For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்கள் காதல் பூவும் அல்ல, அவன் உறிஞ்சியது தேனும் அல்ல... My Story #207

By Staff
|

அவன முதல் தடவையா பார்த்தப்போ எனக்கு 19 வயசு இருக்கும். என் ஃபிரெண்ட்டுக்கு தெரிஞ்ச பையன். இளம் வயசு, அதிகமான நம்பிக்கைன்னு கொஞ்சம் துடுக்கா இருந்தேன். ஆனா, நான் கடந்து வந்த பாதையோட தடத்த பார்த்தா நீங்க நிச்சயம் எனக்குள்ள நம்பிக்கை இருந்துச்சுன்னு சொல்ல மாட்டீங்க. அப்பாவி, முட்டாள்ன்னு தான் சொல்வீங்க.

அப்போ அவனுக்கு 20 வயசு என்னைவிட ஒரு வயசு தான் அதிகம். நல்ல கலர், உயரம், அழகா இருப்பான். என்னோட முதல் காதல் அது. முதல் முறையா பார்த்தப்பவே, அவன் எனக்கானவன்ன்னு ஒரு எண்ணம் எனக்குள்ள வந்திடுச்சு...

Cover Image Source: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேச்சு!

பேச்சு!

ரொம்ப மென்மையா பேசுவான். கிட்டத்தட்ட வெண்ணையா பேசுறான்யான்னு எங்க ஊர் சொல்வழக்கு ஒன்னு இருக்கு. அவன் பேச்சு அப்படி தான் இருக்கும். எனக்கும் மட்டுமில்ல, அவனுக்குமே கூட என் மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சு. ரெண்டு பேருமே பழகுன கொஞ்ச நாள்லயே பிரபோஸ் பண்ணிக்கிட்டோம்.

காலேஜ் முடிஞ்சு...

காலேஜ் முடிஞ்சு...

நாங்க ரெண்டு பேருமே காலேஜ் முடிஞ்ச பின்ன சாயங்காலம் சந்திச்சுக்குவோம். நைட் மணிக்கணக்கா பேசுவோம். ரெண்டு பேருமே நாங்க அவங்களுக்கான மேட் ஃபார் ஈச் அதர் பார்ட்னர்ன்னு நெனச்சோம்.

அப்பா திட்டு..

அப்பா திட்டு..

ரொம்ப சீக்கிரமா எங்களுக்குள்ள காதல் வந்த மாதிரியே, வீட்டுலயும் ரொம்ப சீக்கிரமா எங்க காதல் தெரிஞ்சிடுச்சு. கிட்டத்தட்ட நான் ஏதோ பெரிய பாவம் பண்ண மாதிரி என் அப்பா என்ன திட்டுனாரு. அவரோட கண்கள்ல நிஜமாவே ஒரு நெருப்பு கனல் தென்பட்டுச்சு. அதுக்கு முன்ன என் அப்பாவ நான் அவளோ கோபப்பட்டு பார்த்ததே இல்ல.

பொறுமையா பேசினான்...

பொறுமையா பேசினான்...

அவனோட நம்பர் கேட்டாரு.. கொடுத்தேன்... கால் அவன் அட்டன்ட் பண்ணதுல இருந்து கட் பண்ற வரைக்கும் எவ்வளோ மோசமா பேச முடியுமோ, அவ்வளோ மோசமா திட்டுனாரு. அதுக்கு அடுத்த நாளே அவன் நேர்ல வீட்டுக்கு வந்து என் அப்பாவ மீட் பண்ணான். நீங்க யாரு, வீட்டுல என்ன பண்றாங்க, எதிர்காலத்துல என்ன பண்ணுவன்னு நிறையா கேள்வி கேட்டாரு...

மதிக்கவில்லை..

மதிக்கவில்லை..

அவன் என்ன பதில் சொன்னாலும், அதுக்கு ஒரு மறுகேள்வி கேட்டு அவனை திட்டினார். ஒரு கட்டத்தில் உங்க ரெண்டு பேருக்கும் நடுவ இருக்கிறது காதலே இல்லன்னு சொல்லி திட்டினாரு. எனக்கு கோபம் வந்திடுச்சு. அவன கிளம்பி போக சொல்லிட்டு. நான் கதவ இழுத்து சாத்திட்டு ரூம் குள்ள போய் அழ ஆரம்பிச்சுட்டேன்.

தொடர்ந்தது...

தொடர்ந்தது...

அப்பா சம்மதிக்காட்டி என்னன்னு... நாங்க ரெண்டு பெரும் தொடர்ந்து லவ் பண்ண ஆரோம்பிச்சோம். ஆனால், எங்கள் காதல் பழைய மாதிரி இல்ல. அவன் அவ்வளோ பண்பா தொடர்ந்து என் கூட பழகுல. அவன் நடத்தை, குணத்துல கொஞ்சம், கொஞ்சமா மாற்றங்கள் தென்பட்டுச்சு.

உக்கிரம்!

உக்கிரம்!

என்ன திட்ட ஆரம்பிச்சான்.. எனக்கு கொஞ்சம் கூட மதிப்போ, மரியாதையோ கொடுக்கல. என்ன அவ்வளோ லவ் பண்ண ஒருத்தனா இப்போ இப்படி பேசுறான்னு எனக்குள்ள சந்தேகம். அவன் கோபத்துல இருக்கான்னு நெனச்சு.. நான் அத பெரிசா எடுத்துக்கல. ஆனா, அவனோட கோபம் கொஞ்ச நாள்ல உக்கிரமா மாற ஆரம்பிச்சது.

அவமானம்!

அவமானம்!

என்னை எப்படி எல்லாம் அவமானப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் அவமானப்படுத்தினான். என்ன மத்த பொண்ணுகளோட, அவன் ஆபீஸ்ல வர்க் பண்ற பொண்ணுங்க கூட ஒப்பிட்டு குறைக் கூற துவங்கினான். முக்கியமாக உடல் ரீதியாவும், அழகு ரீதியாவும். என்னை ஒரு புழுப்போல நடத்தினான்.

முதல் காதல்...

முதல் காதல்...

என் அப்பா அவனை திட்டி அவமானப்படுத்திய காரணத்தால், என்னை திட்டுகிறான் என்று கருதினேன். கொஞ்ச நாட்களில் மாறிவிடுவான் என்று கருதினேன். ஆனால், மாதங்கள் கடந்தும் அவன் மாறவில்லை. முதல் காதலை இழக்க நானும் தயாராக இல்லை. என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தேன். எதவும் பலனளிக்கவில்லை.

பிரிவுகள்...

பிரிவுகள்...

ஒருமுறை என் நண்பர்களிடம் ஏதோ உதவி தேடி சென்றான். அவர்கள் உதவவில்லை என்பதற்காக அநாகரிகமான முறையில் திட்டி சண்டையிட்டு வந்தான். அதன் பிறகு அவர்கள் முகத்தில் முழிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

என் பெற்றோரை பிடிக்கவில்லை என்றான். அவர்களுடன் பேசுவதை முற்றிலும் குறைத்துக் கொண்டேன். என் நண்பர்களை பிடிக்கவில்லை என்றான் அவர்களுடனும் பேசுவதில்லை. இப்படியாக அவனுக்காக என்னை நேசிப்பவர்கள் அனைவர்களிடம் இருந்து விலகினேன். எல்லாம் நான் அவன் மீது வைத்திருந்த காதலுக்காக.

பளார்!

பளார்!

ஒருமுறை... நான் செய்யாத குற்றத்திற்கு... அவனது நண்பர்கள் முன்னிலையில் வைத்து என்னை அடித்து கொடுமைப் படுத்தினான். அந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எத்தனை நாட்கள் பொறுமையாக இருக்க முடியும். எத்தனை கொடுமைகளை தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

8 மாதம்..

8 மாதம்..

இத்தனையும் நடந்தது வெறும் எட்டு மாதத்தில். இந்த எட்டு மாத காதல் உறவில் நான் கற்றுக் கொண்ட பாடமானது வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒன்று.

அனைத்திற்கும் ஒரு குட்பை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.

வீட்டுக்குள் வந்து என் அறைக்குள் சென்று வெளிவராமல் அழுதுக் கொண்டே இருந்தேன். கண்ணாடியை காணும் அளவிற்கு கூட துணிவின்றி இருந்தேன்.

அம்மா!

அம்மா!

அம்மா வந்து கதவை திற என்று கத்திக் கொண்டே இருந்தார். இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடவில்லை. ஒரு கட்டத்தில் கண்ணில் நீர் வரவில்லை... ஆனால் குரல்வளையம் மட்டும் விம்மிக் கொண்டே இருந்தது.

கதவை திறந்து வெளியே வந்தேன். அம்மா, அண்ணனிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதேன். இருவரும் ஆறுதல் கூறினார்கள். முப்பது நிமிடங்களுக்கும் மேல் எனக்கு தைரியம் அளித்து பேசினார்கள்.

மீண்டும்...

மீண்டும்...

மிக மெதுவாக பயணித்த அந்த எட்டு மாதத்திற்கு பிறகு, காலம் கொஞ்சம் வேகம் பிடித்து ஓட ஆரம்பித்தது. மூன்று ஆண்டுகள் கழிந்தன...

மீண்டும் எனது வாழ்வில் எட்டு மாதங்கள் என்னுடன் பயணித்த அவனை சந்தித்தேன். அப்போது தான் என் வாழ்வின் இரண்டாவது காதலையும் சந்தித்தேன்.

என் எக்ஸ் இடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. இம்முறை நான் கண்ட அந்த இரண்டாவது காதலுக்கு உரிய நபர் பெற்றோரால் தேர்வு செயப்பட்ட ஆண். நிச்சயம் செய்வதற்கு முன் நான் பார்த்து பேச வேண்டும் என்றேன். ஆகையால், வெளியிடத்தில் வைத்து பேசலாம் என்று நான் மட்டுமே தனியே சென்று சந்தித்தேன்.

அனைவருக்கும் விருப்பம்...

அனைவருக்கும் விருப்பம்...

நான் பேசியப் பிறகே, அவர் வீட்டில் வந்து பேசினார் அப்பாவுக்கும் பிடித்துப் போனது. இரு குடும்பத்தாரும் ஒன்றாக பேசி கல்யாணம் முடிவு செய்தனர். ஒரே மாதத்தில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

எங்களுக்குள்ளும் வாரம் ஒருமுறை சண்டை வரும். பிரிந்தே விடுவோம் என்ற அளவுக்கு கூட சண்டை வந்துள்ளது ஆனால், நாங்கள் பிரிந்து சென்றதில்லை. ஏனெனில், அதுதான் உண்மையான காதல்.

காத்திருங்கள்!

காத்திருங்கள்!

உங்களுக்கான உண்மையான காதல் நிச்சயம் உங்களை தேடி வரும். அது உங்களை எதிர் பார்த்து காத்திருக்கும்.

காதல் என்ற போர்வைக்குள் மிருகங்கள் சிலவனவும் உலாவிக் கொண்டிருக்கின்றன. அதன் பிடியில் சிக்கி மோசமான தாக்கத்தை நீங்களாக தேடிக் கொள்ள வேண்டாம்.

உங்களை ஏற்காத காதலில், விடாப்பிடியாக இருக்க விரும்புவதை விட பெரிய முட்டாள்த்தனம் வேறேதும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do Not Accept the Abuse Blindly, Because You Are in a Love? - MyStory!

Do Not Accept the Abuse Blindly, Because You Are in a Love? - MyStory!