ஆண்கள் உடலுறவுக் கொள்ள தயங்குவதற்கான காரணங்கள்!!!

By: John
Subscribe to Boldsky

உடலுறவு சார்ந்த சில குழப்பங்களினாலும், தெளிவான அறிவின்மையினாலும் சில ஆண்கள் உடலுறவுக் கொள்ள தயங்குவது உண்டு. அவர்களே அவர்களால் சரியான முறையில் அல்லது சீரான முறையில் உடலுறவுக் கொள்ள முடியாது என்று நினைப்பதும் ஒருவகையான காரணமாகும்.

முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

இன்னும் சிலர், பார்ன் (Porn) வீடியோக்களை பார்த்துவிட்டு, அந்த அளவு உடலுறவுக் கொள்வது தான் முழு ஆண்மை, நம்மால் அப்படி செய்ய இயலாதே என்று தயங்குவது உண்டு. ஆனால், அது சுத்த பொய் என்பது ஆண்கள் அறிவதில்லை.

உடலுறவு விஷயத்தில் ஆண்களுக்கு ஏற்படும் பயங்கள்!!!

இதுப்போன்ற பல காரணங்களினால் ஆண்கள் உடலுறவுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர், அவற்றைப் பற்றி இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கதிர்வீச்சு

கதிர்வீச்சு

நாம் இப்போது பயன்படுத்தும் மடிக்கணினிகளில் இருந்து கைப்பேசி வரை அனைத்தும் அதிகமான கதிர்வீச்சை ஏற்படுத்துவது ஆகும். இதனால் ஆண்மை குறைவு ஏற்படும் என்பது உண்மையே. இதை மனதில் கொண்டு, தங்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்திலேயே சிலர் உடலுறவுக் கொள்ள தயங்குகின்றனர்.

அளவு

அளவு

பல ஆண்கள் உடலுறவுக் கொள்ள தயங்குவதன் காரணம், அவர்களது ஆண்குறியின் அளவு சிறிதாக இருப்பதாக அவர்கள் எண்ணுவதே. உண்மையில் இந்திய ஆண்களுக்கு விறைப்புத்தன்மையின் போது 5 - 5.5 அங்குலம் தான் அளவு இருக்கும். நீங்கள் பார்க்கும் அந்த மாதிரியான படங்களில், வீடியோ வெவ்வேறான கோணங்களின் எடுக்கப்படும் காரணத்தினால் (angle) தான் ஆண்குறி பெரிதாக காட்டப்படுகின்றது.

பயம்

பயம்

சில ஆண்கள் இயற்கையாகவே உடலுறவுக் கொள்வதற்கு தயங்குகின்றனர் என்றும், பயப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சுய இன்பம்

சுய இன்பம்

சுய இன்பத்தில் ஈடுப்படுவதனால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்று கூறப்படுவதனால், சுய இன்பத்தில் ஈடுப்படும் ஆண்கள் உடலுறவுக் கொள்ள தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், சுய இன்பத்தில் ஈடுபடுவதனால் உடலுறவு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராது.

விந்து வெளிபடுதல்

விந்து வெளிபடுதல்

ஒரு சிலருக்கு சுய இன்பம் காணும் போதும் சரி, உடலுறவுக் கொள்ளும் போதும் சரி விந்து வெளிபடுவதற்கு தாமதம் ஆகும். இதை ஆண்கள் குணப்படுத்த முடியாத பிரச்சனையாக கருதி உடலுறவில் ஈடுபட தயங்குகின்றனர். உண்மையில் இவற்றை எல்லாம் நல்ல உணவுப் பழக்கங்களின் மூலமாகவே எளிதாக சரி செய்துவிடலாம்.

சந்தேகம்

சந்தேகம்

அவர்களது துணையின் மேல் சந்தேகம் ஏற்படும் போது, ஆண்கள் உடலுறவுக் கொள்ள தயங்குகின்றனர்.

வேறு உறவு...

வேறு உறவு...

சில ஆண்கள் வேறு பெண்ணோடு தொடர்பில் இருக்கும் போது, உடலுறவுக் கொள்ள தயங்குகின்றனர்.

கட்டுகதைகள்

கட்டுகதைகள்

உடலுறவு சார்ந்த சில கட்டுகதைகளை கேட்டு, அவற்றை நம்பி உடலுறவில் ஈடுபட பல ஆண்கள் தயங்குகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why A Man Could Say No To Intercourse

Do you know about the reasons why a man could say no to intercourse? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter