நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்

Posted By:

Potato Sabzi Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு இட்லி, தோசை அல்லது சப்பாத்திதான் பிரதான உணவாக இருக்கும். இதற்கு பெரும்பாலும் சட்னி அல்லது குருமாதான் சைடிஷாக இருக்கும். எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரியான சைடிஷை சமைப்பது. வெறும் உருளைகிழங்கை வைச்சே நீங்க வழக்கமாக செய்யுற மாதிரி இல்லாம புதுசா ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படினா இந்த ரெசிபி உங்களுக்குத்தான்.

Potato Sabzi Recipe How to Make at Home in Tamil

இந்த நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சால்னா செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் சுவையானது. இது டிபன் வகைகளுக்கு மட்டுமின்றி சாதம், புலாவ் போன்றவற்றுக்கும் சூப்பராக இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு பிடிக்குமென்றால் நிச்சயம் இந்த ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுக்கு நார்த் இந்தியன் உருளைக்கிழங்கு சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 ஏலக்காய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 இன்ச் பட்டை
- 3 கிராம்பு
- ½ ஸ்பூன் சோம்பு
- சிறிது பெருங்காயத்தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 2 ஸ்பூன் கசூரி மேத்தி
- 3 தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 உருளைக்கிழங்கு, வேகவைத்து நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- 1 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- ½ எலுமிச்சை

செய்முறை:

- ஒரு பெரிய வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கி, அதில் 1 ஸ்பூன் சீரகம், 1 பிரிஞ்சி இலை, 2 ஏலக்காய், 1 இன்ச் பட்டை, 3 கிராம்பு, ½ ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

- அடுப்பைமிதமான தீயில் வைத்து, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ½ ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மல்லித் தூள் மற்றும் 1 ஸ்பூன் கசூரி மேத்தி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- பின்னர் 1 ஸ்பூன் இஞ்சி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

- அதன்பின் 3 தக்காளி சேர்த்து, அதிலிருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

- பின்னர் வேகவைத்துச் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட 4 உருளைக்கிழங்குகளையும், 1 ஸ்பூன் உப்பை சேர்க்கவும்.

- மசாலாக்கள் நன்றாகக் கலக்கும்படி ஒரு நிமிடம் வதக்கவும்.

- இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- மூடி போட்டு, மேலும் உருளைக்கிழங்கு மசாலாவை உறிஞ்சும் வரை கொதிக்க விடவும்.

- குழம்பின் பதத்தைச் சரிசெய்ய சில உருளைக்கிழங்குகளை மசிக்கவும்.

- இறுதியாக 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், ½ எலுமிச்சையைப் பிழிந்து சாறு மற்றும் 1 ஸ்பூன் நசுக்கிய கசூரி மேத்தி சேர்க்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சால்னா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, September 20, 2026, 22:01 [IST]
Desktop Bottom Promotion