For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான... தக்காளி பூண்டு சாதம்

By Maha
|

தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம் என்றும் சொல்லலாம். அதிலும் அலுவலகத்திற்கு செல்வதால், காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். இப்போது இந்த சாதத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!

Tomato Garlic Rice
தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்கவும். பின் அதனை இறக்கி, ஒரு குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் பூண்டு பேஸ்ட், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள்இ கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி, பின்னர் இறக்கவும்.

இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். அதுவும் இதனை ஏதேனும் மசாலா கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

English summary

Spicy Tomato Garlic Rice Recipe | காரமான... தக்காளி பூண்டு சாதம்

Tomato Garlic Rice is a very simple and flavorful rice and can be prepared in a few minutes.
Desktop Bottom Promotion