For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் 8 வகையான உறவுமுறைகள்!!!

By Maha
|

இந்த உலகில் கற்பனை, நம்பிக்கை, தவறான எண்ணம் போன்றவைகளுக்கு பஞ்சமே இல்லை. அத்தகைய கற்பனையானது உறவுகளிலும் உள்ளது. எப்படியெனில் ஒரு உறவுமுறையை எடுத்தால், அந்த உறவுமுறையுள்ளவர்கள், இப்படி தான் என்று மனதில் நினைப்பது தான். உதாரணமாக, மாமியார் மருமகள் என்றதும், அனைவரும் சொல்வது என்னவென்றால், அந்த உறவுமுறையுள்ளவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள், இருவரும் நிச்சயம் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்பது தான். ஆனால், உண்மையில் இத்தகைய நிலையான எண்ணமானது சரியானது அல்ல.

ஏனெனில் இவை அனைத்தும் மனதில் கற்பனையாக ஒரு சில நடவடிக்கைகளைக் கொண்டு, மனதில் உருவாக்கப்பட்டவையே ஆகும். இத்தகைய மனதில் உருவாக்கப்பட்டு, அழியாமல் இருக்கும் ஒரு சில உறவுமுறைகள் பற்றிய தவறான எண்ணங்களை முற்றிலும் மாற்ற வேண்டும். சொல்லப்போனால், இந்த மாதியான தவறான எண்ணங்கள் மனதில் நிலவுவதற்கு நமது சமூகமும் ஒரு காரணம். ஏனெனில், இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்து விட்டால், அது அப்படியே காட்டுத்தீ போல் பரவி, அந்த விஷயம் அப்படியே மக்கள் மத்தியிலும், அவர்கள் மனதிலும் அழியாமல் பதிந்துவிடும்.

இப்போது அந்த மாதிரி தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் உறவுமுறைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இத்தகைய உறவுமுறைகள் மீது எண்ணியிருந்த தவறான கருத்தை மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாமியார் மருமகள்

மாமியார் மருமகள்

உலகில் உள்ள அனைவருமே மாமியார் மருமகள் உறவுமுறைப் பற்றி கூறும் போது, அனைவரும் நினைப்பது ஒத்துப்போகாது என்பது தான். ஆனால், மருமகளாக இருப்பவர்கள், தங்கள் மாமியாரை சரியான தோழியாக நினைத்து, அவர்களை நடத்தினால், இருவரும் நல்ல அம்மா, பொண்ணாக இருப்பார்கள். இதற்கு வேண்டியது சந்தர்ப்பம் தான். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்தால், தானே அவர்களது குணத்தை வெளிக்கொணர முடியும்.

ஆண் பெண் நட்புறவு

ஆண் பெண் நட்புறவு

நட்புறவில் ஆண் பெண் நட்புறவு நிலைக்காது என்று உலகில் உள்ள அனைவருமே சொல்வது தான். ஆனால், அந்த எண்ணம் அனைத்தும் நண்பர்களாக பழகுபவர்களின் மனதைப் பொறுத்தது. அவர்கள் மனதில் நண்பர்களாக நினைத்து பழகினால், நிச்சயம் நீண்ட நாட்கள் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். இதனை மாற்ற அவர்களது மனதைத் தவிர மற்றவர்களால் முடியாது.

முன்னாள் காதலன்/காதலி

முன்னாள் காதலன்/காதலி

காதல் செய்து தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் நண்பர்களாக பழகுவது நல்லதில்லை, அவர்களால் நண்பர்களாக பழகுவதற்கு முடியாது என்று பலர் சொல்வார்கள். ஏன் இருக்க முடியாது? ஒரு முறை காதலர்களாக இருந்த இரண்டு பேர் இடையே, ஒரு உண்மையான நட்பு மற்றும் மரியாதை இருக்க முடியாது? இது மிகவும் அபத்தமான எண்ணம்.

முதலாளி மற்றும் தொழிலாளி

முதலாளி மற்றும் தொழிலாளி

அனைத்து முதலாளிகளும் பயங்கரமானவர்கள் இல்லை. முதலாளியிடம் நட்புறவு கொள்வது நடக்காத ஒன்றும் இல்லை. ஏனெனில் உங்கள் முதலாளியிடம் உண்மையாக நடந்து கொண்டால், நிச்சயம் அவர்களுடன் ஒரு நல்ல நட்புறவு, அலுவலகத்திற்கு வெளியேயும் தொடரும்.

வயதான ஆண் மற்றும் இளம் பெண்

வயதான ஆண் மற்றும் இளம் பெண்

எப்போதும் ஒரு வயதான ஆணுடன் ஒரு இளம் பெண் துணைக்கு இருந்தால், அப்போது அனைவரது மனதிலும் தோன்றும் இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றும். ஒன்று அந்த பெண் இவர் இறந்த பிறகு பணத்தை அனுபவிப்பதற்காக பழகலாம் அல்லது அந்த முதியவருக்கு ஆசை இருக்கலாம் என்று தான். ஏன் வெவ்வேறு தலைமுறையினரிடம் நட்புறவு இருக்கக்கூடாதா? என்ன உலகம் இது?

பெண்கள்

பெண்கள்

பெண்களுக்குள் நிச்சயம் பொறாமை இருக்கும். ஆனால் நண்பர்களாக இருக்கும் பெண்கள் நிச்சயம், தன் தோழியின் மீது பொறாமை கொள்ளமாட்டாள். ஏனெனில் பெண்களது நட்புறவும் மிகவும் வலிமையானது. அவர்கள் ஆண்கள் எப்படி தன் தோழனுக்கு எப்போது ஆதரவாக இருப்பார்களோ, அதேப்போல் பெண்களும் தன் தோழிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

காதல்

காதல்

காதல் எதையும் எதிர்பார்க்காமல் வருவது என்று சொல்வார்கள். ஆனால் அது அன்றைய காதல் தான் தவிர. இன்றைய காலத்தில் உள்ள காதலில் நிச்சயம் எதிர்பார்ப்பானது இருக்கும்.

நீண்ட தூர உறவுகள்

நீண்ட தூர உறவுகள்

மக்கள் நீண்ட தூர உறவுகள் வேலைக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா? இந்த நவீன உலகில் காதலிப்பவர்கள் நிச்சயம் ஒரே இடத்தில், ஊரில் வேலை செய்ய முடியாது. அவர்கள் தங்கள் வேலைக்காக வேறு ஊரில் தங்கியிருப்பார்கள். இதனால் வீட்டிறக் அருகில் உள்ளவர்களது பேச்சாலேயே, நல்ல உறவானது கெட்ட நிலைக்கு வந்துவிடும். ஆனால் அன்பு, நம்பிக்கை, உண்மை இருந்தால், எங்கிருந்தாலும், அந்த உறவு நீடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Relationship Stereotypes You Need To Break | தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் 8 வகையான உறவுமுறைகள்!!!

When we have certain preconceived notions about a set of people or relationships, it is called a stereotype. Most of the time, we go by our long held stereotypes about a relationship. Here are some of the stereotyped relationships in our society that needs to break out and be redefined.
Desktop Bottom Promotion