வயது மூத்த பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபடுவது நல்லது என்பதற்கான ஐந்து காரணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

டேட்டிங் செல்வதெல்லாம் ஒருசில வருடங்களுக்கு முன்பு டிஸ்னிலாண்ட் செல்வது போல ஆச்சரியமாக இருந்தது. ஆனால், தற்போதைய எம்.என்.சி வாழ்க்கை முறை அதை டேட்ஸ் (பேரீச்சம்பழம்) சாப்பிடுவதை போன்று ஆக்கிவிட்டது. வாரமெல்லாம் சாட்டிங், வார இறுதியில் டேட்டிங் என்று ஜமாயக்கின்றனர்.

முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் - ஜல-புல-ஜங்க்ஸ்!!!

திருமணமாகாத இளசுகளை விட, திருமணமான தினுசுகள் தான் அதிகம் டேட்டிங் செல்கின்றனர் என தங்களது வயிற்றெரிச்சலை கொட்டுகின்றனர் ஐ.டி வாசிகள். ஏனெனில், திருமணத்திற்கு முன்பு டேட்டிங் சென்றால் பல தடைகள், சந்தேகங்கள் என்ற பயம் இருக்கும். ஆனால், திருமணமானவர்களோடு டேட்டிங் என்றால் எந்த பிரச்சனையும் இல்லையாம்.

டேட்டிங்கின் போது இதெல்லா பேசினால் பெண்களுக்கு பிடிக்காது !!!

இதில், வயது மூத்த பெண்களோடு டேட்டிங் செல்வது மிக நல்லது என்று வேறு ஒரு கும்பல் பரவலாக பேசி வருகிறது. அதில், வயது மூத்த பெண்களோடு டேட்டிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் என அவர்கள் கூறும் ஐந்து விஷயங்கள்.....

கூச்ச சுபாவம் கொண்ட நபருடன் டேட்டிங்கா? இந்த டிப்ஸை படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்களை திருப்திப்படுத்துவது

பெண்களை திருப்திப்படுத்துவது

"ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி..." என்ற வசனத்திற்கு ஏற்ப, ஓர் பெண் என்ன எதிர்பார்க்கிறாள் என அறிவது மிகவும் கடினம். அதிலும் இந்த விஷயங்களில் ஓர் பெண் எதை எதிர்பார்ப்பால், எது அவளுக்கு பிடிக்கும் என அறிந்து செயல்படுவது எல்லாம் மிகவும் கடினமாம். இதுவே, வாது மூத்த பெண் என்றால் அவளே அவளுக்கு என்ன வேண்டுமோ அதற்கு ஏற்ப நடந்துக்கொள்வார்களாம்.

தன்னம்பிக்கை அதிகம்

தன்னம்பிக்கை அதிகம்

இளைய பெண்களுக்கு டேட்டிங் செல்லும் அளவு துணிச்சல் இருந்தாலும், தன்னம்பிக்கை குறைவு தானாம். இதுவே, வயது மூத்த பெண் என்றால், தன்னம்பிக்கை மட்டுமின்றி செயல்பாடுகளிலும் உறுதியோடு இருப்பார்களாம். (இது அவங்க புருஷனுக்கோ, இவங்க பொண்டாட்டிக்கோ தெரிஞ்சா, தன்னம்பிக்கையோட சேத்து, கை, காலும் முறியும்!!!)

இவங்களுக்கு பயம் இல்லையாம்....

இவங்களுக்கு பயம் இல்லையாம்....

போக்கிரியில் இளையதளபதி கூறுவது போல இவங்களுக்கு இந்த விஷயத்தில் பயமில்லையாம். படுக்கையில் கூட தங்களுக்கு என வேண்டும் என தெரிந்து துணிந்து செயல்படுவர்களாம் வயது மூத்த பெண்கள்.

அனுபவம்

அனுபவம்

வயதில் மூத்த பெண்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருப்பதால், தவறு ஏற்பட வாய்ப்புகள் இருக்காதாம். ஒருவேளை ஏதேனும் நடந்தால் கூட அந்த அழுத்தத்தையும், பிரச்சனையையும் எதிர்கொள்ளும் தன்மை இவர்களுக்கு இருக்குமாம். (வேலைக்கு போயி எதுல அனுபவம் பாக்க சொன்னா, இவங்க எதுல அனுபவம் பாக்குறாங்க.. கடவுளே!!!)

சுதந்திரமானவர்கள்

சுதந்திரமானவர்கள்

வயது மூத்த பெண்கள் டேட்டிங்கிற்கு பிறகு தாங்கள் மற்றும் தங்களது டேட்டிங் பாட்னரையும் சுதந்திரமாக உணர செய்வார்களாம். காட்டாயப்படுத்துதல் இருக்காதாம். (பண்றதே பல வகையில தப்பு, இதுல ஃப்ரீடம் ரைட்ஸ் பத்தியெல்லாம் பேசுறது நல்லா இல்ல ஆமா!!!)

ஆண்களுக்கான நன்மைகள் என அவர்கள் கூறுவது

ஆண்களுக்கான நன்மைகள் என அவர்கள் கூறுவது

வயது மூத்த பெண்களுடன் டேட்டிங் செல்வதால், செலவு, தொந்தரவு, பின்தொடர்தல், ப்ளாக் மெயில் போன்ற எந்த பிரச்சனையும் இல்லையாம். (ஓஹோ, இதுல இப்படி ஒண்ணு இருக்கோ!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Very Good Reasons To Date An Older Woman

Do you know about the reasons and why Dating An Older Woman is a good thing? read here.
Story first published: Wednesday, July 29, 2015, 13:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter