Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மஞ்சள் பூசணியை இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Yellow Pumpkin Gravy Recipe In Tamil: இதுவரை மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல், சாம்பார் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த மஞ்சள் பூசணியைக் கொண்டு கிரேவி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா?
இல்லையென்றால் அடுத்தமுறை மஞ்சள் பூசணியை வாங்கினால், கிரேவி செய்யுங்கள். இந்த மஞ்சள் பூசணி கிரேவி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மஞ்சள் பூசணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் பூசணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மஞ்சள் பூசணி - 250 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி - 1 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மஞ்சள் பூசணியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய மஞ்சள் பூசணி, பச்சை மிளகாய்
மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் கடலை மாவை சேர்த்து, ஒருமுறை நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தட்டையான தட்டில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ளதை
போட்டு பரப்பி விட்டு, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 5 நிமிடம் வேக
வைத்து எடுக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகம், முந்திரி, மிளகாய் தூள் மற்றும் காஷ்மீரி
மிளகாய் தூளை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, 1 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 ஸ்பூன் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பூசணிக்காயை ஒரு தட்டில் கவிழ்த்து தட்டி,
கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை கொதித்துக்
கொண்டிருக்கும் கிரேவியுடன் சேர்த்து கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து
மிதமான தீயில் வைத்து வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான மஞ்சள் பூசணி கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











