நீ எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா இருப்பனு தான நினைச்சேன்...! - My Story #68

Written By:
Subscribe to Boldsky

அவள் என் பக்கத்து வீட்டு தான்.. அவள் அதிகமாக படிக்காதவள்.. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருக்கிறாள்... பார்க்க கவர்ச்சியாக எல்லாம் இருக்கமாட்டாள்.. எப்போதும் ஒரு பழைய நைட்டியில் தான் இருப்பாள்.. எப்போதாவது தான் அத்தி பூத்தது போல தலைவாறி பூச்சுடுவாள்.. மற்ற நேரங்களில் எல்லாம், கொண்டையில் தான் சுற்றிக் கொண்டு இருப்பாள்.. அவளது குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவருடனும் எதார்த்தமாக பேசுவாள். கள்ளம்கபடம் இல்லாதவள் அவள்..

அவளுடைய அம்மாவிற்கு அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து கொடுப்பாள். அவள் அம்மா, அப்பா பேச்சை மீறி நடந்து கொள்ளவே மாட்டள். அவள் உண்டு அவளது வேலை உண்டு என்று தான் இருப்பாள்.. தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து கொடுப்பாள். வயதானவர்களுக்கு, கடைக்கு செல்வது, தண்ணீர் பிடித்து கொடுப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொடுப்பாள். அவளது குணம் எங்களது ஏரியாவில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்...

அவள் சரியாக படிக்கமாட்டாள் என்று எல்லாம் இல்லை. அவள் நன்றாக படிக்க கூடிய பெண் தான், இருந்தாலும் வீட்டில் படிக்க வைக்க முடியாத சூழ்நிலை இருந்ததால், கல்லூரி படிப்புகளை எல்லாம் கற்கவில்லை...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் டீச்சர்!

என் டீச்சர்!

நான் அப்போது தான் எம்.சி.ஏ படித்து கொண்டு இருந்தேன். எங்களது வீடு எல்லாம் நெருக்கம் நெருக்கமாக தான் இருக்கும். எனவே வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஐந்து ஆறு வீடுகள் இருக்கும்.. அனைத்துமே பக்கம் பக்கமாக தான் இருக்கும்... நான் ஒரளவிற்கு தான் படிப்பேன் என்றாலும் கூட எப்படியோ எம்.சி.ஏ வரைக்கும் படிக்க வந்து விட்டேன்.. அவள் என்னுடன் சின்ன வயதில் இருந்தே நன்றாக பேசுவாள், எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள்..

அறிவாளி

அறிவாளி

அவளிடம் பாடத்தில் ஒரு சந்தேகம் என்று கேட்டுவிட்டால் போதும் எனக்கு நன்றாக புரியும் வரைக்கும் எனக்கு பாடம் கற்பித்துக் கொண்டு தான் இருப்பாள். அவளுக்கு டீச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை.. டீச்சருக்கு எப்படியாவது படித்தே ஆக வேண்டும் என்று தான் சின்ன குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தாள்..

அழகு தேவதை...

அழகு தேவதை...

அன்று எங்களது ஊர் திருவிழா... அவள் அழகாக தன்னை அழங்கரித்து இருந்தாள். நானே பார்த்து அசந்து போய்விட்டேன்.. அவள் அத்தனை அழகு.. ஆனால் அவளது அத்தனை அழகையும் தனக்குள் போட்டு பூட்டி வைத்துக் கொள்வாள்.. எனக்கு அவளை பிடித்திருந்தது... அவளை போல ஒரு நல்ல பெண் எனக்கு மனைவியாக வந்தால், என் குடும்பத்தையும், என்னையும் நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று தோன்றியது..

அன்பானவள்

அன்பானவள்

என்னுடைய அம்மா, அப்பாவிற்கு கண் தெரியாது.. அவர்களை இவள் நன்றாக பார்த்துக் கொள்வாள். வேறு ஒரு பெண் எனக்கு மனைவியாக வந்தால், அவள் என் அம்மா அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்வாளா என்று தெரியாது. எனக்கு அவளை அதிகமாக பிடிக்க காரணமே அவளது இந்த நல்ல குணம் தான்..

எனது காதல்

எனது காதல்

என் காதலை அவளிடம் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது.. அவள் என்ன சொல்வாள் என்று தெரியவில்லை. அவள் ஒரு தைரியமான பெண்.. கத்தி ஊரையே கூட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் என் மனதில் இருந்தது.. என் கல்லூரி நண்பர்களிடம் தான் என் காதல் பற்றி நான் கூறுவேன்.. அவர்கள் என்னையும் அவளையும் இணைத்து வைத்து பேசுவதே ஒரு சந்தோஷமான அனுபவமாக தான் இருந்தது..

தைரியம் கொடுத்த நண்பர்கள்

தைரியம் கொடுத்த நண்பர்கள்

என் காதலை பற்றி அவளிடம் சொல்ல தைரியம் கொடுத்ததும் கூட என் நண்பர்கள் தான். எப்படியோ என் காதலை அவளிடம் ஒரு கோவிலில் வைத்து தான் வெளிப்படுத்தினேன்.. உன்னை தவிர ஒரு நல்ல மனைவி எனக்கோ அல்லது ஒரு நல்ல மருமகள் என் தாய், தந்தைக்கோ கிடைக்க முடியாது என்று கூறினேன்.. நான் சொன்ன அனைத்து விஷயங்களையும் அவள் நிதானமாக தான் கேட்டாள். பதிலை யோசித்து சொல்கிறேன் என்று கூறியிருந்தாள்...

அவள் விருப்பம் என்ன?

அவள் விருப்பம் என்ன?

என் விருப்பத்தை சொல்லிவிட்டேன்.. உன் விருப்பம் என்னவாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.. நீ எத்தனை நாட்கள் வேண்டுமானலும் நேரம் எடுத்துக்கோ, ஆனா ஒரு நல்ல முடிவா சொல்லுனு சொல்லிட்டேன்.. அதற்கு பிறகு நான் அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை.. அவள் நன்றாக யோசிக்கட்டும்.. அவளது குடும்பத்தை பற்றியும் அவள் யோசிக்க வேண்டும் அல்லவா என்று விட்டுவிட்டேன்.

அவள் கொடுத்த கேசரி

அவள் கொடுத்த கேசரி

நாட்கள் கடந்தன... ஆறு மாதங்கள் ஆனது... ஒரு நாள் அவள் என் வீட்டிற்கு ஸ்பேஷலாக செய்து அனுப்பிய கேசரியில் ஐ லவ் யூ என்று எழுதி அனுப்பியிருந்தாள்.. எனக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் இந்த வேலையை எங்க ஏரியா குட்டீஸ் செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் வந்தது.. உடனே அவளிடமே சென்று, அந்த கேசரியை காட்டி கேட்டேன்.. என்ன இது என்று.. இங்கிலிஷ் தெரியாதா என்று கேட்டாள்..

என் இதய ராணி

என் இதய ராணி

அப்போது தான் அவளும் என்னை காதலிக்கிறாள் என்று உறுதி செய்து கொண்டேன்.. அவளுக்கு முதல் முதலாக நான் வாங்கி கொடுத்த பரிசு புடவை தான்... அவளை குறைந்த பட்சம் என் வசதிக்கு தகுந்தது போல ஒரளவுக்கு நல்ல உடைகளிலாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. அவளை என்னால் முடிந்த அளவிற்கு நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்..

என் உயிரவள்..

என் உயிரவள்..

அவளும் என்னை காதலிக்க தொடங்கிய நாளில் இருந்து மகாராணியை போல அழங்காரம் செய்து கொண்டு எங்களது ஏரியாவையே கலக்கிக்கொண்டு இருந்தாள்... அவளது மனது தான் என்றைக்குமே பேரழகு....! எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அவள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்று தான் வாழ்ந்து வந்தேன்... என்னை மேல் அவள் உயிரையே வைத்திருந்தாள்...

பெண் பார்த்தல்..

பெண் பார்த்தல்..

திடீரென்று ஒரு நாள் நான் கல்லூரி முடிந்து விட்டு வீடு திரும்பிய போது, அவளது வீட்டில் நிறைய உறவினர்கள் அமர்ந்து இருப்பது தெரிந்தது.. என் பக்கத்து வீட்டு பையனை அழைத்து என்னவென்று விசாரித்தேன்... அக்காவை பொண்ணு பாக்க வந்து இருக்காங்கனு சொன்னன் அவன்.. நான் அதிர்ந்து போனேன்...

என் சூழ்நிலை

என் சூழ்நிலை

அடுத்த நாள் அவள் என்னை கோவிலுக்கு அழைத்து சென்று, என்னை எப்படியாவது திருமணம் செய்து கொள் என்று கெஞ்சினாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. நானோ படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சூழ்நிலையில் அவளை எப்படி திருமணம் செய்து கொண்டு காப்பாற்ற முடியும் என்று தோன்றியது. படித்து முடித்தாலும் கூட வேலை கிடைப்பது சிரமம் என்று அவளிடம் கூறினேன்...

ஆத்திரமடைந்த அம்மா

ஆத்திரமடைந்த அம்மா

சரி என்று அவளது வீட்டில் சென்று பேசினேன்.. அவளது அம்மா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.. என்னை அடியடியென்று அடித்து விட்டார். என் பொண்ணுக்கு இப்போ தான் நல்ல இடம் கிடைத்து இருக்கிறது.. அவளாவது நல்ல சாப்பாடு சாப்பிட்டு வசதியா வாழட்டும் அதை கெடுத்து விடாதே என்று கெஞ்சினார்.

அவளது அழுகை

அவளது அழுகை

எனக்கு எந்த வழியும் தெரியவில்லை.. ஒரு சாதரண வேலை கிடைத்தாலாவது பரவயில்லை என்று கல்லூரி விடுமுறை நாட்களில் வேலை தேட ஆரம்பித்தேன்.. எல்லோரும் படிப்பை முடித்து விட்டு வா என்று சொல்லிவிட்டார்கள். என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டேன்... எந்த வழியும் கிடைக்காத ஒரு சூழ்நிலையில் அவளிடம், நீ உங்க வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள் என்று கூறி விட்டேன். அவள் இந்த வார்த்தையை கேட்டதும் அழுத அழுகையை என்னால் உயிருள்ள வரை மறக்கவே முடியாது...

எதிர் வீட்டு பெண்!

எதிர் வீட்டு பெண்!

அவளுக்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் என் கண் முன்னாலேயே நடந்தது.. எனக்கு அவளது திருமணத்திற்கு செல்ல துளியும் விருப்பம் இல்லை.. அவளை இன்னொருத்தர் திருமணம் செய்து கொள்வதை என் கண்ணால் காண முடியவில்லை... எனவே நான் இரண்டு வாரத்திற்கு வெளியூர் சென்றுவிட்டேன். நான் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்த போது அவள் என் எதிர் வீட்டில் இல்லை.. அவளது கணவன் வீட்டிற்கு சென்று விட்டாள்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆறு மாதங்கள் உருண்டோடின.. அவள் வரும் செய்தி தெரியும் போது எல்லாம் நான் வெளியூர் சென்று விடுவேன்... அவள் அவளது புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு தான் நான் மீண்டும் என் வீட்டிற்கு வருவேன்.. ஒரு நாள் தான் என் தலையில் இடி விழுந்தது போல செய்தி கிடைத்தது.. அவள் என்னை மறக்க முடியாமல் இறந்து விட்டாள் என்று.... அவளது முகத்தை கூட இறுதியாக நான் காணமுடியவில்லை...

குற்ற உணர்வு

குற்ற உணர்வு

எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க 2 வருடங்கள் ஆனது.. ஆனால் குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்றும் அளவிலான வருமானம்.. அப்போது ஒருநாள் அவளது தோழியை எதிர்பாராதவிதமாக பார்த்த போது தான் அவள் என்னை மறக்கமுடியாமல் தான் இறந்தாள் என்பது தெரியவந்தது... இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை... காலம் காயங்களை ஆற்றும் என்றாலும், என் குற்ற உணர்ச்சி மட்டும் என்னை விட்டு செல்ல மறுக்கிறது.....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story : I thought you forgot everything and living your life

My Story : I thought you forgot everything and living your life