காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்!

Posted By: Volga
Subscribe to Boldsky

காதலில் இருக்கிற அடிப்படையான விஷயமே நம்பிக்கை தான். உங்கள் இணை மீது உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை தான் உங்களின் காதலை வலுப்படுத்தும். என்ன தான் காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம் என்று சொன்னாலும் கூட அதனை பூதகரமாக வெடித்து ப்ரேக் அப்பை நோக்கி கொண்டு செல்லாமல் இருந்திட வேண்டியது அவசியம்.

இருவரில் ஒருவர் பொய் சொன்னால் அதற்கான காரணம் உங்களை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல அதைத் தாண்டி இந்த காரணங்களில் ஏதோ ஒன்றும் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிப்படைக்காரணம் :

அடிப்படைக்காரணம் :

அதற்கு உங்கள் காதல் மீதும் உங்கள் இணையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். காதலில் சண்டை ஆரம்பிப்பதே " நீ என்னிடம் பொய் சொல்லிவிட்டாய்....".

"என்னிடம் எதையோ மறைக்கிறாய்", "எனக்கு நீ உண்மையாக இல்லை" என்பதாகத்தான் இருக்கும், இந்த விஷயம் வெவ்வேறு வடிவங்களில் வேணாலும் பரிணாமித்து வந்தாலும் அடிப்படை இணை உங்களை ஏமாற்றிவிட்டார்.அதாவது பொய் சொன்னார் என்பதாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு வருத்தம் :

உங்களுக்கு வருத்தம் :

சில விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது என்பது தெரிந்தும், சூழ்நிலை மற்றும் நிர்பந்தம் காரணமாக செய்திருப்பார்கள். அதனைச் சொன்னால் உங்களுக்கு வருத்தம் ஏற்படுமே என்று நினைத்து சொல்லாமல் விட்டிருக்கலாம்.

அந்தரங்கம் :

அந்தரங்கம் :

அதை விட தனக்கான பர்சனலான விஷயம் இது. யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் நினைத்திருக்கலாம். காதலிக்க ஆரம்பித்தவுடனேயே எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கான அடிப்படை அந்தரங்கம் என்று எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்களாக இருந்தால் முதலில் அந்த கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் .

கவர நினைத்திருந்தால் :

கவர நினைத்திருந்தால் :

உங்களை இம்ரஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பொய் சொல்லியிருக்கலாம். கைக்குழந்தையிலிருந்து யாருமே தங்களை ஒருவர் பாராட்டுகிறார் என்றால் பெரும் மகிழ்வுடன் தான் ஏற்றுக் கொள்வார்கள்.

அந்த பாராட்டுக்கள் சில நேரங்களில் பொய்யாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் உங்களை மகிழ்விக்க வேண்டியே சில பொய்களையும் அவர்கள் சொல்லலாம்.

பொய்யெல்லாம் பொய்யே இல்லை :

பொய்யெல்லாம் பொய்யே இல்லை :

அவர்கள் கனவில் நினைக்கிற விஷயங்கள் நிஜமாக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதைக் கற்பனையில் நினைத்து அது நிஜமானால் எப்படியிருக்கும் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

அவர்களின் கற்பனை உலகம் அது. இடைமறிக்காதீர்கள், பொய் என்று தெரிந்தாலும் நீங்கள் நம்புகிறீர்கள் என்ற ஒற்றை விஷயமே அவர்களுக்கு மன நிறைவைத் தரும்.

பழசெல்லாம் மறக்கணும் :

பழசெல்லாம் மறக்கணும் :

சில கசப்பான சம்பவங்கள், அவர்கள் கூனிக்குறுகிய நிகழ்வுகள், வாழ்க்கையில் மறக்க நினைக்கிற பக்கங்கள் சிலவற்றை திரும்பி பார்க்கவே கூடாது என்று நினைத்திருப்பார்கள்.

அதனால் உங்களிடம் மறைத்திருப்பார்கள் அல்லது நடந்தவற்றை திரித்து பொய்களை புகுத்தி சொல்லியிருப்பார்கள்.

அதன் பின்னணி உங்களிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதல்ல, நான் அதை திரும்பி பார்க்க விரும்பவில்லை. என் நினைவுகளிலிருந்து அந்தப் பக்கங்களை நீக்கிட வேண்டும் என்று நினைத்ததன் விளைவு தான்.

தூரம் தூரமே :

தூரம் தூரமே :

இதற்கு பயம் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கே உங்கள் மீது அதீத அன்பு வைத்து விட்டாள் அதிலிருந்து மீள முடியாதே என்ற எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்கள் மீது அன்பு இருந்தாலுமே நடுவில் தடைச்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டு உங்களிடமிருந்து விலகியே இருக்க நினைப்பார்கள். அந்த விலகலுக்காக சில பொய்களை சொல்லுவார்கள்.

இது காதல் தானா! :

இது காதல் தானா! :

இந்த சந்தேகம் நீங்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகும் தொடரலாம். உண்மையில் நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்களை நம்பி இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம? என்பதில் அவர்களுக்கு இன்னும் தெளிவு பிறந்திருக்காது.

அதனாலும் பொய்கள் சொல்லப்படலாம்.

தேர்வு :

தேர்வு :

ஆம்.... இது பலருக்கும் நடந்திருக்கிறது. உங்களின் இணை உங்களை சோதிப்பதற்காக கொடுத்த தேர்வாக கூட இருக்கலாம்.

என்னை சந்தேகப்படுகிறார்..... என்று உடனேயே பட்டம் கட்டி சண்டையை ஆரம்பிக்காதீர்கள். உன் சந்தேகம் தான் தோற்றது, அது தான் பொய்யானது என்று சொல்லி நிரூபியுங்கள்.

காதல் வலுவாவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாக அமைந்திடும்.

பாதுகாப்பின்மை :

பாதுகாப்பின்மை :

காதல் உறவில் இந்த பாதுகாப்பு உணர்வு மிகவும் அவசியமான ஒன்று. அது விலகும் போதோ அல்லது அது பொய்க்கும் போது தங்களை சமாதானப்படுத்திக் கொள்ள சில விஷயங்களை நம்ப ஆரம்பிப்பார்கள்.

அதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது அவை உங்களுக்கு பொய்களாகத் தெரியும்.

அதே போல அவர்கள் உங்களை சமாதானப்படுத்தவும் பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

இது பெரிய பிரச்சனை அல்ல :

இது பெரிய பிரச்சனை அல்ல :

உங்களுக்கு மிக முக்கியமானதாக தோன்றிடும் ஒரு விஷயம் அவருக்கு முக்கியமில்லாததாக.... அவ்வளவாக கவனம் செலுத்த தேவையில்லாததாக தோன்றலாம். அதனால் சிலவற்றை உங்களிடம் பகிராமல் விட்டிருக்கலாம்.

என்னிடம் மறைக்கிறாள்.... என்று கதையை ஆரம்பிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lie Plays a Vital Role in Relationship

Lie Plays a Vital Role in Relationship
Story first published: Saturday, December 16, 2017, 15:38 [IST]