ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..

Posted By:

Ragi Rava Idli With Peerkangai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் டிபனாக இட்லி செய்ய மாவு இல்லையா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு அசத்தலான சுவையில் ராகி ரவா இட்லியை செய்யுங்கள். இந்த இட்லி பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். மேலும் இது சட்டென்று செய்யக்கூடியவாறு ஈஸியான செய்முறையையும் கொண்டிருக்கும். இந்த இட்லிக்கு அனைத்துவிதமான சட்னிகளுமே நல்ல காம்பினேஷனாக இருக்கும். இருப்பினும் பீர்க்கங்காய் கொண்டு செய்யக்கூடிய சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Ragi Rava Idli With Peerkangai Chutney How To Make This Healthy Breakfast Recipe

உங்களுக்கு இந்த ராகி ரவா இட்லியும், பீர்க்கங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி ரவா இட்லி மற்றும் பீர்க்கங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ராகி ரவா இட்லிக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* ரவை - 3/4 கப்
* ராகி மாவு - 1 கப்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்

சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* சின்ன வெங்காயம் - 15
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பீர்க்கங்காய் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ரவையை சேர்த்து நன்கு வறுத்து, அதன் பின் அதில் ராகி மாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 கப் தயிரை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி, 10-12 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* ஓரளவு குளிர்ந்த பின் இட்லிகளை எடுத்தால், சுவையான ராகி ரவா இட்லி தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க வேண்டும். பின் மூடி வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து கிளறி, அதில் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், பீர்க்கங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 21, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion