For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்!!!

By Ashok CR
|

ஒரு மனிதனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பம் என்று வண்டு விட்டால் இந்த உலகத்தை தனக்கு காட்டிய தன் அன்னையிலிருந்து, உடன்பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு முக்கியமானவைகள். நம் வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கை கொடுத்து நிற்பது நம் குடும்பத்தாரே.

அனைவரின் வாழ்க்கையிலும் இது பொருந்தும். இன்றைய காலகட்டத்தில் குடும்ப அமைப்பு மாறி கொண்டே வருகிறது. முன்பெல்லாம் குடும்பம் என்றால் அது பெரிய கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். ஆனால் அது இப்போது அடியோடு மாறி விட்டது. இப்போதுள்ள குடும்பங்கள் எல்லாம் சிறிய எண்ணிக்கையில் சின்ன சின்னதாக மாறி விட்டது.

Ill Effects Of Living In A Joint Family

இவ்வகை பெரிய மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? இன்றைய கால கட்டத்தில் கூட்டு குடும்பம் என்பது பல பேருக்கு பெரிய சுமையாகவும் பிரச்சனையாகவும் மாறி விட்டது. பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் போது அது ஏன் அவ்வகை மாற்றங்களை அடைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கூட்டு குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கிறது. ஆனாலும் அதில் பல குறைகளும் இருக்கத் தான் செய்கிறது. கூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டவர் என்றால் அவைகளை பற்றி உங்களுக்கு நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டு குடும்பத்தில் வாழ்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளையும் அதனால் ஏன் குடும்பம் பிரிகிறது என்பதையும் இப்போது பார்க்கலாமா?

பழமை விரும்பியான குடும்பத் தலைவர்

கூட்டு குடும்பம் என்று வந்து விட்டால் வீட்டின் மூத்தவரே அந்த குடும்பத்தின் தலைவராக இருப்பார். அவர் வயதானவராகவும் கண்டிப்பு தன்மையுடனும் விளங்குவார். இவ்வகை குடும்ப அமைப்பில் தான் ஆச்சாரமும் பழமையான கலாச்சாரங்களும் கடைப்பிடிக்க படுகின்றன. இது அங்கு வாழும் பலருக்கும் எதிர்மறையான மனநிலையை உண்டாக்கி விடும். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக இது விளங்குகிறது. எப்போதுமே குடும்ப உறுப்பினர்கள் தான் குடும்ப தலைவருக்காக விட்டு கொடுத்து வாழ வேண்டியிருக்கும். கூட்டு குடும்பத்தில் வாழ்வதற்கான முக்கியமான டிப்ஸாகவும் இது கூறப்படுகிறது.

முயற்சி எடுப்பதில் தடைபாடு

கூட்டு குடும்பத்தில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்சனையானது தொடக்க முயற்சி இல்லாதது. கூட்டு குடும்பத்தில் முயற்சி எடுக்க பல கைகள் உள்ளதால் யாருமே தொடக்க முயற்சி எடுக்க சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. இப்படி பொறுப்பை சுமக்க யாரும் முன்வராததால் இவ்வகை அமைப்பில் வாழ பலருக்கு பிடிப்பதில்லை. கூட்டு குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் ஒரு சில உறவுகள் சார்ந்த டிப்ஸை பின்பற்றியாக வேண்டும்.

சோக நிலை

கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது அங்குள்ள பெண்களே. அந்த குடும்ப அமைப்பில் பொதுவாக பெண்கள் எல்லாம் அடுப்பங்கறையில் அடைபட்டு கிடப்பதால் அவர்களின் திறமைகள் எல்லாம் வீணாய் போகும். இப்படிபட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் பொதுவாக கூட்டு குடும்பத்தில் வசிக்கும் பெண்கள் அந்த சூழலை விட்டு வெளியேற விரும்புவதுண்டு. மேலும் கூட்டு குடும்ப சூழலோடு ஒத்துப் போய் வாழ்வதிலும் பெண்கள் சிரமப்படுவார்கள். அதனால் உறவுகள் சார்ந்த டிப்ஸ் இருந்தால் மட்டும் பத்தாது; சற்று கவனமாக கையாள வேண்டும்.

தனிமை

இள வயது தம்பதிகளுக்கு கூட்டு குடும்பத்தில் உள்ள பெரிய பிரச்சனையே அவர்களுக்கு போதிய தனிமை கிடைப்பதில்லை. உங்களுக்கு உங்கள் மனைவி அல்லது குழந்தைகளுடன் தனிமையில் நேரத்தை போக்கிட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கூட்டு குடும்பத்தில் எப்போதுமே பல பேருடன் சேர்ந்த இருப்பதால் அன்பு என்பது எப்போதுமே வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் கூட உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது செலவிட தவற விடாதீர்கள்.

பொருளாதார சூழ்நிலை

கூட்டு குடும்பத்தில் குடும்பத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது. ஆனால் இப்படி பகிரும் நிலை இருப்பதால் ஒரு சிலர் ஒழுங்காக கை கொடுக்காமல் சும்மா இருப்பார்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். அவரவர் கடமை மற்றும் பொறுப்புகளை ஒழுங்காக செய்யாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை குறை கூறி கொண்டே இருப்பார்கள்.

இவை அனைத்துமே கூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிரச்சனைகள். அதனால் உஷாராக இருங்கள்!

English summary

Ill Effects Of Living In A Joint Family

There are certain advantages of living in a joint family, on the other hand, there are several disadvantages too. If you are the one facing the ill effects of a joint family then you would know better. Here are a certain ill effects of living in a joint family and the reasons for why a nuclear family is always better.
Story first published: Tuesday, December 24, 2013, 19:05 [IST]
Desktop Bottom Promotion