கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையில் இருக்கும் நன்மைகள்!!!

By: John
Subscribe to Boldsky

தற்போதைய இன்டர்நெட் வாழ்வியல் முறையில், சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றன. ஃபேஸ் புக், வாட்ஸ்-அப்களில் குரூப் உருவாக்கி அதில் ஓர் குடும்பமாக வாழ்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது.

அதிலும் ஃபிளாட்டுகள் வந்தவுடன் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டது கூட்டு குடும்ப வாழ்வியல் முறை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது ஆகும்.

கோடை விடுமுறைகளில் மட்டுமே ஒன்றாக இருப்பவர்கள் சிலர் இருக்கின்றனர். அதையும் கூட தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து வருகிறது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களும், நன்மைகளும் கொண்ட கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பற்றி இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொருளாதாரம்

பொருளாதாரம்

கூட்டுக் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நிறைய நன்மைகள் இருக்கின்றன. பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம், பொழுதுபோக்கு செலவுகள், வாடகை என அனைத்திலும் நிறைய பணம் சேமிக்க முடியும்.

வேலை பளுக் குறைவு

வேலை பளுக் குறைவு

அதே போல வேலை பளு குறைவாக இருக்கும், வீட்டு வேலைகளில் இருந்து, வெளி வேலைகள் வரை அனைத்திலும் சுமை குறைவாக இருக்கும். உதாரணமாக சமையல் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என அனைத்திலும் உதவுக்கு ஆட்கள் இருப்பார்கள்.

நல்லொழுக்கங்கள்

நல்லொழுக்கங்கள்

கூட்டுக் குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு மத்தியில் நல்லொழுக்கம் நிறைய இருக்கும். வாழ்வியல் முறை, பந்தம், பற்று, உதவி செய்தல், ஊக்கம் அளிப்பது, பரந்த மனப்பான்மை என பல வகைகளில் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

 ஓய்வு நேரம்

ஓய்வு நேரம்

பெண்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதன் மூலமாக, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மற்றொருவர் உதவி செய்வார். எனவே, நல்ல ஓய்வு எடுக்க முடியும்.

குறைந்த செலவு

குறைந்த செலவு

எங்கு செல்வதனாலும், எது செய்வதனாலும் ஏற்படும் செலவு குறைவாக இருக்கும். உதாரணமாக பிக்னிக் செல்வதாக இருக்கட்டும், வெளியூர் செல்வதாக இருக்கட்டும், பண்டிகைகள் கொண்டாடுவதாக இருக்கட்டும், அனைவரும் சேர்ந்து செலவு செய்யும் போது செலவு குறைவாக ஏற்படும்.

சந்தோஷம்

சந்தோஷம்

கூட்டுக் குடும்பங்களில் சந்தோஷம் நிறைய இருக்கும். உங்களது சந்தோஷம் மட்டுமின்றி மற்றவர்களது சந்தோசமும் கூட பகிர்ந்துக் கொள்ள முடியும். அதே போல உங்கள் சந்தோசத்தை பகிர்ந்துக் கொள்ளும் போதும் அது பன்மடங்கு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Advantages of Indian Joint Family System

Do You Know About The Advantages of Indian Joint Family System? Read here.
Story first published: Monday, May 11, 2015, 13:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter