இணையத்தளம் உங்க உறவின் இணைப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

கடிதங்கள் எழுதும் போது இருந்த அதே உணர்வு இப்போது நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளில் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. இணையத்தளம் வந்த பிறகு நாம் நமது உறவுகளில் இழந்தது என்ன? பெற்றது என்ன? பெரும்பாலும் இழந்தவை தான் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1

1

கடிதம் எழுதும் போது, அந்த எழுத்துக்களில், வார்த்தைகளில் ஒரு உணர்வு இருக்கும். ஒவ்வொரு முறை அதே கடித்ததை திரும்ப, திரும்ப படிக்கும் போது அதே உணர்வை நாம் பெறுவோம். இந்த உணர்வு இன்றைய குறுஞ்செய்திகளில் இல்லை என்பது தான் நிதர்சனம்.

2

2

முன்னர் சண்டையிடும் போது பேசிய வார்த்தைகள் சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று சண்டையிடும் போது செய்யும் பதிவுகள், சண்டை சரியான பிறகும் கூட, அதை நினைவுப்படுத்தும் உறுத்தலாக தான் இருக்கின்றன.

3

3

நம் கண் முன்னே இருக்கும் உறவுகளை காட்டிலும், ஊர் பெயர் தெரியாத நபர்களுடன் பழகுவது, நட்பு வைத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.

4

4

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என நாம் ஒன்று நினைத்து அனுப்பும் செய்திகள், வேறு வித கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், தேவையில்லாத சண்டைகள் உருவாகும்.

5

5

தெரியாத ஒரு நபருடன் உறவில் இணைவது, அவருடன் பேசுவது, பழகுவது என்ற ஒரு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்மறை தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

6

6

போலி கணக்குகள் மூலம், பணம், பொருட்கள் போன்றவற்றை கேட்டு வாங்கி ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது.

7

7

அன்னையர் தினம், காதலர் தினம் போன்றவற்றில் பதிவு செய்யப்படும் செல்ஃபீக்களில் மட்டும் தான் காதல் இருக்கிறதே தவிர, நேரில் காதல் இருப்பதில்லை.

8

8

இணையத்தளம், சமூக ஊடங்கங்கள் தூரத்தில் இருந்து காதலித்து வரும் நபர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கியிருக்கும் உறவுகளை இணைக்கும் பாலங்களாக இருக்கின்றன.

9

9

வீடியோ கால்கள், புகைப்பட பகிர்வுகள் போன்றவை நேரில் காண முடியாத உறவுகள் எப்படி இருக்கிறார்கள், என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Internet and Social Media Affects Relationship?

How Internet and Social Media Affects Relationship?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter