வருங்கால மாமனாருக்கு அந்தரங்க படங்களை அனுப்பிய எக்ஸ் காதலன் - My Story #184

Posted By: Staff
Subscribe to Boldsky

நடக்கவிருந்த திருமணம் பாதியில் நின்றால், அதன் தாக்கம் எப்படியானதாக இருக்கும். அதிலும், முக்கியமாக அது அந்த பெண்ணையும், மணப்பெண் சார்ந்த குடும்பத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை முழுமையாக அறிந்தவள் நான்.

இதில் முக்கியமாக நான் கூற வேண்டிய விஷயம்... திருமணம் நிற்க காரணமே நான் தான். ஆனால், நான் இந்த திருமணத்தை நிறுத்தவில்லை. எனது பழைய உறவு, எனது முன்னாள் காதலன்.

இதில், கடவுளே ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய் என்று திட்டவோ, அழவோ நான் தயாராக இல்லை. முழுக்க, முழுக்க நானே காரணம் என்று தெரிந்தும், கடவுளை நொந்துக் கொண்டு என்ன பயன் சொல்லுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயம் உடைத்தேன்...

இதயம் உடைத்தேன்...

வெறும் ஒரு மாத காலம் தான் எங்கள் காதல் இணைந்திருந்தது. அந்த ஒரு மாத காலமும் அவன் என்னை மகிழ்வித்தான். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கள் காதல் உடைந்து போனது. உண்மையில் அவன் என்னை பழிக்குப்பழி வாங்க தான் இந்த காரியத்தை செய்திருக்கிறான்.

என்னை திருமணம் செய்துக் கொள்ள காத்திருந்தவர் மீதும் குற்றம் கூற இயலாது. அவர் என்னை அதிகம் அறிந்தது இல்லை. அப்படி இருக்க ஒரு புகைப்படத்தைக் கண்டு அவர் என்னை மதிப்பிட்டதில் தவறு ஏதும் இல்லை. அவரது செயல் எனக்கு தவறாகவும் படவில்லை.

என் காதல்!

என் காதல்!

நான் குருட்டுத்தனமாக காதலித்தவள். மிக எளிதாக ஒருவருடன் நெருக்கமாக பழகக் கூடியவள். நான் அதிகம் எதிர்பார்ப்பேன். என் காதலுக்கு எல்லையும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை.

இப்படியான மனநிலையில் நான் என்னை காதலித்த ஒருவரை ஏற்றது எனது தவறு தான். ஆனால், அவனது காதலோ, அவனோ எனது எதிர் காலத்திற்கு நிச்சயம் ஒத்துப் போகமாட்டார்கள். இதை நான் ஆரம்பத்திலேயே புரிந்துக் கொண்டேன். எங்களுக்குள் முளைத்தது காதல் அல்ல, வெறும் ஈர்ப்பு மட்டுமே என்று அறிந்ததால். முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டேன். ஆனால், என்னை பழிவாங்காமல் அவனால் உறங்க முடியாவில்லை போல.

படங்கள்!

படங்கள்!

அந்த ஒரு மாத காலத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எனது வருங்கால மாமனாருக்கு அனுப்பினான்.

அந்த நேரத்தில் என்னை யாருமே நம்ப தயாராக இல்லை. என் காதல் வெறும் ஒரு மாத காலத்தில் காலாவதியான ஒன்று. நான் இப்படி ஒருவனை காதலித்தேன் என்று என்னை சேர்ந்த பலருக்கும் தெரியாது. என் குடும்பத்தாருக்கு சுத்தமாக தெரியாது. இப்படி ஒரு சம்பவம் எனது திருமணத்தை நிறுத்தும் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை.

மாற்ற இயலவில்லை...

மாற்ற இயலவில்லை...

என் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. பேசி எதுவும் பயனில்லை என்று அறிந்ததால். நானும், யாருடைய மனதை மாற்றவோ, என்னை நம்ப கூறி கெஞ்சவோ தயாராக இல்லை.

நமது சமூகத்தில் நிச்சயித்த திருமணம் என்பது எழுதி வைத்த பிரோகிராம் போல. அது இப்படி துவங்கி, இந்த வழியில், இப்படியாக தான் முடிய வேண்டும் ஏன்டா கோட்பாடுகள் இருக்கின்றன. அதில் சிறு பிழை ஏற்பட்டாலும் கால் ஆப் செய்துவிடுவார்கள். அப்படியாக தான் எனது திருமணமும் அந்த புகைப்படங்கள் காரணமாக கால் ஆப் ஆனது.

நம்பிக்கை...

நம்பிக்கை...

நாங்கள் இருவரும் தொடர்ந்து காதல் என்ற உறவில் இணைந்திருந்தால் நிச்சயம் என்ன தான் விட்டுக்கொடுத்து சென்றிருந்தாலும், ஓரிரு வருடத்தில் பிரிந்திருப்போம். அத்தனை காலம் ஏன் நடிக்க வேண்டும் என்றே உடனே என் மனதில் பட்டதை கூறி பிரிந்தேன்.

ஆயினும், அவன் மீது நான் பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன். அவன் எனது நம்பிக்கையை மட்டும் கொள்ளவில்லை, என் குடும்பத்தின் முன்பு என்னை கூனிக்குறுகி போக செய்தான்.

கோபம், பழிக்குப்பழி என்ற எண்ணம் பிறக்கும் போதும், தங்கள் மதிப்பை அவரவரே அழித்துக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம். மற்றவர் மனதை மட்டுமின்றி, அவர்கள் மனதையும் அவர்களுக்கே தெரியாமல் கொன்று விடுகிறார்கள்.

கர்மா...

கர்மா...

கர்மாவை திட்ட வார்த்தைகள் தெரியாமல் தடுமாறுகிறேன். அது நம்மை சுற்றிக் கொண்டே இருப்பதை வெறுக்கிறேன். எல்லாமே ஒரு வட்டம் தான் போல. அதை எப்படி நாம் தலை சுற்றாமல் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்க்கை. சில சமயம் அனைவரும் கூறுவது போல வாழ்க்கை என்பது கடவுள் எழுதி வைத்த சாப்ட்வேர் போல ஆகிவிடுகிறது. எதையும் மாற்ற முடியாது. அதற்கான அட்மின் பாஸ்வேர்ட் கடவுளிடம் மட்டுமே இருக்கிறது.

டிவி!

டிவி!

இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் டிவி சீரியல்களில் மட்டுமே நடக்கும் என்று தான் எண்ணினேன். என் வாழ்வில் அது நடந்த போதுதான், இவை எல்லாம் உண்மையாக சமூகத்திலும் நடக்கும் என்பதை முதல் முறையாக அனுபவித்தேன். அந்த புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்றால் பெரிய தொகை வேண்டும் என்று கூறினான். என்னை மிரட்டினான், பிளாக் மெயில் செய்தான்.

ஒரே வாரம்!

ஒரே வாரம்!

எனக்கு நிச்சயம் நடக்கவிருந்த நாள் அன்று... இரவு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தேன். மறுநாள் நிச்சயம் நடக்க வேண்டியது... அன்று காலையே நிறுத்தப்பட்டது. அப்போது தான் அவன் எனது வருங்கால மாமனாருக்கு நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தான்.

அன்று இரவு கொஞ்சம் மோசமாக தான் இருந்தது. ஆனால், எப்படியோ கண்களை மூடி உறங்கிவிட்டேன். ஆனால், அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு நாளும், இரவும் தேவையற்ற விஷயங்களை எண்ணி, எண்ணி வருந்த செய்தது.

கனவுகள்...

கனவுகள்...

நான் கற்பனையாக எனது பியான்ஸியுடன் பேச துவங்கினேன். அவன் என்னை பற்றி என்ன நினைத்திருப்பான். திருமணத்தில் இணைய வேண்டிய நாங்கள் ஏன் பிரிந்தோம். ஒருவேளை அவன் வருங்கால மனைவி ஒரு கிளீன் ஸ்லேட் போல இருக்க வேண்டும் என்று அவன் கருதி இருக்கலாம். அதில், அவன் மட்டுமே எழுதி முடிக்க வேண்டும் என்று கருதி இருக்கலாம். அவனும் என்னைப் போலவே பல கனவுகள் கண்டிருக்கலாம். ஆனால், அவை அனைத்துமே கசக்கி எறியப்பட்டன.

ஏமாற்றவில்லையே...

ஏமாற்றவில்லையே...

நான் அவனை ஏமாற்றவில்லை. ஏன் நான் எனது முன்னாள் காதலனையும் கூட ஏமாற்றவில்லை. ஒரு பிராடக்ட் துவக்கத்திலேயே தவறாக தான் முடியும் என்ற பட்சத்தில் அதை கடைசி கட்டம் வரை எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் முட்டாள் தனமானது.

என் பியான்ஸியுடன் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், அது முடியாதது என்று அறிவேன். அவனிடம் பெரிதாக எந்த ஒரு தாக்கமும் இல்லாத அந்த ஒரு மாத காதலை பற்றி முன்னவே கூற வேண்டுமா? அது அத்தனை முக்கியமானதா என்று அப்போது எனக்கு அகப்படவில்லை.

ஒரே ஒரு அசை...

ஒரே ஒரு அசை...

ஒரே ஒரு முறை எனது பியான்ஸியிடம் பேசி... என் முந்தைய உறவில் நடந்தது என்ன என்று தெளிவாக கூறிவிட வேண்டும். அப்போது தான் மனம் நிம்மதியாக இருக்கும். அவன் என்னை பற்றி என்ன கருதி வருகிறான் என்ற எண்ணம் என் உறக்கத்தை திண்கின்றன.

எனக்கானவன் என்று யாரும் புதியதாக பிறந்திட போவதில்லை. ஆனால், இந்த பிறப்பில் எனக்கானவன் சரியானவனாக இருப்பானா என்று தெரியவில்லை. இன்னும், மீண்டும்,மீண்டும் நான் பழிவாங்கப்படுவேனா என்று தெரியவில்லை.

புரிதல் வராதா?

புரிதல் வராதா?

ஆள் வளரும் அளவிற்கு யாருக்கும் அறிவு வளர்வதில்லை என்பது உண்மை தான். ஒருவரது குணாதிசயங்கள், இன்னொருவர் மீது எப்படியான தாக்கத்தை ஒரு உறவில் ஏற்படுத்துகிறது. அதன்பால் அவர்கள் உறவு எத்தகைய தாக்கங்களுக்கு ஆளாகும் என்பதை ஆராய முடியாத ஒருவனுக்கு ஆறறிவு இருந்து என்ன பயன்?

காதல் என்பது அவசரத்தில் எடுக்கும் முடிவாக இருந்துவிட்டால். அவசியமற்ற கவலைகளை நீங்கள் வருங்காலத்தில் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகலாம் என்பதற்கான சாட்சியும், உதாரணமும் எனது வாழ்க்கை பாடம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ex-Lover Sent Our Private Images To My Future Father in Law - My Story!

Ex-Lover Sent Our Private Images To My Future Father in Law - My Story!
Story first published: Friday, February 23, 2018, 17:45 [IST]