Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த கஞ்சியை காலையில் ஒரு கப் குடிச்சா போதும்.. கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறி, எடை வேகமா குறையும்..
Weight Loss Thinai Kanji Recipe In Tamil: உடல் பருமனால் நிறைய பேர் தற்போது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் இருந்து வருகிறார்கள். அப்படி நீங்களும் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், காலையில் திணை கஞ்சியை செய்து குடியுங்கள்.
இந்த திணை கஞ்சியில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும், கெட்ட நீரையும் வெளியேற்றும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். இந்த கஞ்சியை காலை, இரவு என எந்த வேளையிலும் குடிக்கலாம். ஆனால் இதை தினமும் காலையில் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் மூலம் எடை இழப்புக்கு உதவி புரியும்.

உங்களுக்கு இந்த திணை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திணை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* திணை - 50 கிராம் அல்லது 1 கப்
* கருப்பு சுண்டல் - 50 கிராம்
* நல்லெண்ணெய் - 1/2
* வெந்தயம் - 1/4
* சீரகம் - 1/4
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 6 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கருப்பு சுண்டலை 50 கிராம் எடுத்து நீரில் 6 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 50 கிராம் அளவுள்ள ஒரு கப் திணையை நீரில் 2-3 முறை
கழுவிவிட்டு, அதில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள திணையை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து,
அத்துடன் ஊற வைத்த சுண்டலையும் சேர்த்து 2-3 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து,
குக்கரை மூடி உயர் தீயில் 2 விசிலும், குறைவான தீயில் 2 விசிலும்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அனைத்தையும் நன்கு மென்மையாகும்
வரை மசித்து விட வேண்டும்.
* பின் அதில் கஞ்சி பதத்திற்கு வேண்டிய சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை
மீண்டும் அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், மிளகுத் தூள் மற்றும் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியை சிறிது தூவி நன்கு கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான திணை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
