Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
இந்த கஞ்சியை ஒருநாள் விட்டு ஒருநாள் குடிங்க.. கெட்ட கொழுப்பு கரைஞ்சு எடை மடமடன்னு வேகமா குறையும்...
Mappillai Samba Arisi Ulunthu Kanji Recipe In Tamil: உங்கள் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியுடன், டயட்டையும் மேற்கொள்கிறீர்களா? அப்படியானால் உங்களின் டயட்டில் மாப்பிள்ளை சம்பா அரிசி உளுந்து கஞ்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கஞ்சியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன. இந்த கஞ்சியை அடிக்கடி செய்து குடிக்கும் போது, உடலும் வலுபெறும், உடல் எடையும் வேகமாக குறையும். முக்கியமாக உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

உங்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாப்பிள்ளை சம்பா அரிசி உளுந்து கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாப்பிள்ளை சம்பா அரிசி - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/4 லிட்டர்
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 3
* தேங்காய் - 3 சில்லு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மாப்பிள்ளை சம்பா
அரிசியை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும்
வரை வறுத்து, அதையும் அரிசியுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை
சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, சிறிது
உப்பு தூவி, காய்கறிகள் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதில் அரைத்த பொடியை சேர்த்து, 1 1/4 லிட்டர்
நீரை ஊற்றி, கட்டிகளின்றி நன்கு கலந்து மிதமான தீயில் வைத்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்கு மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய், தேங்காய் சேர்த்து
கொரகொரவென்று மசாலாவை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கஞ்சி நன்கு கொதித்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 2-3
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி
உளுந்து கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications