For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சம்மதம்னா சொல்லு இப்பவே உனக்கு உதவி செய்றேன்! my story #233

  |

  நமக்கு தோன்றுகிறதோ இல்லையோ நம்மைச் சுற்றியிருப்பவர்கள் தூண்டிவிட்டு அவர்களாலேயே நம் வாழ்க்கை நாம் எதிர்ப்பார்க்காத திசையில் திரும்பும் அது நல்லபடியாக முடிந்தால் பரவாயில்லை அதே புயலென நம் வாழ்க்கையை புரட்டிப் போட்டால் என்ன செய்வது.

  பெண்ணின் வாழ்க்கை எதனால் எப்போதுமே திருமணத்துடனே சம்மந்தப்படுத்தி பேசப்படுகிறது என்று தெரியவில்லை. ஒரு பெண்ணின் வெற்றிகரமான வாழ்க்கை என்பது அவளுடைய திருமண வாழ்க்கை தான் என்ற ரீதியில் பார்க்கப்படுகிறது. இது சரியானது தானா? நிச்சயமாக இல்லை ஒவ்வொருவருக்கும் எப்படி கனவு, லட்சியம் இருக்கிறதோ அதே போலத்தான் பெண்களுக்கும் தனக்கென ஓர் ஆசை தனக்கென ஓர் கனவு இருக்கிறது.

  Girl Cheated by Her Brother

  ஆனால் சமூக காரணங்களை சுட்டிக் காட்டி திருமணம் மட்டுமே உன்னுடைய இலக்கு இப்படிச் செய்தால் உனக்கு நல்ல வரன் அமையாது, போற எடத்துல நம்மள மதிப்பானா என்று சொல்லி சொல்லியே பெண்களின் அடிப்படை உரிமையான கல்வியை பெறுவதற்கு கூட இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நான் :

  நான் :

  வாழ்க்கையே வெறுமையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாழ்க்கை சுற்றியிருக்கும் ஆட்கள் யாரையும் எனக்கு புடிக்கவேயில்லை காரணம் இவர்கள் ஒவ்வொருவரும் நான் தங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். s

  அப்படியே கீ கொடுத்தால் ஆடும் பொம்மையைப் போலவே என்னை நடத்துகிறார்கள். ஆக பெண் என்பவள் அவளுக்காக வாழ்க்கை வாழக்கூடாது பிறருக்காக பிறரின் வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொள்ளும் ஓர் உயிராக கடைசி வரை வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

   தம்பி :

  தம்பி :

  எங்கள் வீட்டில் நானும் தம்பி அம்மா அப்பா என்னை பள்ளி படிப்பு வரை தான் படிக்க வைத்தார்கள். வேண்டுமானால் தொலைநிலைக்கல்வியை படித்துக் கொள் என்று சொல்லிவிட்டார்கள். காலேஜ் போனாளே பொண்ணுங்க ஓடிப் போயிடுவாங்கன்னு என் பெற்றோரிடம் யாரோ ஓதி வைத்திருப்பார்கள் போல சரி.... விட்டுவிட்டேன்.

  தம்பியை மட்டும் நாளைக்கு நம்மள பாக்கப் போற பையன் அவன நல்லபடியா படிக்க வைக்கணும் என்று சொல்லி தேடித்தேடி நிலத்தையும் வீட்டையும் அடமானம் வைத்து அவனை படிக்க வைத்தார்கள். நம் சக்திக்கு மீறியது என்று தெரிந்துமே மகிழ்வுடன் செய்தார்கள்.

  வேலை :

  வேலை :

  முதல் தலைமுறைப் பட்டதாரி தம்பிக்கு வேலை கிடைத்தால் குடும்பமே தலைநிமிறும் என்று நம்பிக்கையுடனே நான்கு வருடங்கள் படிக்க வைத்தார்கள் எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். வெளியூரில் வேலை உறுதியானது.

  கடனை எல்லாம் அடைத்து விடலாம். இனி அரசு ஆஸ்பத்திரியில் காட்ட வேண்டாம். வீட்டுப் பத்திரத்த மொதோ கடன அடச்சி வாங்கிடணும். அப்பாவுக்கு நல்ல செருப்பும் அம்மாவுக்கு நல்ல மாத்து துணியும் வாங்கி கொடுக்கணும். வேலை உறுதியானதும் நானும் தம்பியும் பேசிக் கொண்டவை இவை.

  சமைத்து போட :

  சமைத்து போட :

  தம்பி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அங்க சாப்பாடு சரியில்ல நீ இங்க சும்மாதான இருக்க ஊர்ல ஒரு வீடு பாத்ருக்கேன் இங்க வந்து சமச்சுப் போடுக்கா என்றான். வீட்டிலும் சம்மதித்தார்கள்.

  ஊருக்கு கிளம்பி சமைத்துப் போட ஆரம்பித்தேன்.

  பார்வை :

  பார்வை :

  தம்பியின் நண்பர்கள், தம்பியின் மேனேஜர் என்று ஒவ்வொராக வீட்டிற்கு வர ஆரம்பித்தார்கள். அவர்கள் வந்தாலே தம்பி மாறுவதை நான் கவனிக்கத் தவறவில்லை எதோ நான் வீட்டு வேலைக்காரி போலவும் அவன் முதலாளி போலவும் நடத்துவான்.

  ஆங்கிலத்தில் பேசுவான், சிரித்து நக்கலடிப்பான். வந்தவர்களுக்கு ஜூஸ் போட்டு கொடுக்கச் சொல்வது அவர்கள் உட்கார்ந்திருக்கும் அறையை தேவையே இல்லாமல் கூட்டி துடைக்க சொல்வது என அவன் செயல்கள் வித்யாசமாகவே இருந்தது.

  உதவி :

  உதவி :

  திடிரென்று ஒரு நாள் எனக்கு புது டிரஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தான். அக்கா நம்ம வெளிய போல ஹோட்டல்ல போய் சாப்டலாம் என்றான். எதற்கு என்று கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை அழைத்துச் சென்று வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொள்ள சொன்னான். எனக்காக ஒரு சுடிதாரும் அம்மாவிற்காக ஒரு சேலையும் வாங்கினேன்.

  சாப்பிட ஆரம்பித்தோம். அக்கா எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் உன்னால கண்டிப்பா முடியும்கா என்றான்.

   என்னடா செய்யணும் :

  என்னடா செய்யணும் :

  வீட்டில் ஆண்களை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேச அனுமதிக்காத சூழலில் அவரே இறங்கி வந்து உன்னால் மட்டும் தான் செய்ய முடியும் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்பது எவ்வளவு பெரிய விஷயம்.

  எப்போது அதட்டலாகவும் மிரட்டலாகவுமே தான் நம்மிடம் அவர்களின் அணுகுமுறை இருக்கும் இதென்ன என்னிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டே சொல்றா உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன் என்றேன்.

  தயங்கிக் கொண்டே அன்னக்கி நம்ம வீட்டுக்கு வந்திருந்தாரே நான் கூட எங்க ஆபிஸ் எம்.டின்னு சொன்னேனே.....

  உனக்காக பண்றேன் :

  உனக்காக பண்றேன் :

  ஆமா அவருக்கென்ன?

  இல்லக்கா அவங்க வீட்டுக்கு.... தயங்கினான் நான் எழுந்து கொண்டேன் அக்கா கோச்சுக்காத அவங்க வீட்ல சமச்சுப் போட ஆல் இல்லையாம் ஒரு வேலைக்காரிய வச்சிருக்காங்க அவங்களுக்கு நம்ம சமைக்கிற மாதிரி சமைக்கத் தெர்லயாம் உங்க அக்கா வந்து சொல்லித்தருவாங்களான்னு கேட்டாரு என்று மெனு முழுங்கினான்.

  தம்பி பொய் சொல்கிறான் என்று அப்பட்டமாய் தெரிந்தது. அந்த வேலைக்கார அம்மாவ நம்ம வீட்டுக்கு வர சொல்லுடா என்றேன்.

  ஆபத்து :

  ஆபத்து :

  எதோ தவறு நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது. தம்பி யாருக்கோ கால் செய்தான். பின் என்னிடம் வந்து இன்னகி அந்த அம்மா தனியா இவ்ளோ தூரம் வரத்தெரியாதாம் அதான் அவங்க யோசிக்கிறாங்க நீ ஒரு நாள் போய்ட்டு வந்திடேன்க்கா என்றான்.

  நான் வேணா ஒவ்வொண்ணும் எப்டி செய்யணும்னு எழுதித்தரவா என்றேன்.... நீ ஏன் இவ்ளோ கேள்வி கேக்குற நான் தான சொல்றேன் ஒரு தடவ போய் சமச்சு கொடுத்துட்டு வரப்போற என்று கோபமாக கத்தினான்.

  கிழவன் :

  கிழவன் :

  தம்பியுடனே அவர்கள் வீட்டிற்கு சென்றேன். நீ உள்ள உக்காரு நான் ஒரு தம் அடிச்சுட்டு வரேன் என்று வாசலிலேயே கலண்டு கொண்டான். ஒரு நடுத்தர வயது மனிதர் கதவு திறந்தார் தம்பியின் பெயரைச் சொன்னேன் உள்ள வாங்க என்று அழைத்துப் போனார்.

  என்ன சாப்டுறீங்க தம்பி எல்லாத்தையும் சொன்னானா? எதுவும் பயப்படாதீங்க இருபதாயிரம் உங்க அக்கௌண்டுக்கு வந்துரும் என்றார். எதுக்கு என்று புரியாமல் விழிக்க உள் அறையிலிருந்து வயதான தாத்தா ஒருவர் வந்தார்.

  அறையில் அடைப்பு :

  அறையில் அடைப்பு :

  அதற்கு மேலும் அங்கு இருப்பது சரியென்று படவில்லை. சரி நான் கிளம்புறேன் அவசரமா கொஞ்ச வேலை இருக்கு என்று சொல்லி எழுந்தேன். எங்க ஓட்ற என்று இருவரும் வழியை மறித்துக் கொண்டார்கள். அறையில் அடைத்து என்னை பாலியல் சித்ரவதை செய்தார்கள். அன்றைய இரவு முழுவதும் தம்பி வரவேயில்லை.

  எங்கே செல்வேன் :

  எங்கே செல்வேன் :

  என்னை உள்ளே அடைத்து வைத்துவிட்டு இவர்கள் இருவரும் வெளியே சென்று வந்தார்கள். இரண்டு நாட்களாகியும் தம்பி என்னைத் தேடி வரவேயில்லை தம்பியா இது ஒரு வேலை இது தம்பிக்கு தெரியாமல் நடந்திருக்குமோ என்று பல சிந்தனைகள் ஓடியது. ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தேன். கையில் காசில்லை போனில்லை எங்கே யாரிடம் பேசி நான் இப்படி நடுத்தெருவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வது எனத் தெரியவில்லை.

  கால் போன போக்கில் நடந்து அலைந்தேன்.

  போன் :

  போன் :

  சாலையின் ஓரத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். ஒருவர் வந்து விசாரித்தார் யாரென்றே தெரியவில்லை போன் வேணும் என்றேன் போன் கொடுத்தார் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததை விவரித்தேன்.

  முதலில் நிஜமாவாடி என்று பதட்டத்துடன் கேட்டவர் உண்மையச் சொல்லு நீயா எங்கேயோ போய்ட்டு அவன் மேல பழியப் போடுறியா என்று கேட்டார் போனை கட் செய்துவிட்டேன்.

  தோழியின் வீட்டில் :

  தோழியின் வீட்டில் :

  இக்கட்டான ஒரு நிலைமையில் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொன்ன போதும் கூட உன் மீது தவறு என்று சொன்ன குடும்பத்தினரிடம் என்னவென்று சொல்வது பதில் சொல்லாமல் அழுதேன் அவர் நிலைமையை புரிந்து கொண்டார் என் ஃபிரண்டு வீடு இங்க தான் இருக்கு நீங்க அங்க தங்குறீங்களா இந்த நைட் எங்க போவீங்க என்று கேட்டான்

  பதில் சொல்லாமல் முறைத்தேன். ஹோ சாரி சாரி என்று சொன்னவன் யாருக்கோ போன் செய்து அழைத்தான். ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்தாள். இவங்க என்னோட பிரண்டு தான் நீங்க இவங்களோட போய் இன்னக்கி தங்கிக்கோங்க நாளைக்கு காலைல நான் வரேன் பயப்படாதீங்க என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Girl Cheated by Her Brother

  Girl Cheated by Her Brother
  Story first published: Tuesday, April 17, 2018, 15:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more