Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
Thalappakatti Paneer Biriyani Recipe in Tamil: அசைவப் பிரியர்கள் பார்த்து பயப்படும் புரட்டாசி மாதம் வந்துவிட்டது. இந்த மாதம் காளான், பன்னீர் போன்றவை அதிகளவில் விற்பனையாகும். பிரியாணி இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமையை கற்பனை செய்து பார்ப்பது என்பதே மிகவும் கடினமானதாகும். புரட்டாசி மாதத்தில் பிரியாணி இல்லாத குறையை சமாளிக்க பன்னீரை வைத்து ஒரு பிரியாணியை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் தலப்பாக்கட்டி ஸ்டைலில் செஞ்சு பாருங்க.

தலப்பாக்கட்டி பிரியாணி என்றாலே அது உலகம் முழுக்க பிரபலமானதாகும். இதற்கென தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த புரட்டாசி மாதத்தில் சிக்கன், மட்டனுக்கு பதிலாக பன்னீரை வைத்து ஈஸியான அதேசமயம் மிகவும் சுவையான தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணியை செய்து வீட்டில் உள்ளவர்களை ஆர்ச்சரியப்படுத்துங்கள்.
உங்களுக்கு தலபாக்கட்டி பன்னீர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தலபாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பிரியாணி மசாலா அரைக்க:
- 1 பெரிய பிரியாணி இலை
- 4 ஏலக்காய்
- 10 கிராம்பு
- 1 துண்டு ஜாதிபத்திரி
- 8 முந்திரி பருப்பு
- 5 துண்டு பட்டை
- 2 ஸ்பூன் கல்பாசி
வெங்காய விழுது அரைக்க:
- 2 பெரிய வெங்காயம்
- 6 பச்சை மிளகாய்
- 10 பூண்டு பல்
- 2 பெரிய துண்டு இஞ்சி
பிரியாணி செய்ய:
- 100 மி.லி எண்ணெய்
- 2 கப் சீரக சம்பா அரிசி
- 3 கப் தண்ணீர்
- 200 கிராம் பன்னீர்
- 1 கைப்பிடி புதினா இலைகள்
- 1 பெரிய கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 4 ஸ்பூன் தயிர்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் நெய்
- அரை எலுமிச்சையின் சாறு
செய்முறை:
- முதலில் ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அதன் பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவி 3 கப் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரைச் சூடாக்கி, அதில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- மிதமான தீயில் வதக்கி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் தயார் செய்து வைத்துள்ள பிரியாணி மசாலாவைச் சேர்த்துக் கலக்கவும். மசாலாவும் வெங்காய விழுதும் நன்றாக வெந்து, அதன் மேற்பரப்பில் எண்ணெய் மிதந்து வரும் வரை சமைக்கவும்.
- அதன்பின் தயிர், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக் கலந்து, 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
- பன்னீர் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். பன்னீர் துண்டுகள் மசாலாவின் சுவையை முழுமையாக உள்வாங்கும் வரை 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- அரிசியை ஊறவைத்த தண்ணீரை அளந்து, குக்கரில் ஊற்றவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து கிளறவும்.
- உப்பைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் கூடுதலாகச் சேர்க்கவும்.
- எலுமிச்சைச் சாற்றைப் பிழியவும். பிரஷர் குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- பிறகு தீயைக் குறைத்து வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- 10 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். அழுத்தம் அடங்கியதும், மெதுவாக மூடியைத் திறந்து, சாதத்தை ஓரங்களிலிருந்து கிளறிவிடவும்.
- மீதமுள்ள நெய்யை மேலே ஊற்றி மூடி வைத்து, பரிமாறுவதற்கு முன் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications
