என் காதலி இழக்க கூடாததை இழக்க நானே காரணமானேன்! - எங்கடி போன? My Story #64

Written By:
Subscribe to Boldsky

நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். ஒரளவுக்கு நல்ல மதிப்பெண்களை தான் பெற்றிருந்தேன்.. அன்று தான் நான் முதல் முறையாக ஒரு மிகப்பெரிய கம்பெனிக்கு இண்டர்வியூ சென்றேன்..! எனக்கு கடவுள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை.. என் அம்மா தான் அடம்பிடித்து கோவிலுக்கு போய்ட்டு இண்டர்வியூ போ என்று அடம்பிடித்தார்.. அம்மா சொல்லை தட்டவா முடியும்? எனக்காக இல்லாட்டியும், உனக்காக போறேன் அம்மா என்று சொல்லிவிட்டு என் அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டேன்..!

அன்று தான் நான் அவளை முதல் முறையாக கோவிலில் சந்தித்தேன்.. அழகான எலுமிச்சை நிற முகம்... கண்மை தீட்டப்பட்ட கண்கள்.. லிப்ஸ்டிக்கிற்கே நிறம் தருவது போல அழகிய பிங்க் நிற உதடுகள்.. இரண்டு புருவங்களின் மத்தியில் முழுநிலவாய் தெரிந்த பொட்டு.. அதன் மேல் சிறிய குங்குமம்.. குழிவிழுவது எப்போதாவது தான் தெரியும் என்பது போன்ற கன்னங்கள்... நீண்ட நெடுங்கூந்தல், அந்த கூந்தலை அழங்கரித்துக் கொண்டிருந்த ரோஜாவும், மல்லிகையும்... தாமரைப்பூவை போன்ற பொற்பாதங்கள்... அந்த பொற்பாதங்களில் சினுங்கிய வெள்ளி கொழுசு.. கால்கள் வரையில் தவழ்ந்த பச்சை நிற பாவாடை தாவணி.. அளவான சிரிப்பு எப்போதுமே முகத்தில் தவழந்து கொண்டிருந்தது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெய்சிலிர்த்தேன்..!

மெய்சிலிர்த்தேன்..!

இதுவரை எந்த ஒரு பெண்னையும் இந்த அளவுக்கு இரசித்தது இல்லை நான்.. முதல்முறையாக அவளை தான் இரசித்தேன்.. அவளை கண்டது என்னவோ சில நிமிடங்கள் தான் என்றாலும், பெண் என்றால் இத்தனை அழகா என்று என்னை பெருமூச்சுவிட வைத்து விட்டாள் அந்த தேவதை... அவள் நடந்தால் அந்த பூமிக்கு கூட வலிக்காது.. அவ்வளவு நலினம் அவளிடத்தில்....! தெய்வத்தை தரிசிப்பதையும் விட்டுவிட்டு அவளை மெய்மறந்து தரித்துக் கொண்டிருந்தேன்.. எதிரிலேயே நின்று கொண்டிருந்த என்னை அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை... பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது..!

சின்னப்பிள்ளை அவள்

சின்னப்பிள்ளை அவள்

அவள் அந்த கோவிலின் மணியை அடித்ததும் தான் நான் சுயநினைவிற்கே வந்தேன்.. இது என்னவோ படம் போல தெரியலாம்.. ஆனால் இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை.. அவள் அத்தனை அழகு..! அவளது குணமோ பேரழகு..! இப்படி ஒரு பெண் தான் என் தாய்க்கு மருமகளாய் வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்...! ஒரு சின்னக்குழந்தையின் கன்னம் கிள்ளி அவள் மகிழ்ந்தாள்...! சின்னச்சின்ன குறும்புத்தனங்களும் அவளிடம் இருந்து வெளிப்பட்டது..!

ஆசை தான்...

ஆசை தான்...

அவள் பின்னாலேயே செல்ல எனக்கு ஆசையாக தான் இருந்தது.. ஆனால் எனக்கு நேரமானதால், பிரியா விடை பெற்று சென்றேன்..! ஆனால் நான் பைக்கில் செல்லும் வழி எல்லாம் அவளது நினைவாகவே தான் இருந்தது.. மனமோ உற்சாக கடலில் நீந்திக் கொண்டிருந்தது...! என்னவோ தெரியவில்லை அவளை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை... மனது முழுவதும் அவளது முகம் தான்...!

ஆச்சரியம்

ஆச்சரியம்

அலுவகத்தை அடைந்தேன்.. உற்சாகமாக காத்திருந்தேன் இண்டர்வியூவிற்காக, அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை என்றாலும், எப்படியோ திக்கி திணறி எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன்.. ஒருசில கேள்விகளுக்கு அவர்கள் அசந்து போகும் அளவிற்கு பதிலளித்து விட்டேன்..! எனக்கு வேலை கிடைக்கும் என்றும், கிடைக்காது என்றும் மாறி மாறி தோன்றியது...! என்ன நடந்தாலும் நன்மைக்கே என்று நினைத்து வெளியில் வந்தேன்..! என்ன ஒரு ஆச்சரியம்...!!! அழகான வெள்ளை நிற சுடிதாரில் அவள் பரபரப்பாக அமர்ந்து புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தவள், தீடிரென என்னை பார்த்ததும் முகத்தை சட்டென்று திருப்பிக் கொண்டேன்!

என்னுடன் பேசினாள்

என்னுடன் பேசினாள்

ஹலோ சார்... என்ன கேள்வி கேட்டாங்க, இண்டர்வியூ எப்படி இருந்தது என கொஞ்சம் சொல்லமுடியுமா என்று கேட்டாள்.. அவளது பேச்சில் பதட்டமும் பயமும் தெரிந்ததால், அவளை அமைதிப்படுத்துவதற்காக, ரொம்ப ஈசி.. நீங்க இவ்வளவு பதட்டப்பட தேவையே இல்லைங்க.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. ரொம்ப பேசிக்கா ரெண்டு கேள்வி தான் கேட்டாங்க.. வேலை கன்பார்ம் தான்.. நீங்க முதல்ல தண்ணி குடிச்சு ரிலாக்ஸ் ஆகுங்க என்றேன்.. அப்போது தான் அவளது முகத்தில் வேலை கண்டிப்பா கிடைத்து விடும் என்ற ஒரு நம்பிக்கையே வந்தது.. என்னுடன் ரிலாக்ஸ் ஆக கொஞ்ச நேரம் குழந்தையை போல பேசிக் கொண்டிருந்தாள்.. நான் குறுஞ்சிரிப்புடன் அவளை இரசிப்பது தெரியாமல் இரசித்துக் கொண்டிருந்தேன்...!

கோபம்

கோபம்

அப்போது தான் திடிரென அவளை உள்ளே அழைத்தார்கள்.. அவளும் சந்தோஷமாக சென்றாள்.. நான் அங்கேயே ரிசல்ட்டிற்காக காத்திருந்தேன்..! இங்கே இருவருக்கும் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...! அவள் சற்று நேரத்தில் உள்ளே இருந்தே கோபமாக என்னை நோக்கி வந்தாள். ஏன் என்னை ஏமாத்துனீங்க என்று சீறினாள்.. நான் என்ன செய்தேன் என்று கேட்டேன்.. உள்ளே எவ்வளவு கஷ்டமாக கேள்வி கேட்டார்கள் தெரியுமா? நீங்க ஏன் ஒன்னுமே இல்ல இசியா தான் இருக்குனு பொய் சொன்னீங்க என்று கேட்டாள்..

வேலை கிடைத்தது

வேலை கிடைத்தது

நீங்க பதட்டமா இருந்தீங்க.. அதே பதட்டத்தோட போனா தெரிஞ்சது கூட மறந்து போயிடும்.. அதனால தான் அப்படி சொன்னேன்.. சரி.. ஒகே சாரிங்க... என்ன தான் நடந்துச்சு..? எப்படி பண்ணுனீங்க என்று கேட்டேன்.. ம்ம்ம்ம்.. அது எல்லாம் நல்லா தான் பன்னுன.. வேலையும் கிடைச்சுருச்சு என்று சொன்னாள்... வாவ்... வாழ்த்துக்கள் என்றேன்.. தேங்ஸ் என்றாள்.. நல்லபடியாக எனக்கும் அந்த கம்பனியில் வேலை கிடைத்து விட்டது.. நாங்கள் இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்க தொடங்கினோம்...!

அலுவலகம்

அலுவலகம்

பக்கத்து பக்கத்து இருக்கைகளும் கிடைத்தன.. எனக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் நான் அவளிடம் கேட்பேன்.. அவளுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அவள் என்னிடம் கேட்பாள்.. அவளை முதல் முதலில் பார்த்த போது அவளை எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் கூட, அது போன்ற எண்ணங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவளிடம் பேசி, அவளது நட்பை இழக்க எனக்கு மனம் வரவில்லை... எனவே என் மனம் அவள் என்னுடன் பேச ஆரம்பித்த நொடி முதலே மாறிவிட்டது...!

உற்சாகம்

உற்சாகம்

நாங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தோம்... எனக்கு வேலை கிடைத்தத்தில் என் அம்மாவிற்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது.. என் மகன் குடும்ப பொருப்பை தன் கையில் எடுக்க ஆரம்பித்து விட்டான் என்று என் அம்மா உற்சாகத்தில் இருந்தார்கள். என் அப்பாவும் என் மீது மரியாதை வைக்க தொடங்கிவிட்டார். நான் எங்களது வீட்டில் ஒரே மகன்.. வீடு, அலுவலகம் இரண்டுமே எனக்கு மரியாதை நிறைந்த, மனதிற்கு பிடித்த இடங்களாக மாறின... எனது சம்பள நாளும் வந்தது...!

முதல் பரிசு!

முதல் பரிசு!

அன்று அவள் எனக்கு ஏதோ ஒரு பரிசை கொண்டு வந்து கொடுத்தாள். இது யாருக்கு என்று கேட்டேன்! உனக்கு தான் என்றாள்...! எனக்கா?

எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் எல்லாம் இல்லையே?

என்னோட முதல் சம்பளத்துல வாங்குன கிப்ட்.. உனக்காக..! பிரித்து பார் என்றாள்..

நானும் பிரித்து பார்த்தேன்...! அதில் தங்க மோதிரம் இருந்தது..? எதுக்கு இவ்வளவு காஸ்ட்லி கிப்ட் எல்லாம்? உங்க அம்மா, அப்பாக்கு எதாவது வாங்கி கொடுத்து இருக்கலாமே என்றேன்..! எனக்கு இந்த வேலை கிடைத்ததே உன்னால் தான்.. அதனால தான் உனக்காக இத வாங்கினேன்.. மறுப்பு சொல்லாமல் இந்த மோதிரத்தை போட்டுக்கோ என்று கூறினாள்..!

ஆனந்தம்

ஆனந்தம்

போட்டுக்கறதா? அது எல்லாம் முடியாது.. வாங்கி கொடுத்தவங்க தான் போட்டு விடனும் என்று விளையாட்டாய் சொன்னேன்! அவள் இந்த மோதிரத்தை போட்டு விட்டாள் நன்றாக இருக்கும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது.. நான் சொன்ன உடனேயே அவள் திரும்பிக் கொண்டாள்.. கோபமா? சாரி... சாரி... நானே போட்டுக்கறேன் என்று கூறினேன்... உடனே என் அருகில் வந்து என் கையில் இருந்த மோதிரத்தை வாங்கி நான் தான் போட்டு விடுவேன் என்று போட்டுவிட்டாள்...! எனக்கு இது என்ன கனவா நனவா என்பது போல ஆனது...!

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

செல்போன் அரட்டை... பிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வது என ஆறு மாதங்கள் உருண்டோடின... அப்போது நான் என் வாழ்வில் புதிய மாற்றம் உருவானது.. அவள் என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள்.. சோகமாகவே அலுவலகத்திற்கு வர தொடங்கினாள். என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை.. அலுவலகத்தில் அவளது இடத்தை மாற்றவும் அவள் அனுமதி கேட்டிருந்தது தெரியவந்தது... ஒருநாள் இரவு அவளுக்கு போன் செய்து பேசினேன்... என்ன ஆனது என்று கேட்டேன்..! அவள் அழுக ஆரம்பித்துவிட்டாள்.. எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது.. அதை உன்னிடம் சொன்னால் என்ன நினைப்பாயோ என்று தெரியவில்லை.. நான் பிரிந்து இருப்பது நல்லது என்று கூறினாள்...

எனது டைரி

எனது டைரி

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன பிடிச்சு இருக்குனா.. லவ் பன்னறயா? என்று கேட்டேன்.. இல்ல.. அப்படி ஒரு எண்ணம் என் மனசுல வர கூடாதுனு தான் விலகி விலகி போறேன் என்று சொன்னாள் அவள்..! எனக்கு அவளது நிலை புரிந்தது... அடுத்த நாள் அவளை சந்தித்த போது எனக்கு உண்டான காதலை பற்றியும், அதன்பின் நட்பு மட்டும் போதும் என்று நான் முடிவு எடுத்தது.. மோதிரம் அணிந்த விட்ட அந்த நாள்.. போன்ற எனது மறக்க முடியாத அனுபவங்களை எழுதி வைத்திருந்த டைரியை அவளிடம் கொடுத்தேன்.. இதை நீ இரவு தனியாக இருக்கும் போது பிரித்து பார் என்று...!

அம்மாக்கு பிடித்தது

அம்மாக்கு பிடித்தது

அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்கு லீவ் போடு என்று கூறினாள்... நான் என்ன என்று கேட்டும் அவள் பதிலளிக்கவில்லை...! அடம்பித்ததால் லீவ் போட்டேன்.. உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினாள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை..! சரி வா என்று கூறினேன்.. என் அம்மா அவள் வருவதால் விதவிதமாக சமைத்து இருந்தார். அவளும் வீட்டிற்கு வந்தாள்.. என் அம்மாவுடன் நன்றாக பேசினாள்.. என் அம்மாவிற்கு அவளை பிடித்துவிட்டது...! என் அறைக்கு அழைத்து செல்ல சொன்னாள்.. அழைத்து சென்றேன்.. கதவை முடிக் கொண்டு ஐ லவ் யூ என்று கூறி கட்டியணைத்து அழுதாள்..! எனக்கு அவள் அழுகையிலேயே அவளுக்கு என் மீது இருந்த காதல் புரிந்தது.. நானும் அவளுக்கு ஒகே சொல்லிவிட்டேன்...

என் காதலி

என் காதலி

எங்களது காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது.. எங்களுக்குள் எத்தனை சண்டை வந்தாலும் சரி, நாங்கள் இருவரும் பேசாமல் மட்டும் இருக்கவே மாட்டோம்...! என்னை விட அவள் தான் என்னை அதிகமாக காதலித்தாள்...! என்னை அவள் மாமா என்று சொல்லி அழைப்பது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்... எத்தனை கவலைகள் சோகங்கள் இருந்தாலும், அவள் என்னை அப்படி கூப்பிடும் போது அவை அனைத்தும் காணாமல் போய்விடும். என் உலகமே அவள் தான்....!

வீட்டில் தெரிந்தது

வீட்டில் தெரிந்தது

எங்களது காதலுக்கு இரண்டு வருடங்கள் ஆனாது.. அவளுக்கு அப்போது அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அவளுக்கு வந்தது எல்லாமே வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தான்.. ஆனால் அவள் எங்களது காதலை பற்றி வீட்டில் சொல்லிவிட்டாள். வழக்கம் போல எதிர்ப்பு தான் வந்தது... ஆனாலும் அவள் தன் மனதை மாற்றிக் கொள்ளாமல் அவளது வீட்டில் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து, அடம் பிடித்து கெஞ்சி எங்களது காதலுக்கு சம்மதம் வாங்கினாள்..

பெரிய இடி

பெரிய இடி

நான் வீட்டில் இவள் தான் நான் காதலிக்கும் பெண் என்று கூறியதுமே என் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள். எங்களது திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் விரைவில் ஆரம்பித்து விடலாம் என்றிருந்தார்கள்... அப்போது தான் எங்களது வாழ்க்கையில் பெரிய இடியே விழுந்தது.. அன்று அவளது பிறந்தநாள் இரவு 12 மணிக்கு போன் செய்து விஷ் பண்ணினேன்.. உனக்கு என்ன வேணும் என்று கேட்டேன்... அவள் எனக்கு உன் கூட லாங் டிரைவ் போகனும் என்று கூறினாள்.. சரி போகலாம்.. நீ இப்போவே டிரஸ் எல்லாம் பேக் பண்ணிக்கோ என்று கூறினேன்..

நெடும் பயணம்

நெடும் பயணம்

12.30 க்கு அவளது வீட்டிற்கு சென்று, அவளை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு புறப்பட்டேன்.. இரவு நேர பயணம், சில வாகனங்கள் மட்டுமே சாலைகளில் இருந்தன.. அவள் மிகவும் சந்தோஷமாக என்னை கட்டி அணைத்துக் கொண்டு என்னுடன் வந்தாள்.. நீண்ட தூர பயணம் காலை 6 மணிக்கு நாங்கள் ஊட்டியை அடைந்துவிட்டோம்.. அதன் பின் குளித்து கிளம்பி, நாங்கள் ஒரு ஆசிரமத்திற்கு சென்றோம்.. அங்கு அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.. தன் கையால் அனைத்து குழந்தைகளுக்கும் உணவு வழங்கினாள்.. அப்போது அவளது கண்களில் கண்ணீர் கசிந்தது... என் கைகளை பிடித்துக் கொண்டு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது என்று கூறினாள். பின் நாங்கள் ஊரை சுற்றி பார்த்து விட்டு, ஊருக்கு கிளம்பினோம்...

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அவளது பிறந்த நாளன்று நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தோம்... எங்களது வாழ்க்கையில் கடைசியாக மகிழ்ச்சியாக இருந்த நாளும் அது தான்... நாங்கள் சென்ற பைக் மீது ஒரு லாரி மோதியதில் அவளுக்கு அதிக காயம் உண்டானது.. உனடியாக அவளை அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதித்தேன்...

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

மருத்துவர் என்னை உள்ளே அழைத்து அவளது கர்ப்பையில் பலத்த அடிபட்டுள்ளது. இனி அவளால் ஒரு குழந்தையை சுமக்க முடியாது என்று கூறினார்.. எனக்கு தூக்கிவாறி போட்டது.. தலைசுற்றியது... இதை அவளிடம் இருந்து சொல்ல மறைத்துவிட நினைத்தேன்.. அவளிடம் சொல்லவில்லை... வீட்டிற்கு புறப்பட்டோம்.. நன்றாக ஓய்வெடு என்று கூறினேன்... எனக்கு அவளுக்கு விசயம் தெரிவதற்குள் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது... எனவே என் வீட்டில் பேசினேன்.. அவர்களும் சரி சீக்கிரமாக திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்

உண்மை தெரிந்தது

உண்மை தெரிந்தது

இரண்டு வாரங்கள் கழித்து அவளுக்கு உண்டான அடிவயிற்று வலியால், அவள் அவளது அம்மாவுடன் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறாள். இதில் எல்லா உண்மையும் அவளுக்கு தெரிந்துவிட்டது.. என்னிடம் ஏன் இதை பற்றி சொல்லவில்லை என்று அடித்து விட்டாள்... நான் அழுதேன்.. இதை பற்றி என் வீட்டில் சொல்லிவிடாதே என்று கெஞ்சினேன்.. நாம் வேறு மருத்துவரை சந்திக்கலாம் என்று கூறி அவளை சமாதானம் செய்தேன்...

கடைசி முயற்சி

கடைசி முயற்சி

நாங்கள் பல மருத்துவர்களை சந்தித்தோம்.. அவர்கள் அனைவரும் கைவிரித்துவிட்டார்கள்... என்ன செய்வது என்றே தெரியவில்லை.. கடைசியாக அவளிடம் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது.. தயவு செய்து இதை என் வீட்டில் சொல்லிவிடாதே என்று அவளது காலில் விழுந்து கெஞ்சினேன்... ஆனால் என்னால் இதை மறைத்து, உன் பெற்றோரை ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினாள்... நான் என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை...

என்னை புரிந்து கொள்ளவில்லை

என்னை புரிந்து கொள்ளவில்லை

என் வீட்டில் உண்மையை சொல்லிவிட்டாள்... இதை கேட்டு என் அம்மா அதிர்ந்துவிட்டார். அவளை என் அம்மாவும் பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றார். ஆனால் எந்த தீர்வும் கிடைக்காததால்.. என் அம்மாவும், அப்பாவும் இந்த பெண் வேண்டாம்.. எனக்கு இருப்பது நீ ஒரே பையன்.. நம் குடும்பத்திற்கும் ஒரு வாரிசு வேண்டும் அல்லவா என்று என் காலில் விழுந்து அழுக ஆரம்பித்துவிட்டார்கள்...

எங்கடி இருக்க?

எங்கடி இருக்க?

என்னோடு விட்டுவிடாமல் என் காதலியிடமும் அவர்கள் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள்... குழந்தையை தத்து எடுக்க கூட சம்மதிக்கவில்லை.. அவள் நான் வேலை விஷயமாக வெளியூர் சென்ற நேரத்தில் வேலையை ரிசைன் செய்து விட்டு, வீட்டையும் காலி செய்து விட்டு அவர்களது குடும்பமே எங்கே சென்றது என்று தெரியவில்லை.. நான் பத்து நாட்கள் கழித்து வந்த போது என் காதலியை அலுவலகம், வீடு என தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.. என்னுடன் இப்போது அவளுக்கு எந்த தொடர்பும் இல்லை.. அவளை பற்றிய எந்த தகவலும் எனக்கு வரவில்லை... இப்படி என்னை விட்டு சென்றதற்கு அவள் என்னை கொன்று இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது...! அவள் என்னைவிட்டு சென்று ஒன்றரை வருடங்கள் ஆகிறது... இன்னும் அவளை தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்...!

இப்படிக்கு

நான்....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

my story she is my everything but i done major fault

my story she is my everything but i done major fault