தக்காளி இடியாப்பம்

Posted By:
Subscribe to Boldsky

காலையில் ஏதேனும் ஈஸியாகவும், சுவையாகவும் சமைத்து சாப்பிட நினைத்தால், தக்காளி இடியாப்பத்தை செய்து சாப்பிடுங்கள். இந்த இடியாப்பமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இங்கு அந்த தக்காளி இடியாப்பத்தின் செய்முறையானது தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து அதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள். சரி, இப்போது அந்த தக்காளி இடியாப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Tomato Idiyappam

தேவையான பொருட்கள்:

சேமியா/ ரெடிமேட் இடியாப்பம் - 1 பாக்கெட்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சாம்பார் பொடி/மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடானதும், அதில் ரெடிமேட் இடியாப்பத்தைப் போட்டு, 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியாப்பத்தை போட்டு நன்கு பிரட்டி, பின் அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியாப்பம் ரெடி!!!

English summary

Tomato Idiyappam

Want to know how to prepare tomato idiyappam? Here is the recipe. Check out...
Story first published: Saturday, November 22, 2014, 6:12 [IST]
Subscribe Newsletter