For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலில் வரும் சண்டைய தவிர்க்க அவசியமான ஒன்று என்ன தெரியுமா?

காதலிடம் பச்சாதபம் கொள்வது எவ்வளவு அவசியமானது என்பதற்கு சில காரணங்கள்.

|

உறவில் இருப்பவர்களுக்கு தன் இணை மீதான பச்சாதபம் மிகவும் அவசியம் ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு இது முக்கிய இடம் வகிக்கிறது. நம்மோ நம்முடைய குணங்களோ நம்முடைய எண்ணங்களோடு நம்முடைய விருப்பங்களோடு போட்டியிடுபவர்கள் மீது எப்போதுமே நமக்கு வெறுப்பு இருக்கும்.

இதே உறவில் வெறுப்பு ஏற்பட்டாலும் இணை மீது பச்சாதாபம் வைத்திருப்பது அவசியம். ஒருவர் மீது ஒருவர் கருணை காட்டிக் கொள்வதைக் கூட இப்படிச் சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சண்டைகள் :

சண்டைகள் :

காரணங்களின்றி சண்டை வருவது ஆச்சரியமில்லை. ஆனால் அவற்றை சரி செய்வது என்பது அத்தியாவசியமானது. சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் எளிதாக எடுத்துக் கொள்வதற்கு அடித்தளமாய் இருப்பது இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் தான்.

கவனம் :

கவனம் :

இணையை பச்சாதாபத்தோட அணுகினால் அவரை கவனத்துடன் கையாள முடியும். அவருக்கு தேவையான கவனத்தையும் அன்பையும் உங்களால் கொடுக்க முடியும்.

காதலில் உங்களுடைய இருப்பதைத் தான் உங்கள் இணை அதிகம் விரும்புவார்கள் என்பதால் காதலில் பச்சாதாபம் கொண்டிருப்பது அவசியம்.

பாசிட்டிவ் :

பாசிட்டிவ் :

உங்கள் இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் இணைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது பாசிட்டிவாகத்தான் இருக்கும். அவர்கள் செய்யும் தவறுகளை எளிதாக மன்னிக்க முடியும். தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று உங்கள் மூளை நம்பும். குழந்தை தவறு செய்யும் போது நாம் பெரிதாக தண்டிப்பதில்லை காரணம் குழந்தை தெரிந்தே இந்த தவறை செய்திருக்காது என்று நாம் நம்புகிறோம் அதே போல தான் இங்கேயும்.

கடந்து செல்வோம் :

கடந்து செல்வோம் :

எதையும் எளிதாக கடந்து வர வைத்திடும். இணை மீது நீங்கள் கொண்டிருக்கும் பச்சாதாபம் என்பது இருவருக்குள்ளும் சண்டை ஏற்படாத வண்ணம் உங்களை பாதுகாத்திடும்.

பொறுமை :

பொறுமை :

எந்த செயலுக்கும் முன்யோசனையின்றி சட்டென முடிவெடுப்பதில் தான் பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகிறது. கோபமாக அப்படி பேசிவிட்டேன் என்று பின்னால் மன்னிப்பு கேட்டு அலைவதுண்டு. ஆனால் இந்த பச்சாதாபம் அப்படியல்ல, கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்னால் உங்களை யோசிக்க வைக்கும். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

செயல் :

செயல் :

உறவுமுறையில் மிகவும் முக்கியமானது இது. இணையின் மீது பச்சாதாபம் கொள்வது உங்கள் காதலை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. இணை கோபமாக இருக்கிறார் என்றால் அதற்கான காரணம் என்ன? என்று நீங்கள் யூகிக்க முடியும். உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்கிற செல்ஃப் அனாலிசிஸ்க்கு உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Empathy with your partner important?

Is Empathy with your partner important?
Story first published: Wednesday, August 16, 2017, 17:21 [IST]
Desktop Bottom Promotion