For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த நாள்தான் எனக்கு உணர்த்தியது என் பெற்றோர்கள் தான் எனது உலகம் என்று- ஒரு ஆணின் கதை !!

ஒரு ஆண் தன் காதலியை ஏமாற்றியதால் உண்டான சோகத்தை விவரிக்கிறது இந்த கட்டுரையில்

By Suganthi Ramachandran
|

(கதை ஆசிரியர் இந்த கதையை தனக்கு கிடைத்த குறிப்புகளை வைத்து எழுதியுள்ளார். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

நான் ஒரு புதிய நகரத்திற்கு இனி வாழும் என் வாழ்க்கையை காதலிப்பதற்காகவும் எனது காதலுக்காகவும் சென்றேன். எனக்கு சீக்கிரமாக ஒரு நல்ல வேளை கிடைத்தது. அந்த நேரம் என்னிடம் சொன்னது என் வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடக்கிறது என்று நான் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தேன். அன்பான என் காதலி, அழகான என் குடும்பம், ஒரு செல்லக் குட்டி தங்கை என்று கண் முன்னே எனது பழைய நினைவுகள் மிளிர்கின்றன. ஆனால் என் குடும்பம், என் வீடு இவைகளையெல்லாம் விட்டு நான் என் காதலியுடன் மட்டும் இந்த புதிய நகரத்தில் வாழ வேண்டிய வாழ்க்கையை ஏத்துக் கொண்டேன்.

My Story: The Day I Realised That My Parents Mean The World To Me

எனது வாழ்க்கையில் எதையும் யோசித்து திட்டம் போட்டு வாழக் கூட நேரமில்லை. எனக்கு தெரியாது என் வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்று. இதுவரை என் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் சரியாக நிகழ்ந்தது. நான் என் வீட்டுக்கு ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் நான் மிகவும் செல்லம் எல்லோருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என் காதலுக்காக என் உறவுகளை விட்டு இந்த புதிய நகரத்திற்கு வந்தேன் ஆனால் என்னவளுக்கு வேறொரு நகரத்தில் வேலை கிடைத்தது. அவள் அங்கே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்மூடித்தனமாக சென்றேன் அவள் பின்னே:

கண்மூடித்தனமாக சென்றேன் அவள் பின்னே:

அவளை நான் எனது வாழ்க்கையின் காதலாக நினைத்ததலால் அவள் எனக்கு எப்பொழுதும் தேவைப்பட்டால் எனவே நான் என் வேலையை விட முடிவெடுத்தேன். எனது வேலை மூன்று மாதம் நோட்டீஸ் காலத்தில் சென்றது. . அவள் என்னிடம் இருந்து அங்கே சென்று விட்டாள். எனது வேலையின் நோட்டீஸ் காலம் முடிந்து நான் அவளிடம் சென்றேன்.

 அவளிடம் சென்ற அந்த தருணங்கள்:

அவளிடம் சென்ற அந்த தருணங்கள்:

இப்பொழுது என்னை சுற்றி ஏதோ நடக்கிறது. எனது மனது நான் தப்பான முடிவை எடுத்துவிட்டேன் என்று என்னை புலம்ப வைக்கிறது. அவள் என்னை பிரிந்த இந்த மூன்று மாதத்தில் சந்தோஷமாக வாழ்க்கையை ரசித்திருப்பளோ என்று சந்தேகிக்கிறது எனது மனம்.

 எண்ணங்கள் கலைந்தன :

எண்ணங்கள் கலைந்தன :

முதல் முறையாக எங்கள் உறவு கையை விட்டு போகிறது. நான் நம்பினேன் எனது காதலுக்கு நான் பொருத்தமாக நடப்பேன் என்று ஆனால் இப்பொழுது அது மாறிவிட்டது. என்னவளால் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருக்கிறேன். அவளோ தனது சந்தோஷத்தை அவள் நண்பர்களுடன் கொண்டாடுகிறாள்.

நான் விலக்கப்பட்டேன்:

நான் விலக்கப்பட்டேன்:

நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவளிடம் நான் என் அன்பை வெளிப்படுத்த எண்ணி இருந்தேன்.

ஆனால் இப்பொழுது நான் எதுவும் இல்லாதவன், எதற்குமே பயன்படாதவன் என்று என் மனம் கலங்கிவிட்டது. இந்த உலகத்தில் ஆண்கள் அழக் கூடாது என்ற எண்ணங்கள் என் அழுகையை மனதில் புதைத்தது. ஒவ்வொரு நாள் இரவும் எனது அழுகை யாருக்கும் கேட்காத மெளனமாய் கலந்தன.

நான் மெளனமானேன் :

நான் மெளனமானேன் :

எங்களது உறவு ழூழ்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தேன். அவளுக்கு என்னிடம் பேசக்கூட பிடிக்க வில்லை. எனது வார்த்தைகள் மெளனமாய் காற்றில் கலந்தன.

எனது மனம் துடிதுடித்தது எனக்கு முடிவு வேண்டும் என்று அவளுக்காக என் வேலையை விட்டேன், அவளை எனது வாழ்க்கையில் எப்படி வைத்து இருந்தேன், இப்பொழுது அவளுக்காக நான் என் அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்றேன். எனக்கு என்ன கிடைத்தது.

எனது வலியை உணர்ந்த உறவுகள் :

எனது வலியை உணர்ந்த உறவுகள் :

என்னால் தாங்க முடியாமல் தூங்கும் போது அழுது விட்டேன். அப்பொழுது எனக்கு போன் வந்தது. என் அம்மா பேசினாங்க. அவங்களுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்பதை சொன்னார்கள். என்னை அவர்கள் காணாமல் தவிக்கிறது பற்றி சொன்னார்கள்.

எனக்கு தேவை எது என்பதை முடிவெடுத்தேன் :

எனக்கு தேவை எது என்பதை முடிவெடுத்தேன் :

இந்த தருணம் நான் உணர்ந்தேன் என் குடும்ப உறவுகள் எனக்கு தேவை என்பதை அவர்கள் அன்பு என்னை முடிவெடுக்க வைத்தது. எது வந்தாலும் நான் எப்படி இருந்தாலும் என் பெற்றோர்களுக்கு நான் தான் வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறந்த உறவுகளை பிடித்துக் கொண்டு அழுவதை விட தவிக்கின்ற உறவுகளுடன் சந்தோஷமாக வாழ முடிவெடுத்து புறப்பட்டேன்.

 நான் எங்கே இருந்தேனோ அங்கேயே சென்றேன் :

நான் எங்கே இருந்தேனோ அங்கேயே சென்றேன் :

எனது காதல் உடைந்த அந்த தருணம் மிகவும் கொடுமையானது. இருப்பினும் இருவரும் விரும்பாத உறவில் இருப்பதை விட என்றும் நல்ல தொடர்பில் இருப்போம் என்று முடிவெடுத்து பிரிந்தோம். அந்த நாள் எனது வாழ்க்கையில் என் பெற்றோர்கள் என்றும் என்னை விட்டு நீங்காத உலகம் என்பதை புரிய வைத்தது.

(சுருக்கம்: என் வாழ்க்கையில் நடந்த சில தருணங்கள் என் பெற்றோர்கள் தான் என்னை விட்டு நீங்காத உலகம் என்பதை உணர வைத்தது. அவர்கள் என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். அவர்கள் எனக்காக வாழ்வது கடவுள் எனக்கு கொடுத்த பரிசாகும். ஐ லவ் அம்மா, அப்பா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: The Day I Realised That My Parents Mean The World To Me

My Story: The Day I Realised That My Parents Mean The World To Me
Desktop Bottom Promotion