நம்மை பயன்படுத்திக் கொள்கிறானோ என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணம் கேட்ருந்தாங்க :

பணம் கேட்ருந்தாங்க :

முதன் முதலாக அவனை என் தோழியின் வீட்டில் தான் சந்தித்தேன். அவள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் போல பணத்தை எண்ணிக் கொண்டும், கணக்கினை சரிபார்த்துக் கொண்டும் இருந்தான்.

முதல் பார்வையில் எந்த ஈர்ப்போ அல்லது காதலோ எல்லாம் இல்லை. அப்பா நண்பருக்கு தெரிந்தவர் அம்மா அப்பா இல்ல தம்பிய இவரு தான் படிக்க வைகிறாரு என்றால்.

ஒரு இரக்கம்.

நியாபகம் இருக்கா ? :

நியாபகம் இருக்கா ? :

அதன் பிறகு ஒரு முறை ஆட்டோவிற்காக காத்திருந்த போது அவனாகவே வந்து பேசினான். என்னை நியாபகம் இருக்கா? ஒரு வாரம் முன்னாடி என்று சொல்லும் போதே தோழியின் வீட்டில் பார்த்தது, தோழி அவனைப் பற்றி சொன்னது எல்லாம் நினைவுக்கு வந்தது.

பேச ஆரம்பித்தோம். எதேதோ சொன்னான். எண்களை பரிமாறிக் கொண்டோம்.

கோவிலுக்கு போலாம் :

கோவிலுக்கு போலாம் :

திடீரென்று ஒரு நாள் போன் செய்தான். தயங்கியபடியே இன்னக்கி நீங்க ஃபிரீயா என்று கேட்டான்.... எதற்கு இப்படி திடீரென்று கேட்கிறான் என்று புரியாமல் என்ன விஷயம் சொல்லுங்க என்றேன்.

அவன் அதிகமாய் தயங்குவதை பார்த்து ஏதேனும் பணம் உதவி கேட்க நினைக்கிறானோ என்று தோன்றியது. இல்ல இன்னக்கி எங்கம்மாக்கு தெவசம் கோவிலுக்கு போணும் நீங்க வந்தா.... கொஞ்சம் நல்லாயிருக்கும் என்றும் இழுத்தான்.

காதலே.... :

காதலே.... :

ஒரு கணம் பரிதாபமாய் இருந்தது, உடனே கோவிலுக்கு கிளம்பினேன். சாமி கும்பிட்டு கோவிலில் உட்கார்ந்திருந்தோம். எப்பவும் இதெல்லாம் அனுசரிக்க மாட்டேன் அதோட விதி அது போய் சேர்ந்திருச்சு.... நிம்மதியா இருக்கட்டுமே மறுபடியும் மறுபடியும் நினச்சுட்டு என்னத்துக்குன்னு....

ஆனா ஏனோ இந்த வருசம்..... என்னமோ எங்கம்மா எனக்கு திரும்ப கிடச்ச மாதிரி இருக்கு. எங்க அம்மா முகம் அப்படியே உன் சாயல்ல இருக்கும் என்றான்.

விவரிக்க முடியாத ஓர் உணர்வு. ஆறுதலாய் இருக்க நினைத்தேன், அது காதலாக உருவாகிக் கொண்டிருந்தது.

ஊர் சுற்ற துவக்கம் :

ஊர் சுற்ற துவக்கம் :

அவனுக்காக அதிக நேரம் செலவிட ஆரம்பித்தேன், வழக்கமான காதலர்களைப் போல இல்லையென்றாலும் எங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டோம். எப்போதும் தாமதமாக வந்து என்னை கடுப்பேற்றுவது அவனது அன்றாட வேலை.

சின்ன சின்ன சண்டைகள் வரும். ஆனால் அடுத்தகணமே ஒன்று சேர்ந்து விடுவோம்.

தனிமை :

தனிமை :

எப்போதும் தாங்கள் குடும்பமாக வாழ்ந்த நாட்கள், அம்மாவின் மரணம், அப்பாவுடன் வளர்ந்த நாட்கள், அதன் பிறகு அப்பாவின் கொடுமைகள், அவருடைய மரணம் தொடர்ந்து உறவினர்களின் தலையீடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்.

அதை சொல்லும் போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு அழுவான். சமாதானம் சொல்ல நினைத்த என்னை ஆறத்தழுவி நீயும் என்னைய விட்டு போய்ர மாட்டியே என்று கேட்டு சத்தியம் வாங்கிக் கொள்வான்.

திருமணப் பேச்சு :

திருமணப் பேச்சு :

வீட்டில் திருமணம் குறித்து பேச ஆரம்பித்தார்கள். பல மாதங்களாக வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் சமாளிக்க முடியவில்லை.

காதலிக்கும் விஷயத்தை சொல்லிவிட்டேன். அம்மா அப்பா இருவரும் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை. பையனைப் பற்றி விசாரித்தார்கள். பின் கதைகள் எல்லாம் சொன்னேன். எல்லாம் சரி, பையன் இப்போ எங்க இருக்கான்? என்ன படிச்சிருக்கான்? என்ன வேல....? சம்பளம் என்ன? என்று அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இருக்கவில்லை.

அவங்க வீட்டு பெரியவங்களை வந்து பேசச் சொல்லு என்று அப்பா முடித்துக் கொண்டார்.

அப்பாவுக்கு நோ :

அப்பாவுக்கு நோ :

விஷயத்தை சொன்னேன், முதலில் கோப்பப்பட்டவன் பின் அவனது சித்தப்பா என்று சொல்லி ஒருவரை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அப்பா பேசினார்.

ஏதோ முன்னுக்குப் பின் பேசி சமாளித்தார். அவனைப் பற்றி எந்த நிலையான தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை, பொண்ண நல்லா பாத்துப்போம். தைரியமா அனுப்பி வைங்க என்றே திரும்ப திரும்ப சொன்னார்.

என் சம்பள விவரத்தையும், வரதட்சணையாக எவ்ளோ போடுவீங்க என்று அழுத்திக் கேட்க அப்பா பொண்ணு வேல பாக்கல என்று பொய் சொன்னார், அதோடு எங்கள் வழக்கப்படி வரதட்சணை எல்லாம் கொடுக்க மாட்டோம் என்றும் சொல்ல அவருக்கு பயங்கர டென்ஷன். பையன் வீட்டு முறப்படி தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லி கத்த ஆரம்பித்துவிட்டார்.

டென்ஷன் :

டென்ஷன் :

இவன என்னைய நம்ப சொல்றியா? உன் காதலுக்கு நாங்க எதிர்க்கல ஆனா பையனப் பத்தி நல்லா விசாரிச்சுக்கோ வாழ்க்கைய தொலச்சுராத என்றார் அப்பா. கூனிக்குருகி நின்றேன்.

அவனிடம் நேரில் சந்தித்து நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னேன். உன்னால என் மானமே போய்டுச்சு. அப்பா முன்னாடி என்ன பதில் சொல்றதுன்னு தெரியல, என்ன பண்ற? எங்க வேலப்பாக்குற??? என்று கேட்க அவன் பதிலே சொல்லாமல் தப்பிக்கப்பார்த்தான். மீண்டும் அம்மா புராணத்தை ஆரம்பிக்க எனக்கு பயங்கரமாய் டென்ஷன் எகிறியது.

சரியான ஃபிராடு :

சரியான ஃபிராடு :

அன்று நானும் அவனும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோம். சில தூரம் பின் தொடர்ந்து வந்த ஒரு டுவீலர் எங்களை வழிமறித்து நிறுத்தியது .டேய் உன்னைய எங்கல்லாம் தேடுறது.... உங்கம்மா நீ வருவ வருவன்னு காத்திட்டு இருக்கு நீ இங்க பொம்பளப்புள்ளைய கூட்டிட்டு சுத்துறியா என்றார்.

சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியாகி வண்டியை விட்டு இறங்கினேன், அம்மாவா? ஆமா, நீ யாரு.... பாத்த படிச்ச புள்ள மாதிரி இருக்க... ஏன் இந்த மாதிரி பொறுக்கி பசங்களோட எல்லாம் சேர்ந்து சுத்துறீங்க என்றார் .

நீங்க... ம்ம்ம் அவங்கப்பன் டேய் போய் உங்க அம்மாட்ட இந்த காச கொடு குடிச்சு தீத்ராத கிளம்பு சீக்கிரம். என்று கிளம்பினார்.

யார் நீ :

யார் நீ :

சண்டை ஆரம்பித்தது, அப்பா சொல்லும் போது கூட இவன் மீது ஓரளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவன் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மொத்தமாக சிதைந்து விட்டது.

யார் நீ? சொல்லு என்று தீவிரமாக கேட்க ஆரம்பித்தேன் . என்னைய ஏமாத்திட்டியே கொஞ்ச கொஞ்சமா என்கிட்டயிருந்து எவ்ளோ பணம் வாங்கியிருப்ப இப்படி நம்ப வச்சு கழுத்த அறுத்திட்டியே என்று கேட்க பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

மீண்டும் சந்திப்பு :

மீண்டும் சந்திப்பு :

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அழுது தீர்த்தேன். இப்படி ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்கிற கவலை தற்கொலை செய்யுமளவிற்கு தூண்டியது.

எதேச்சையாக அன்று அவனைப் போலவே உருவத்தில் பேண்ட் சட்டை எல்லாம் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்க்க நானே சென்று பேசினேன்.... அப்போது தான் அவன் தம்பி என்று தெரிந்தது. பார்த்ததும் உடைந்து அழ, அவன் பதட்டமடைந்தான்.

அப்பா சொன்னங்க அன்னக்கி அண்ணன் ஏதோ பொண்ணோட சுத்துதுன்னு சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கப் பூரா கஷ்டப்படணும்.என்றான்.

பொறுக்கிப் பய :

பொறுக்கிப் பய :

தம்பியை நான் சந்தித்த தகவல் தெரியாது மீண்டும் மீண்டும் என்னுடன் பேச முயற்சித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் போனை அட்டெண்ட் செய்யாததால் ஒரு நாள் வீட்டில் நானே வந்து பேசுகிறேன் என்று சொல்லி வீட்டிற்கே வந்து விட்டான்.

அப்பா வீட்டில் இல்லை அம்மா மட்டுமே இருந்தார். என் நிலைமை வீட்டினருக்கு தெரியும் என்பதால் அம்மாவும் பெரிதாக அவனிடம் பேசவில்லை. பெயரளவில் பேசிவிட்டு அவங்க அப்பா வரட்டும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

நல்லா புடிச்சடீ.... சரியான பொறுக்கிப்பயலா இருப்பான் போல.. என்னையவே திங்கிற மாதிரி பாக்குறான் என்றார் அம்மா.

அவன் வேண்டாம் :

அவன் வேண்டாம் :

அத்தனை பேருமே அவனைப் பற்றிய நெகட்டிவாக சொல்ல இனியும் அவனை நம்பி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்தேன். ஒரு வருடத்திற்கு பிறகு அப்பா பார்க்கிற பையனையே திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன்.

அடுத்த வருடத்தில் திருமணம் நடந்தது. அவ்வப்போது பார்ப்பதும், வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வருவதும் மிக கேவலமாக விமர்சிப்பதும், மிரட்டுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இரண்டு மூன்று முறை வீட்டிற்கு வந்து சண்டையிட்டிருக்கிறான்.

துரோகம் :

துரோகம் :

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றும் அவன் என்னை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று சொல்லி சுற்றிக் கொண்டிருக்கிறான். காதலித்து திருமணம் செய்து கொள்வதாய் சொல்லி ஏமாற்றிவிட்டதாய் புலம்பிக் கொண்டிருக்கிறான்.

அவன் என்னை திட்டுவதைப் பற்றியோ அல்லது அவன் நான் ஏமாற்றிவிட்டதாய் புலம்புவதைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை. என்னிடம் அம்மா செண்டிமெண்ட் சொல்லி ஒட்டிக் கொண்டது போல, லவ் ஃபெயிலர் என்று சொல்லி தான் ஏமாற்றப்பட்டதாய் ஒரு பச்சாதாபம் தேடிக் கொண்டு என் பெயரில் இன்னொரு பெண் பாதிப்படைந்துவிடக்கூடாதே என்கிற கவலை தான் எனக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girl Shares Her Shocking Breakup story

Girl Shares Her Shocking Breakup story
Story first published: Wednesday, March 28, 2018, 11:35 [IST]