திருமணம் செய்துக்கொள்ள போகும் காதலர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

Posted By:
Subscribe to Boldsky

இவ்வுலகமே நாடக மேடை, நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய சூழலில், அதில் வரும் காதல் எனும் காட்சியில் பல வேடங்கள் ஏற்க வேண்டிய கட்டாயங்கள் உண்டாகியிருக்கிறது.

படுக்கையறையில் பெண்களை எரிச்சலூட்டும் பழக்கங்கள் - என்னப்பா நீங்க இப்படி பண்றீங்க!!

கணவனும், மனைவியுமாக வாழப்போகும் இருவர் இந்த ஓர் வேடத்தில் மட்டுமே இருந்திட முடியாது. சில நேரங்களில் தோழமையுடனும், பெற்றோருக்கு இருக்க வேண்டிய பண்புகளுடனும், தவறு செய்யும் நேரத்தில் நல்ல ஆசானாகவும் கூட இருக்க வேண்டும்.

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் - அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

இந்த வகைகளில், காதலில் உறவில் இருக்கும், நீங்கள் ஏற்க வேண்டிய வேடங்கள் குறித்து இனிக் காணலாம்....

முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்பாளர்

காப்பாளர்

உங்கள் துணைக்கு வெறும் காதலனாகவோ, கணவனாகவோ மட்டும் இருப்பது போதாது. அவருக்கு ஆபத்து அல்லது பாதுகாப்பு வேண்டிய நேரத்தில் ஓர் நல்ல காப்பாளாராகவும் இருக்க வேண்டும். இது தான், ஓர் நல்ல ஆண் மகனின் வீரத்தின் அடையாளம்.

தோழன்

தோழன்

தோழனாக, தோழியாக நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கும் பிரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. சண்டைகள் வந்தாலும் கூட அவை சுமுகமாக முடிந்துவிடும், நீங்கள் நண்பர்களாக இருந்தால்.

ஆலோசகர்

ஆலோசகர்

மனம் உடைந்து போகும் தருவாயில், தோல்வியில் துவண்டு போகும் நேரங்களில், ஓர் நல்ல ஆலோசகராக இருத்தல் வேண்டும். இது, மனதை மட்டுமின்றி, உங்களின் வாழ்க்கையையும் மேலோங்க வைக்க உதவும்.

ஆசிரியர்

ஆசிரியர்

தவறுகள் செய்யும் போது தட்டிக்கேட்கவும், நல்லதை எடுத்து கூறவும் ஓர் நல்ல ஆசானாக இருக்க வேண்டியது அவசியம்.

நம்பகமானவர்

நம்பகமானவர்

இவ்வுலகிலேயே, நூறு சதவீதம் நம்பிக்கையானவர் என்று ஓர் ஆணும், பெண்ணும் கருதுவது அவர்களது துணையை மட்டும் தான். உங்கள் இருவர் பற்றிய ரகசியம், அந்தரங்க விஷயங்கள், குடும்ப சூழல் போன்றவற்றை கட்டிக்காக்க நம்பகமானவராக இருக்க வேண்டும்.

அர்த்தநாரி

அர்த்தநாரி

மனதளவில், ஆணும் பெண்ணும் சரிப்பாதியாக இருக்க வேண்டும். நீங்கள் இருவரும் சேர்ந்து ஒருவராக அர்த்தநாரீஸ்வரர் போல திகழ வேண்டும். இது, உறவை வலுவாக்க சிறந்த கருவியாக இருக்கும்.

தாயாக

தாயாக

அன்பு, அக்கறை, அரவணைப்பு என அனைத்தையும் வளங்கவதில் ஓர் தாயாக இருக்க வேண்டியது அவசியம். பெண் மட்டுமல்ல, ஆணும் இந்த தகுதிகளோடு இருக்க வேண்டும்.

குழந்தையாக

குழந்தையாக

கொஞ்சுதல், அடம்பிடித்தல் போன்றவையும் ஓர் உறவில் இடம் பெற வேண்டும். பொன்னகை இல்லாவிடிலும் ஓர் உறவில் புன்னகை இருக்க வேண்டியது அவசியம். அதற்கு இந்த குழந்தை வேடத்தை கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Important Roles You Need To Play In Your Relationship

Do you know about the 6 important roles the two of you need to play in your relationship? read here.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more