இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதற்கான ஏழு காரணங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை சிலர் ஆதாரித்தும், சிலர் எதிர்த்தும் தங்களது குரலை முகப்புத்தகம், வாட்ஸ்-அப் போன்ற சமூக இணையங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலர்கள் அனைவரும் இது சரியான நடவடிக்கை என கூறிவருகிறார்கள். இப்படி ஒருபக்கம் செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்க, முக்கியமான பல ஆபாச இணையங்கள் இன்னமும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது என ஓர் பட்டியலையே இளைஞர் கூட்டம் வாட்ஸ்-அப்பில் பரப்பி வருகிறார்கள், மற்றும் அவற்றில் பல இணையங்கள் உண்மையிலேயே இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

இன்னும் சிலர், நீங்கள் இணையங்களில் தடுத்தாலும், சி.டி, வாட்ஸ்-அப் விடியோக்கள் என இவை தொடர்ந்து பரவிக்கொண்டு தானே இருக்கிறது எனகேள்விகளை எழுப்புகிறார்கள். ஏறத்தாழ இதுவும் குடிப்பழக்கத்தை போன்றது தான், அரசு கடைகளை மூடினாலும் கூட குடிக்க வேண்டும் என நினைப்பவன் காய்ச்சியாவது குடிக்க தான் செய்வான்...

சரி, இனி இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதற்கான எட்டு காரணங்கள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இல்லற வாழ்க்கையை கெடுக்கிறது

இல்லற வாழ்க்கையை கெடுக்கிறது

இளைஞரை தீயப் பாதையை நோக்கி வழிநடத்துகிறது என்பதை விட, பல மடங்கு ஆபாச இணையங்கள், இல்லற வாழ்க்கையை பாதிக்கிறது என்பது தான் உண்மை, ஆபாச இணையங்களில் பார்த்த அளவு, இல்லறத்தில் துணையின் செயல்பாடு இல்லையென, தங்களது துணையுடனான தாம்பத்தியத்தில் விருப்பத்தை குறைத்துக்கொள்ளும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது, மற்ற நபர்களோடு இல்லற சுவை தேடி அலைபாய வைக்கிறது.

புற்றுநோயை விட கொடியது

புற்றுநோயை விட கொடியது

புற்றுநோயை விட கொடியது மன அழுத்தம். திருமணமான ஆண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பொருளாதாரம், மற்றொன்று இல்லற வாழ்க்கை. பல ஆண்கள் தவறுதலாக ஆபாச படங்களை கண்டு அதில் ஈடுபடுவது போன்று தங்களால் உடலுறவில் செயல்பட இயலவில்லை என மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கின்றனர்.

இயற்கை குணாதிசயங்களை மாறுகிறது

இயற்கை குணாதிசயங்களை மாறுகிறது

"இந்தியாவில் வாழும் 75% பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், அப்பாவி மக்கள் போன்றவர்களின் வாழ்வியலை மறைமுகமாக சீரழிக்கிறது இந்த ஆபாச இணையங்கள்" என ஓர் சமூக ஆர்வலர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற இணையங்களில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்கள்

மற்ற இணையங்களில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்கள்

இந்த ஆபாச இணையங்களின் பாப்-அப் விளம்பரங்கள், நாம் வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் போதும் கூட இடையே தோன்றி மனநிலையை திசைமாற்றுகிறது, இந்த பாப்-அப் விளம்பரங்களின் காரணமாக தான், பல சிறுவர்களும், பெண்களும் ஆபாச படம் பார்க்கும் பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.

மனித உரிமை ஒன்றும் பறிபோய்விடவில்லை

மனித உரிமை ஒன்றும் பறிபோய்விடவில்லை

சிலர் சமூக இணையங்களில் ஆபாச இணையங்களை தடை செய்தவது தனிப்பட்ட மனிதரின் உரிமையை பறிப்பது போன்று என கூறிவருகிறார்கள். ஆனால், இது ஓர் பெரும் சமூகத்தை அழிக்கும் நச்சாக இருக்கிறது. எனவே, ஆபாச இணையங்கள் முடக்கபப்ட்டது ஓர் பூச்சிக்கொல்லி நடவடிக்கையாக தான் பார்க்கப்பட வேண்டும்.

மதுப்பழக்கத்திற்கு இணையானது

மதுப்பழக்கத்திற்கு இணையானது

ஆபாச இணையங்கள் மதுப்பழக்கத்திற்கு இணையானது ஆகும். இது ஓர் சந்ததியினரையே தனக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. இதிலிருந்து நமது அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டும். இந்தியாவில், அதிகமான கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு கூட இது ஓர் வகையில் காரணமாக இருக்கிறது. குடிப்போதையில் கற்பழிக்க நினைப்பவனை விட மாது மீதுள்ள போதையில் கற்பழிக்க முனைபவர்கள் தான் அதிகம்.

இறுதி கருத்து

இறுதி கருத்து

நாம் காமசூத்ராவை எழுதியவர்கள், சிற்பங்களின் மூலம் இல்லறத்தை வடித்தவர்கள் என்ற கருத்துகள் கூறி ஆபாச இணையங்களின் தடைக்கு எதிர்ப்பு கூறுபவர்கள், அவைகளால் சிறுவர்களோ, பெண்களோ சீர்கெட்டு போய்விடவும் இல்லை, இச்சை பசி எடுத்து அலையவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Reasons Why Indian Banned Porn

Do you know about the Seven reasons why Indian banned porn? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter