Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
வெஜிடேபிள் கோப்தா கிரேவி

தேவையான பொருட்கள் :
கோப்தாவிற்கு...
உருளைக்கிழங்கு - 5
கேரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 2
முட்டைகோஸ் - 1/2 கப்
வெங்காயம் - 3
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவிக்கு...
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருண்டை செய்ய...
முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் உருட்டிய உருண்டைகளை வறுத்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
கிரேவி செய்ய...
முதலில் வெங்காயம், தக்காளியை நன்கு வெட்டிக் கொண்டு, அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் தக்காளி பேஸ்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சர்க்கரை, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். கலவையானது சற்று கெட்டியாகும் வரை வதக்கவும்.
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, கலவையில் அந்த உருண்டைகளை போட்டு, கொத்தமல்லியைத் தூவி 4 5 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
பின் அந்த கலவையில் உள்ள சுவையானது உருண்டையில் இறங்கி, நல்ல மணத்துடன் சுவையையும் தருகிறது. இப்போது சுவையான வெஜிடேபிள் கோப்தா தயார்!!! இதனை சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றிற்கு சைடு டிஸ் ஆக சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications