For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்ஃபீல அழகா தெரியனுமா? இந்த டிப்ஸ் படிங்க!!

|

செல்ஃபீ..!!! இன்றைய இளைஞர் எங்கு பார்த்தாலும் கையை உயர்த்துவது இதற்கு மட்டும் தான். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்திலும் இந்த செல்ஃபீ இராஜ்ஜியம் தான். அதிலும் இந்த காதலில் முத்தெடுக்கும் நபர்கள் முத்தங்கள் இட்டுக் கொண்டு அனுப்பும் செல்ஃபிக்களுக்கு அளவே இல்லை.

நடிகை ஸ்ருதியின் செல்ஃபீ அட்டகாசம்!

"சரி விடங்க, பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடறான்." முகநூலில் அப்டேட் ஆகும் ஒவ்வொரு செல்ஃபீக்கு பின்னாலும் நூற்றுக்கணக்கான அழிக்கப்பட்ட செல்ஃபிக்கள் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒளி

ஒளி

ஜன்னல் பக்கம் நின்று எடுக்கும் போது முகத்தில் ஒரு பக்கம் வெளிச்சம் படும்படியாகவும், வெளியிடங்களில் என்றால் பகலில் சூரியன் உங்கள் தலைக்கு பின்னாடி அல்லது கழுத்து பக்கம் ஒளி படுவது போல முயற்சிக்கலாம். இதன் மூலம் சூரியனின் ஒளிக் கதிர்கள் உங்கள் தலைக்கு பின்னால் வீசுவது போல தெரியும்.

பேக்-கிரௌண்ட்

பேக்-கிரௌண்ட்

செல்ஃபீ எடுக்கும் போது பின்னாடி பேக்-கிரௌண்ட்டை கட் செய்துவிடுங்கள். மேலும் முகம் தெரியும் அளவிற்கு க்ராப் செய்துவிடுங்கள்

இரண்டு கைகள்

இரண்டு கைகள்

இப்போதைய டிரென்ட் மொபைலை இரண்டு முனையில் பிடித்து எடுக்கும் செல்ஃபீக்கள்தான். எனவே, இதை முயற்சிக்கலாம்.

பல கோணங்களில்

பல கோணங்களில்

செல்ஃபீக்கு எந்த விதிகளும் இல்லை. சாதாரணமாக எடுப்பதை விட, சற்று வினோதமான கோணங்களில் எடுப்பது வித்தியாசமாக இருக்கும்.

முக பாவனைகள்

முக பாவனைகள்

வித்தியாசமான முக பாவனைகள் கொடுத்து செல்ஃபிகள் எடுங்கள். (அட இதெல்லாம் ஃபேஷன்-னுங்க!!!)

உபரிகள்

உபரிகள்

கண்ணாடி, கேப், செயின், போன்றவற்றை அணிந்துக் கொண்டு செல்ஃபீ எடுக்கலாம். கண்டிப்பாக முகநூலில் லைக்ஸ் பிச்சுக்கும். (கமெண்ட்ஸ் கூட வரலாம்.)

இது பொண்ணுங்களுக்கு

இது பொண்ணுங்களுக்கு

பூனை, நாய்க் குட்டி போன்றவற்றுடன் செல்ஃபீ எடுப்பது பெண்களின் வழக்கம். இது அவர்களை அழகாவும் காட்டும்.

மிரர் செல்ஃபீ

மிரர் செல்ஃபீ

மிரர் செல்ஃபீ என்பது கண்ணாடி முன் நின்று எடுக்கும் செல்ஃபீ வகை. முன்னர் கொஞ்ச நாட்களாக டிரென்டாக இருந்து இது நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இப்போது டிரென்டாகியுள்ளது.

முகத்தில் கவனம் செலுத்துங்கள்

முகத்தில் கவனம் செலுத்துங்கள்

சிலர் கைகளை நன்கு மேலே உயர்த்தி ஒட்டுமொத்த உடலையும் செல்ஃபீ எடுக்க முயற்சிப்பார்கள். இது பெரிதாக உங்களை அழகாக காட்டாது. எனவே, உங்கள் முகத்தில் கவனம் செலுத்தி, முகம் ஃபோக்கஸ் ஆவது போல செல்ஃபீ எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Look Good In A Selfie

Tips To Look Good In A Selfie
Desktop Bottom Promotion