Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்..
Vellai Paniyaram With Milagai Chutney Recipe In Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சிம்பிளான ஒரு டிபன் காம்போவை செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வெள்ளை பணியாரமும், மிளகாய் சட்னியையும் செய்யுங்கள்.
இது மிகவும் ருசியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஒருமுறை இந்த டிபன் காம்போவை செய்தால், பின் வாரம் ஒருமுறை நிச்சயம் இதை செய்வீர்கள். அந்த அளவில் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெள்ளை பணியாரமும், மிளகாய் சட்னி ரெசிபியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை பணியாரம் மற்றும் மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 3/4 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பால் - 50 மிலி
சட்னிக்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* வரமிளகாய் - 6
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 50 மிலி
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் பச்சரிசி மற்றும் 1/4 கப்
உளுத்தம் பருப்பை சேர்த்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் நீரை ஊற்றி, மூடி வைத்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யலாம். அதற்கு மிக்சர் ஜாரில் நறுக்கிய 1 பெரிய
வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், வரமிளகாய், சுவைக்கேற்ப
உப்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்ணெணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, எண்ணெய்
பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மிளகாய் சட்னி
தயார்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் காய்ச்ச்சி ஆற வைத்த பாலை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* மாவின் பதம் என்றால் தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மாவை ஒரு சிறிய கரண்டியில்
எடுத்து எண்ணெயில் ஊற்றி, பொரித்து எடுத்தால், சுவையான வெள்ளை
பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications
