மனைவி, குழந்தை இருக்குனு தெரிஞ்சும் அவனை காதலித்தற்கு நல்ல பாடம் புகட்டிவிட்டான்!- My Story #94

Written By:
Subscribe to Boldsky

நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் நன்றாக படிக்க கூடிய ஒரு மாணவி. எப்போதும் துறுத்துறுவென இருப்பேன்..! நான் படிப்பு விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினேன்..! என் மீது எனது ஆசிரியர்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது..!

அந்த சமயத்தில் தான் எனக்கு காதல் என்ற ஒன்று வந்தது...! எனக்கு காதல் வந்தது என் ஆசிரியரின் மீது தான்.. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். பார்க்க இளமையான தோற்றம்... நன்றாக பாடம் சொல்லி தருவார் அவர்.. எளிமையான மற்றும் அனைவருக்கும் பிடிக்கின்ற மாதிரி தான் பாடம் எடுப்பார்..! அவரது வகுப்பு என்றால் என்னுடன் படிக்கும் அனைவருக்குமே பிடிக்கும். தனக்கு கிடைத்த ஒரு மணிநேரமும் எங்களுக்கு பாடம் எடுத்து எங்களை போரடிக்க செய்யமாட்டார்...!

அவரது குணங்கள் எல்லாம் எனக்கு பிடித்திருந்தது.. அந்த வயதில் அவர் எனது குரு என்பதையும் தாண்டி, நான் அவர் மீது காதல் வயப்பட்டேன்! இது எத்தனை பெரிய தவறு என்று எனக்கு அப்போது தெரியவில்லை...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவருக்கும் தெரியும்

அவருக்கும் தெரியும்

நான் வகுப்பில் அவரையே தான் பார்த்துக் கொண்டிருப்பேன்.. அவருடன் பேச வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவரிடம் சந்தேகம் கேட்பேன்.. அவரது பாடத்தில் மட்டும் எப்போதுமே முழு மதிப்பெண்களை தான் எடுப்பேன்.. நான் அவரை ஒரு மாணவி போல அல்லாமல் வித்தியாசமாக பார்ப்பது அவருக்கு புரிந்திருந்தது...!

மெசேஜ் வந்தது

மெசேஜ் வந்தது

ஒரு நாள் எனக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது.. நான் யார் என்று கேட்டேன்.. நான் தான் என்று அவரது பெயரை கூறினார் அந்த ஆசிரியர்..! உங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைத்தது என்று கேட்டேன்... நான் ஸ்கூல் டாக்குமெண்ட்டில் இருந்து எடுத்தேன் என்று கூறினார்.. அவருடனான அந்த ஆரம்ப கால செட்டிங் தொடந்தது...!

எப்போதும் காதல்

எப்போதும் காதல்

அவர் என்னுடன் காலை, இரவு என பேசிக் கொண்டே இருப்பார். பல மெசேஜ்கள் வரும்..! அவருக்கு திருமணமாகிவிட்டது, அதுமட்டுமின்றி ஒரு அழகான சின்ன குழந்தையும் இருக்கிறது என்று எனக்கு தெரியும்.. ஆனாலும் அது எதுவும் எனக்கு உள்ள அவர் மீதான காதலை தடை செய்வதாக இல்லை.. அவரே என்னிடம் வந்து ஒரு நாள் எனக்கு என் திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை.. என் பெற்றோர்களின் வேண்டுகோளுக்காக தான் என் மனைவியை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார்...!

காதலை தெரிவித்தார்

காதலை தெரிவித்தார்

அதன் பின் என்னை அவர் முழு மனதாக காதலிப்பதாகவும் கூறினார்.. நானும் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்தேன்...! என்னிடம் அவர் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.. என்னை போல ஒரு மனைவி தான் அவருக்கு வர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார்.. என்னை பல ஆசை வார்த்தைகள் கூறி அவரது வலையில் விழ வைத்தார், எங்களுக்குள் இருந்த அந்த செல்போன் பேச்சுகள் உடலளவிலும் தொடர்பு கொள்ள வைத்தது..!

உறவு

உறவு

நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்ததால் உடல் ரீதியான உறவு என்பது கொஞ்சம் சிரமமான விஷயமாக தான் இருந்தது.. ஆனால் மாதத்தில் அதிகபட்சம் மூன்று தடவைகளாவது ஒரு வெளியிடத்தில் உடல் ரீதியாக இணைந்தோம்.. அவர் தன் மனைவியை விட என்னை தான் அதிகமாக நேசிக்கிறேன் என்று கூறினார்.

சாத்தியமா?

சாத்தியமா?

எங்களது காதல் எப்படி வெற்றி பெற போகிறது என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும் கூட அவர் அடிக்கடி என் மனைவி என்னை சரியாக கவனிக்கவில்லை. என் மீது அன்பு செலுத்த உன்னை தவிர வேறு யாரும் இல்லை என்று பாவமாக பேசி அவர் மீது என்னை அதிகமாக காதல் கொள்ளவைத்தார்.. நான் அவரது பேச்சுக்களை எல்லாம் நம்பி அவரை முழு மனதாக காதலித்தேன்...!

கல்லூரியில் தெரிந்தது

கல்லூரியில் தெரிந்தது

அப்போது தான் எங்களது காதல் விஷயம் எங்களது கல்லூரிக்கு கசிய ஆரம்பித்தது.. என்னை பற்றி அனைவரும் மிக கேவளமாக பேச தொடங்கிவிட்டார்கள்.. என்னை விபச்சாரி என்ற அளவிற்கு எல்லாம் என்னை பற்றி பேசினார்கள்.. ஆசிரியர்கள் காதிற்கும் இந்த விஷயங்கள் சென்றது..

பேச்சை நிறுத்தினார்

பேச்சை நிறுத்தினார்

அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள தொடங்கினார். நான் காரணம் கேட்டதற்கு, எனக்கு மனைவி குழந்தை இருக்கிறது. நான் அவர்கள் கவனித்துக் கொள்வது மிக முக்கியம். எனக்கு அதற்கு வேலை வேண்டும். உனக்காக என் மனைவி, குழந்தை, வேலை, என் மரியாதை என எதையும் இழக்க தயாராக இல்லை.. தயவு செய்து என்னை மறந்து விட்டு உன் படிப்பை பார் உனக்கு என்னை விட நல்ல பையன் கிடைப்பான் என்று தீடிரென்று ஞானம் வந்தவர் போல கூறிவிட்டார்...

முதலிலேயே செய்திருக்கலாம்

முதலிலேயே செய்திருக்கலாம்

நான் அவரை காதலித்தது தவறு தான்..! ஆனால் அவர் செய்ததும் தவறு தானே..! எனக்கு அப்போது எதுவும் தெரியாத பருவம்.. என்னை அவர் புத்தி சொல்லி திருத்தி இருந்திருக்க வேண்டும். எனது காதலை அவர் தவறாக பயன்படுத்தி இருக்க கூடாது..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Fall in Love with Married Men he Taught Lesson to Me

i fall in love with married men he taught lesson to me
Subscribe Newsletter