Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
3 பிரட் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்ட் டக்கரா இருக்கும்...
Vegetable Bread Toast Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு ஒரு அட்டகாசமான டோஸ்ட் செய்து கொடுங்கள். அதுவும் இந்த டோஸ்ட்டில் காய்கறிகளை சேர்த்து செய்யும் போது, இது ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
முக்கியமாக இந்த பிரட் டோஸ்ட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும், காலை வேளையில் டிபனாகவும் சாப்பிடலாம். உங்கள் பிள்ளைகள் காய்கறிகளை அதிகம் சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இந்த பிரட் டோஸ்ட் உடன் சத்தான காய்கறிகளை சேர்த்து செய்து கொடுங்கள்.

உங்களுக்கு வெஜிடேபிள் பிரட் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பிரட் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (துருவியது)
* குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரட் - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றும்
துருவிய கேரட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி பஜ்ஜி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பிரட் துண்டுகளை எடுத்து, இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* அதன் பின் பிரட் துண்டுகளை எடுத்து, கடலை மாவு கலவையில் பிரட்டி,
பேனில் போட்டு, முன்னும், பின்னும் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள
வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் ப்ரை செய்து
எடுத்தால், சுவையான வெஜிடேபிள் பிரட் டோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications











