Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க!
Weight Loss Omelette Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் பெரும்பாலும் காலை உணவுகளானது சுவையில்லாமல் சப்பென்று இருக்குமா? அப்படியானால் புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஆம்லெட்டை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆம்லெட் சுவையாக இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
முக்கியமாக இந்த பன்னீர் முட்டை ஆம்லெட்டை காலை வேளையில் சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும். அதோடு உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கும். மேலும் இந்த ஆம்லெட்டை காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையிலும் படிக்கும் பிள்ளைகளின் பசியைப் போக்க செய்து கொடுக்கலாம்.

இந்த வெயிட் லாஸ் ஆம்லெட் குறித்து ஈரோடு அம்மாச்சி என்னும் இன்ஸ்டா தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெயிட் லாஸ் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த வெயிட் லாஸ் பன்னீர் முட்டை ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 100 கிராம்
* உப்பு - சிறிது
* முட்டை - 3
* எண்ணெய் - 2 ஸ்பூன் + 1 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பன்னீர் துண்டுகளை சேர்த்து சிறிது உப்பு
தூவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு ஒருமுறை அரைத்து, ஒரு
பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேறப்
உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை அரைத்து வைத்துள்ள முட்டை கலவையுடன்
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி
பரப்பி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வெயிட் லாஸ் ஆம்லெட்
தயார்.



Click it and Unblock the Notifications