லவ் பண்ண அழகான பொண்ணு தான் வேணும்னு அடம்புடிக்கிற பாய்ஸ்க்காக!

Posted By:
Subscribe to Boldsky

இணை, வாழ்க்கைத்துணை ,காதலி, இந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டாலே மறைமுகமாக சிரிக்கும் பருவத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கான இணையை தேடிக் கொண்டிருக்கிறீர்களா அப்படியானால் இது உங்களுக்குத் தான்.

காதல் என்ற உறவுக்குள் அழகு என்ற விஷயம் ஒரு ப்ளே செய்கிறது என்றால் அது மிகையல்ல. உனக்கு எந்த மாதிரியான காதலி வேண்டும் என்று கேட்டால் எல்லாரும் கண்டிப்பாக அடிக்கோடிட்டு சொல்வது. அழகான ... அழகான பெண்ணாக இருக்க வேண்டும் என்பது தான். இந்த அழகைத் தாண்டிதான் படிப்பும் அந்தஸ்த்து என மற்றதெல்லாம்.

Is beauty the main factor in relationship

காதலிக்கும் போதும் அவள் என் காதலி என்று பிறரிடம் சொல்லும் போது கர்வமாக சொல்லிக் கொள்ள வேண்டும். அதற்காகவாவது நம் வாழ்க்கத்துணையிடம் அழகு என்பதை எதிர்ப்பார்க்கிறோம். அழகு காதல் உறவுக்குள் வந்தால் நம்மை என்ன செய்யும் என்று தெரிந்தால் இனி அழகெல்லாம் ஒரு விஷயமே இல்ல என்று சொல்லத் துவங்குவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கியத்துவம் :

முக்கியத்துவம் :

அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள். ரசிக்கும் நீங்களே ஆர்வத்துடன் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உங்கள் இணையின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் எளிதாக செல்லும் எந்த விஷயமும் போகப்போக பெரும் போராட்டத்தை கொடுக்கும்.

காரணங்கள் :

காரணங்கள் :

அழகினை மட்டுமே பிரதானப்படுத்தி நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சீக்கிரத்திலேயே அழுப்பு தட்டும். இணையிடம் நேசிக்க, அவரை பாராட்ட வேறு எந்த விஷயங்களும் இல்லாத போது உரையாடல் குறைந்து போகும். அதாவது அடிக்கடி சண்டைகள் எழும்.

தேவையற்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போடுபவர்கள் தங்கள் காதலை எளிதாக எடுத்துச் செல்லமாட்டார்கள்.

கவனம் :

கவனம் :

காதலிக்கும் போது ஆசையாய் அன்பாய் இருக்கிறான் திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டான் என்று உங்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறதா? அப்படியானால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று அழகு.

காதலிக்கும் போது அழகுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதைத்தாண்டிய விஷயங்கள் குறிப்பாக திருமணத்திற்கு பிறகானதொரு வாழ்க்கை வாழ்வாதாரத்தை பற்றி தொலை நோக்கு பார்வையில்லாமல் குறுகிய சிந்தனையுடன் இருப்பது தான் முக்கிய காரணம்.

சந்தேகம் :

சந்தேகம் :

உங்களால் முழு நம்பிக்கையுடன் காதலிக்க முடியாது. ஆம், அழகை மட்டுமே பிரதானப்படுத்தி காதலிக்க ஆரம்பித்த நீங்கள் எங்கே விட்டுச் சென்றிடுமோ என்ற பயத்துடனயே நீங்கள் தொடர வேண்டியிருக்கும்.

நான் காதலிக்க, அவளை நேசிக்க இது தான் உண்மையான காரணம் என்று உங்களால் வேரூன்றி எந்த விஷயத்தையும் முழு மனதுடன் சொல்ல முடியாது.

சிந்தனை :

சிந்தனை :

ஒருகட்டத்தில் அடிக்கடி சண்டை வரும் சமயங்களில், அல்லது இருவரும் பிரிந்திருக்கும் சமயத்தில் பிரிவில் இருவரின் இல்லாத வெறுமையை உணர்கிறோம், பிரிவு தான் காதலை அதிகப்படுத்தும் என்ற வாதம் எல்லாம் இங்கே பொய்த்து விடும்.

முதலில் சண்டைக்கான காரணத்தையும் யார் மேல் தவறு என்பதையும் யோசிப்போம். பின்னர் அடுத்தடுத்த நாட்களில் என்ன சண்டை வந்தாலும் அவளை நான் நேசிக்கிறேன். நான் என்ன தவறு செய்திருந்தாலும் அவள் என்னை மன்னிப்பாள் என்று நீங்கள் உறுதியாக சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் போகும்.

பார்த்தோம்... சிரித்தோம்...பேசினோம் காதலிக்கத் துவங்கிவிட்டோம் என உங்களுடைய காதல் வாழ்க்கையை சட்டென முடிவதாக அமைந்திடும்.

தன்னம்பிக்கை :

தன்னம்பிக்கை :

தங்களை அழகாக காட்டிக் கொள்வது தன்னம்பிக்கை கொடுக்கும் என்று சொல்வது நூறு சதவீதம் சரியானது தான், ஆனால் அதை மட்டுமே பிரதானமாக நம்புவது கைவிட வேண்டும்.

நேசிப்பிற்கான அடிப்படைக்காரணமாக அழகு என்பதை நிர்ணயம் செய்து கொள்ளாதீர்கள். அழகினால் ஈர்க்கப்பட்டாலும் அதைத் தாண்டி வேறு அவரிடம் பிடித்த விஷயங்கள் என்ன அவரது பாசிட்டிவ் பக்கங்கள் என்ன என்று தேடுங்கள்.

நிலையற்ற நிலை :

நிலையற்ற நிலை :

என் காதலி எனக்கு அழகு என்ற நிலைக்கு சென்றுவிட்டால் உங்களையும் உங்கள் காதலையும் யாராலும் பிரிக்க முடியாது. அழகு மட்டும் அவளின் குணமல்ல அதைத்தாண்டி அவள் இதிலெல்லாம் சிறந்தவள், அவளின் குணமிது என்று பட்டியலிட்டுப் பாருங்கள்.

அழகு என்ற ஒன்றை மட்டும் நம்பி காதலில் இருக்கும் போது அது நிலையானதாகவே இருக்காது.

பிரிவு :

பிரிவு :

காதலில் பிரிவு ஏற்படுவது சகஜமானது தான், அதை உணர்ந்து அந்த பிரிவில் உங்களின் காதலை மீட்டெடுத்து செல்லக்கூடிய சூழல் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

காதலில் ஏற்படும் சிறு பிளவை கையாளும் விஷயத்தில் தான் உங்களின் சூட்சமமே அடங்கியிருக்கிறது. அந்த சூட்சமத்தின் அடிப்படை நீங்கள் காதலிக்கும் நபரை முழு மனதுடன் நம்புவது தான். இந்த நம்பிக்கை அழகினால் மட்டுமே வந்துவிடாது.

பிரிவு :

பிரிவு :

காதலில் பிரிவு ஏற்படுவது சகஜமானது தான், அதை உணர்ந்து அந்த பிரிவில் உங்களின் காதலை மீட்டெடுத்து செல்லக்கூடிய சூழல் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

காதலில் ஏற்படும் சிறு பிளவை கையாளும் விஷயத்தில் தான் உங்களின் சூட்சமமே அடங்கியிருக்கிறது. அந்த சூட்சமத்தின் அடிப்படை நீங்கள் காதலிக்கும் நபரை முழு மனதுடன் நம்புவது தான். இந்த நம்பிக்கை அழகினால் மட்டுமே வந்துவிடாது.

ஏமாற்றம் :

ஏமாற்றம் :

அழகு மட்டுமே உங்கள் காதல் வாழ்க்கையின் அடிப்படையாக இருந்தால் அல்லது நீங்கள் நேசிக்கும் நபரை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் அழகு என்பதாக இருந்தால் அந்த உறவு உங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும்.

மனதை படிக்கத் தெரிந்த, புரிந்த கொள்ளத்தெரிந்த உறவுகள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அழகுக்காக நாம் நேசித்தோம் மிகவும் அழகாக இருப்பதினால் உண்டான காதல் என்று நீங்கள் வர்ணித்தால் அது உங்களை ஏமாற்றவே செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is beauty the main factor in relationship

Is beauty the main factor in relationship
Story first published: Wednesday, October 25, 2017, 16:26 [IST]
Subscribe Newsletter