எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படக் கூடிய நபரா நீங்க... இதப்படிங்க!!

Posted By:
Subscribe to Boldsky

நமது நண்பர் வட்டாரத்தில், உறவினர்களில், அக்கம்பக்கத்து வீடுகளில் ஏன் நீங்களே கூட உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கலாம். இப்படி உணர்ச்சியின் பால் அதிகமாக செயல்படும் நபர்களை மற்றவர்கள் வித்தியாசமாக தான் பார்ப்பார்கள்.

இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!!!

ஏனெனில், பொதுவாக இந்த உணர்ச்சியின் பால் இயங்கும் நபர்கள் மனித நேயம் மிக்கவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் தான் இருப்பார்கள்.இவர்களது இந்த குணாதிசயங்களே மற்றவர்களுக்கு பிடிக்காது.

திருமணம் செய்துக்கொள்ள போகும் காதலர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

இப்படி உண்மை, நேர்மை என இருக்கும் உணர்ச்சிமிக்க நபர்கள் பெரிதாக வளர்ச்சி அடைய மாட்டார்கள், கையாலாகாதவர்கள் என சிலர் எண்ணுவதுண்டு. ஆனால், மற்றவர்களை விட இவர்கள் தான் அதிக உறவுகளும், வளர்ச்சியும் காண்கிறார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகிழ்ச்சி

மகிழ்ச்சி

உணர்ச்சிவசப்பட கூடிய நபர்கள் சீக்கிரமாக மனதளவில் காயப்பட்டுவிடுவார்கள் என்பார்கள். ஆனால், இவர்கள் தான் மற்றவர்களை விட மிக அதிகமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இவர்கள் மற்றவர்களது சந்தோசங்களையும் பகிர்ந்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

உறவு நெருக்கம்

உறவு நெருக்கம்

இவர்கள் அதிகமாக அனுதாபப்படுவார்கள். மற்றவர்களது துன்பத்தை கேட்டு அதற்கு வருந்தி, மனதை தேற்றிவிடுவார்கள். இதனால், நிறைய நபர்களோடு நல்ல உறவை மேம்படுத்திக் கொள்வார்கள்.

வேலை

வேலை

தங்களுக்கு பிடிக்கும் வரையிலும் தான் ஒரு வேலையை செய்வார்கள். பிடிக்கவில்லை அல்லது ஏதேனும் தவறு நடப்பது போல தோன்றினால் அந்த வேலையை விட்டு சென்றுவிடுவார்கள்.

வேண்டும் என்ற எண்ணம்

வேண்டும் என்ற எண்ணம்

தங்களுக்கு ஒரு பொருள் அல்லது ஏதேனும் ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதில் மிகவும் தீர்க்மாக இருப்பார்கள். அதை அடையும் வரை பின்வாங்க மாட்டார்கள்.

கலைநயம்

கலைநயம்

மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட கூடிய மக்கள் வரைதல், இசை போன்ற கலை சார்ந்த வேலைகளில் நேர்த்தியானவர்களாக இருப்பார்கள்.

தனிப்பட்ட வளர்ச்சி

தனிப்பட்ட வளர்ச்சி

அதிகளவு உணர்ச்சி அலைகளுக்குள் இருப்பவர்களது தனிப்பட்ட வளர்ச்சி மேம்பட்டு காணப்படுகிறது. இவர்களுக்கு அதிகமாக கிடைக்கும் ஊக்கம் தான் இதற்கான காரணியாக இருக்கிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

நன்மைகளை போலவே இவர்களது இந்த உணர்ச்சி பிழம்பு சில சமய்ங்களில் தீமைகளையும் தருகின்றன. மற்றவர் மீது அதீத நம்பிக்கை வைக்கும் இவர்கள் சிறிதளவு ஏமாற்றம் உணர்ந்தாலும் இவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துவிடும். இதனால் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்படும்.

நேர்மையானவர்கள்

நேர்மையானவர்கள்

மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எனவே, இவர்களிடம் பொய்களை கூறி உறவை கடத்துவதற்கு முயற்சிப்பதற்குக் பதிலாக திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என உண்மையைக் கூறி உறவை மேம்பட செய்யலாம்.

சிறந்த தலைவர்கள்

சிறந்த தலைவர்கள்

இவர்கள், இவர்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்களின் நிலையை அறிந்து வேலை வாங்கும் திறன் கொண்டிருப்பார்கள். இதனால், இவர்கள் சிறந்த தலைவர்களாக திகழ்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Highly Emotional People Live a Better Life

Reasons Highly Emotional People Live a Better Life, read here in tamil.
Subscribe Newsletter