Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த கஞ்சியை வாரம் 2 முறை குடிங்க.. எலும்புகளும் வலுவாகும்.. உடல் வலியும் பறந்து போகும்..
Ragi Ulunthu Kanji Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அடிக்கடி ஏதாவது சத்தான ரெசிபிக்களை செய்து கொடுப்பீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் இருப்போர் தினமும் கை, கால், உடல் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? அதற்காக நிறைய மருந்து மாத்திரைகளையும் எடுத்து வருகிறார்களா?
உங்கள் பிள்ளைகளின் எலும்புகளை வலிமைப்படுத்த வேண்டுமா? அப்படியானால் ராகியும், கருப்பு உளுந்தும் கொண்டு கஞ்சி செய்து கொடுங்கள். இந்த ராகி கருப்பு உளுந்து கஞ்சியை வாரம் 2 முறை குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் மற்றும் கை, கால், மூட்டு வலிகள் பறந்து போகும். அதுவும் ராகி, கருப்பு உளுந்து போன்றவற்றை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடமாட்டார்களா?

அப்படியானால் அவர்களுக்கு இந்த பக்குவத்தில் கஞ்சி செய்து கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம். அனைத்து வயதினரும் இந்த கஞ்சியைக் குடிக்கலாம். அதுவும் இதை காபி, டீ குடிப்பதற்கு பதிலாக குடிக்கலாம்.
உங்களுக்கு ராகி கருப்பு உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கருப்பு உளுந்து கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி - 1/2 கப்
* கருப்பு உளுந்து - 1/2 கப்
* ஏலக்காய் - 3
* சுக்கு - சிறிய துண்டு
* தண்ணீர் - 6 கப்
* வெல்லம் - 1 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1 /2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகியை சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து, அதையும்
நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதையும் தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த ராகி மற்றும் கருப்பு உளுத்தம்
பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய், சிறிது சுக்கு சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியை சேர்த்து, அத்துடன் 6 கப்
நீரை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும்
வரை தொடர்ந்து மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கரையும் வரை கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ராகி
கருப்பு உளுந்து கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
