தன் காதலனை திருமணம் செய்து கொள்ள ராஜ போக வாழ்க்கையை துறந்த ஜப்பான் இளவரசி!

Posted By:
Subscribe to Boldsky

இது போன்ற நிகழ்வுகளை நாம் அதிகம் திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். நாம் இப்படி ஒரு பெண் ஏழை மீத காதல் வயப்பட்டு தனது சொத்துக்களை வதுறந்த கதையை சரத் - மீனா நடித்த நாடோடி மன்னன் உட்பட பலவன கண்டிருப்போம்.

ஆனால், ஜப்பானின் இளவரசி தன்னுடன் படித்த ஏழை காதலனை திருமணம் செய்துக் கொள்ள தனது இராஜ்ஜியம் மற்றும் வசதிகளை துறந்து வெளியேறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜப்பான் பேரரசு!

ஜப்பான் பேரரசு!

ஜப்பான் பேரரசரின் மூத்த பேத்தி தனது அரசு வசதிகளை தனது காதல் வாழ்க்கைக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.

இளவரசி மாகோ!

இளவரசி மாகோ!

இளவரசி மாகோ தனது காதலன் கேய் கொமுரோ என்பவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார். இவர், கடலில் நீந்த, வானத்தில் பறக்க பயிற்சி அளிப்பவர்.

இவருக்கு வயலின் வாசிப்பது, சமைப்பது போன்றவற்றில் ஆர்வம் அதிகம் என ஜப்பான் ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

Image Source

உடன் படித்தவர்!

உடன் படித்தவர்!

கேய் கொமுரோ டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்டியன் பல்கலைகழகத்தில் மாகோ உடன் படித்தவர் என தெரியவருகிறது. 25 வயது நிரம்பிய இவர்கள் இருவரும் 5 வருடங்களுக்கு முன்னர் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Image Source

பச்சைக்கொடி!

பச்சைக்கொடி!

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஒரு சாரார் கூறினும். மாகோ கொமுரோவை தனது பெற்றோரிடம் அறிமுகம் செய்து விட்டார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், அவர்கள் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது.

Image Source

மறுப்பு!

மறுப்பு!

பேரரசின் செய்தி ஏஜன்சி இதை குறித்து பேச மறுத்தாலும். இவர்களுக்கு மத்தியில் நடந்த நிச்சயம் இந்த இளம் ஜோடி கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போகிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது.

Image Source

சாமானியராக மாறப்போகும் மாகோ!

சாமானியராக மாறப்போகும் மாகோ!

கொமுரோவை திருமணம் செய்துக் கொள்ள போவதால், மாகோ தனது அரசு அந்தஸ்தை இழக்கவுள்ளார். இதன் பிறகு இவர் எப்படி வாழவுள்ளார், என்ன செய்ய போகிறார் என்பவை தான் பெரிய கேள்வியாக ஜப்பான் ஊடகங்கள் முன் வைக்கின்றன.

Image Source

காதலுக்கு கண்ணில்லை...

காதலுக்கு கண்ணில்லை...

காதலுக்கு கண்ணில்லை என்பது, கண்கள் கொண்டு தான் கவர்ச்சி, செல்வங்கள், வேறு ஈர்ப்புகள் கொண்டு இணையாமல், மனம் மட்டுமே பார்த்து இணைதல் தான் மெய் காதல் என கூறுவார். அதை தனது காதல் மற்றும் தியாகத்தின் மூலம் இந்த உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளார் மாகோ.

மக்கள் வரவேற்ப்பு!

மக்கள் வரவேற்ப்பு!

மாகோவின் இந்த காதல் முடிவை ஜப்பான் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். மேலும், ஜப்பான் மக்கள் மத்தியில் மாகோவின் மதிப்பு இதன் மூலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Story of Princess Who Let Go Off Her Throne to Marry a Commoner!

The Story of Princess Who Let Go Off Her Throne to Marry a Commoner!
Story first published: Saturday, May 20, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter