தங்கமகன் படத்துல இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா???

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் நமது குடும்பத்தில் சண்டையும் பிரிவும் ஏற்பட காரணமாக இருப்பது பணம் தான். அதை ஒதுக்கிவைத்துவிட்டு, உறவை முன்னிறுத்தி பார்க்கும் பட்சத்தில் உறவு மட்டுமின்றி வாழ்க்கையும் மென்மேலும் செழிப்படையும். ஆனால், இந்த வர்த்தக உலகில் நம்மில் 90% பேர் பணத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறோம்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் அனைவரும் கவனிக்கவேண்டியவை!!!

சமீபத்தில் வெளிவந்த தங்கமகன் திரைப்படத்தில் இருந்து உறவுகள் மற்றும் வாழ்க்கையை சார்ந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை சில இருக்கின்றன. நட்பு, காதல், இல்லறம், மனைவி, உறவுகள் என நமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் மோசமான தருணத்தில் இருந்து எப்படி மீண்டு எழ வேண்டும் என நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறிய சண்டைகள்

சிறிய சண்டைகள்

சின்ன, சின்ன சண்டைகளுக்கு உடனடியாக தீர்வுக் காணவில்லை என்றால் அது அந்த உறவு முற்றிலுமாக முறிந்துபோக காரணமாகிவிடும். அது காதலாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி.

காதல் தோல்வி முடிவல்ல

காதல் தோல்வி முடிவல்ல

காதல் தோல்வி என்பது நமது வாழ்க்கையின் முடிவல்ல. அதன் பிறகும் கூட நமது வாழ்க்கை சிறப்பாகவும், நமக்கான சிறந்த துணையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

எதையும் ஏற்கும் மனைவி

எதையும் ஏற்கும் மனைவி

அழகான மனைவியைவிட, ஓர் ஆணுக்கு அன்பான, பண்பான மனைவி தான் தேவை. கணவன் தோல்வியுற்று அல்லது சூழ்ச்சியில் சிக்கித்தவிக்கும் போது, அந்த தருணத்தில் மனைவியின் அரவணைப்பும், பாசமும் தான் அந்த ஆணை மீண்டும் எழுந்து வெற்றிபெற செய்கிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

வாழ்க்கையின் ஒருசில தருணங்களில் மட்டுமே பணம் முக்கியமாக இருக்கும். மற்றபடி உறவுகள் தான் நமது வாழ்க்கை பயணத்தில் முழுவதுமாக துணை நிற்கும்.

உறவுகளே சிறந்தது

உறவுகளே சிறந்தது

வாழ்க்கையின் மோசமான தருணங்களில் ஒருவன் மீண்டும் புத்துணர்ச்சி அடைய, பழைய நிலைக்கு திரும்ப பணத்தை மட்டும் வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது. உணர்வுகளை மதிக்க தெரிந்த உறவுகள் மிகவும் முக்கியமானவை.

வேண்டா பணம், கூடா நட்பு

வேண்டா பணம், கூடா நட்பு

தீய வழியில் வந்த பணமும், நட்பும் என்றும் நிலைக்காது, நம்மையும் நிம்மதியாய் இருக்கவிடாது.

நட்பு

நட்பு

பருவ வயதில் இருந்து முதுமை வரை நம்முடன் எல்லா தருணத்திலும், இன்பத்திலும், துக்கத்திலும் துணை நிற்க ஓர் நட்பு தேவை. பணத்தை விட அது தான் பெரிய சொத்து.

தோல்வியை கண்டு துவண்டுவிடக் கூடாது

தோல்வியை கண்டு துவண்டுவிடக் கூடாது

சூரிய அஸ்தமனம் நிரந்திரம் அல்ல. சில மணி நேரங்களில் மீண்டும் சூரிய உதயம் ஏற்படும். இது ஓர் சிறந்த வாழ்க்கை பாடம். தோல்வியைக் கண்டு துவண்டுவிட வேண்டாம். நமது முயற்சி தான் அதை தாண்டி இருக்கும் வெற்றியை நமது கைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Tips From Movie Thangamagan

There are lots of things we all need to learn about relationship from the movie Thangamagan.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter