சுவையான மலாய் கார்ன் பாலக்

Posted By:
Subscribe to Boldsky

பசலைக்கீரையின் நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அத்தகைய பசலைக்கீரையை பலர் கடைந்து மட்டும் தான் சாப்பிடுவார்கள். ஆனால் பசலைக்கீரையை அருமையான சுவையில் மலாய் மற்றும் கார்ன் சேர்த்து கிரேவி செய்து சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

இங்கு அந்த மலாய் கார்ன் பாலக் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 4 கட்டு

வேக வைத்த சோளம் - 1 கப்

க்ரீம் அல்லது மலாய் - 1/2 கப்

இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்

மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை சுடுநீரில் சிறிது நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

Tasty Malai Corn Palak Recipe

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

Tasty Malai Corn Palak Recipe

பின் வேக வைத்துள்ள சோளம் சேர்த்து, உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

Tasty Malai Corn Palak Recipe

அடுத்து அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

Tasty Malai Corn Palak Recipe

கிரேவியானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு, உலர்ந்த வெந்தய இலை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

Tasty Malai Corn Palak Recipe

இறுதியில் கலவையானது ஒரு பதத்திற்கு வரும் போது, அதனை இறக்கினால், சுவையான மலாய் கார்ன் பாலக் ரெடி!!!

Tasty Malai Corn Palak Recipe

இந்த மலாய் கார்ன் பாலக் ரெசிபியானது சப்பாத்தி, நாண் அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

English summary

Tasty Malai Corn Palak Recipe

Malai makai palak recipe is one of the tasty and nutritious recipes. You must try this malai corn palak recipe.
Story first published: Saturday, January 17, 2015, 13:21 [IST]