Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..!
Weight Loss Sprouted Ragi Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அதிகரித்த உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் காலை வேளையில் கஞ்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் முளைக்கட்டிய ராகியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, நீண்ட நேரம் வயிறும் நிரம்பியிருக்கும், உடலுக்கு ஏராளமான சத்துக்களும் கிடைக்கும்.

உங்களுக்கு இந்த முளைக்கட்டிய ராகி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முளைக்கட்டிய ராகி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு தயாரிப்பதற்கு..
* ராகி - 1/2 கிலோ
கஞ்சி தயாரிப்பதற்கு...
* முளைக்கட்டிய ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 1 கப் + 5 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
பிற பொருட்கள்...
* தயிர் - 4 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)
* சின்னவெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் 1/2 கிலோ ராகியை நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் போட்டு மூட்டை
கட்டி, 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது ராகி
முளைக்கட்டிவிடும்.
* 8 மணிநேரம் கழித்து அந்த மூட்டையைத் திறந்தால், ராகி
முளைக்கட்டியிருக்கும். பின் அதை ஒரு துணியில் போட்டு 2 நாட்கள்
நிழலில் உலர்த்த வேண்டும்.
* பிறகு நன்கு காய்ந்த முளைக்கட்டிய ராகியை மிக்சர் ஜாரில் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை சலித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு
வைத்துக் கொண்டால், 3 மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 கப் அரைத்த முளைக்கட்டிய ராகி மாவை
எடுத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1/2 பச்சை
மிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 5 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள ராகியை சேர்த்து தொடர்ந்து 5
நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, ராகியின் மேல் உள்ள நுரையை கரண்டியால்
அகற்றிவிட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து, நன்கு அடித்து கலந்து
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,
கொத்தமல்லியை சேர்த்து கலந்து, ராகி கஞ்சியை ஊற்றி கிளறினால், சுவையான
முளைக்கட்டிய ராகி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
