இந்த கஞ்சியை வாரம் 4 முறை காலையில் சாப்பிடுங்க.. உடல் எடை மடமடன்னு வேகமாக குறையும்...

Posted By:

Weight Loss Karunjeeraga Kanji Recipe In Tamil: தற்போது டயட்டில் இருக்கும் நிறைய பேர் தங்களின் உணவில் கஞ்சியை அதிகம் சேர்க்க விரும்புகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் தங்கள் உணவில் தானியங்களை அவசியம் உட்கொள்ள விரும்புவர். அதற்காக சிறுதானியங்களைக் கொண்டு பலவிதமான கஞ்சிகளை தயாரித்து உட்கொண்டு வருகின்றனர்.

ஆனால் சிறு தானியங்கள் மட்டுமின்றி, கருஞ்சீரகமும் ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியக்கூடியவை. ஏனெனில் கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ, சி, கே, பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளன.

Weight Loss Kanji How To Make a Karunjeeraga Kanji Recipe

இந்த சத்துக்கள் அனைத்தும் நினைவாற்றலை மேம்படுத்த, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, கொலஸ்ட்ராலைக் குறைக்க, கவனத்தை மேம்படுத்த, எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இப்படிப்பட்ட கஞ்சீரகத்தை வெறுமனே சாப்பிடுவதை விடுத்து, அதைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்தால், இன்னும் சிறப்பாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் கருஞ்சீரக கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருஞ்சீரக கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அரிசி குருணை - 1 கப்
* கருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* பூண்டு - 10 பல்
* கெட்டி தேங்காய் பால் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் 1 கப் அரிசி குருணையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 டீஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். குருணை நன்கு வேகும் சமயத்தில் கருஞ்சீரகமும், வெந்தயமும் வெந்துவிடும்.
* குருணை வெந்துவிட்டால், அதில் 10 பூண்டு பற்களை தட்டிப் போட்டு, பூண்டு பற்களை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதற்கு மிக்சர் ஜாரில் அரை மூடி தேங்காயை துருவி, சிறிது நீரை ஊற்றி, நன்கு கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பூண்டு வெந்ததும், அதில் 1 கப் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1 கொதி வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும், சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறினால், சுவையான கருஞ்சீரக கஞ்சி தயார். இந்த கஞ்சிக்கு எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion