For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கே தெரியாமல் உங்கள் உணர்வுகளை சீரழிக்கும் பண்புகள்!

|

பலரும் தாங்கள் ஏன் உணர்வு ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமாலே இருப்பார்கள். "என்னன்னே தெரியல ஒரு மாதிரி இருக்கு, என்ன பண்றதுன்னே புரியல.." என புலம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே தெரியாது, அவர்களது ஒருசில பண்புகள் தான் இதற்கு காரணம் என.

ஆம், நமக்கு நடக்கும் எந்த ஒரு தீய செயலுக்கும், விளைவுகளுக்கும் தான் காரணம். அந்த காரணம் என்ன என்பதை யார் முதலில் கண்டறிந்து செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். எனவே, உங்களிடம் இருக்கும் எந்தெந்த பண்புகள் உங்கள் உணர்வு நிலையை சீரழிக்கின்றன என தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்புத்தன்மை

பாதுகாப்புத்தன்மை

அதிகமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் சரி, பாதுகாப்பே இல்லை என்ற பண்பும் சரி இவை இரண்டுமே உங்கள் உணர்வு நிலையை வெகுவாக பாதிக்கும் ஒன்றாகும். இது உங்களுக்குள் ஓர்வித அச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். இதனால் அவதிக்குள்ளாகப் போவது நீங்கள் தான்.

வழிமாற்றம்

வழிமாற்றம்

இந்த வழி சரியா? அந்த வழி சரியா? என வேறு நபர்களின் வாழ்க்கையைக் கண்டு உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு புலம்ப வேண்டாம். இதுப் போன்ற பண்புகள் தான் உங்களது உணர்வு நிலையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

கதை பேசுவது

கதை பேசுவது

வழி மாறுதல் / கதை பேசுவது, நீங்கள் செய்யும் வேலைகளுக்கு இடையே கதையடித்துவிட்டு பிறகு முற்றிலுமாக என்ன செய்ய வேண்டும் என்பதை மறப்பது, புலம்புவது போன்ற பண்புகள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் உணர்வு நிலையை சீர்குலைக்கும்.

ஒப்பீடு

ஒப்பீடு

மற்றவர்களோடு ஒப்பீடு செய்வது என்றுமே தவறு தான். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருந்தும். இது உங்கள் உணர்வு நிலையை மட்டுமின்றி, உங்கள் வேலை திறனையும் கூட வெகுவாக பாதிக்கும்.

மதிப்பற்றது

மதிப்பற்றது

ஓர் வேலையை அல்லது மனிதரை மதிப்பற்று பார்க்கும் குணமானது உணர்வுநிலையை பெருமளவு பாதிக்கும் ஒன்று. பெரும்பாலும் இது ஒருவரால் மற்றொருவர் சந்திக்கும் விஷயமாக இருக்கிறது. ஓர்நாள் நீங்களும் கூட இதை நேரிடலாம். எனவே, இந்த பண்பை விட்டொழிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Common Traits Of Emotional Insecurity

Do you know about the five common traits of emotional insecurity? read here in tamil.
Story first published: Thursday, January 7, 2016, 16:34 [IST]
Desktop Bottom Promotion