Latest Updates
-
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
மிகவும் ஈஸியான சில உப்புமா ரெசிபிக்கள்!!!
காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் தான், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்கும். அதிலும் தற்போது பெரும்பாலானோர் வேலைக்கு செல்வதால், பலரால் பொறுமையாக சமைத்து சாப்பிட முடியவில்லை. ஆனால் சமைக்க நேரம் இல்லை என்று தினமும் சாப்பிடாமல் சென்றால், உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக அல்சர் வந்துவிடும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, வேலைக்கு செல்வோர் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய உப்புமாவில் உள்ள சில வெரைட்டிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த ரெசிபிக்களை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த ஈஸியான சில உப்புமா ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

சம்பா ரவை உப்புமா
உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு சம்பா ரவை உப்புமா ஒரு சிறந்த காலை உணவு. ஏனெனில் இதில் கலோரி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த உப்புமாவில், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பச்சை பட்டாணி மற்றும் கேரட் இருக்கிறது.

முட்டைகோஸ் ரவை உப்புமா
எப்போதும் ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக உப்புமா செய்ய நினைத்தால், ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம். இது வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் கர்ப்பிணிகளுக்கும் ஏற்ற காலை உணவும் கூட.

தக்காளி உப்புமா
வெளிநாட்டில் இருந்து, தென்னிந்திய உணவை சாப்பிட முடியவில்லை என்று வருந்துவோர், உப்புமாவில் ஒன்றான தக்காளி உப்புமாவை செய்து சாப்பிடலாம். இது எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.

சேமியா பன்னீர் உப்புமா
சேமியா பன்னீர் உப்புமா செய்வது என்பது மிகவும் எளிது. எப்படியெனில் இதில் ரவைக்கு பதிலாக சேமியாவை சேர்த்து சமைக்க வேண்டும். மேலும் இது அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபியும் கூட.

அவல் உப்புமா
காலை வேளையில் 15 நிமிடங்களில் காலை உணவு செய்ய வேண்டுமெனில், அதற்கு அவல் உப்புமா சரியானதாக இருக்கும். ஆம், அவல் உப்புமா செய்வது மிகவும் எளிது மற்றும் ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட. சொன்னால் நம்பமாட்டீர்கள், இது மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

பிரட் உப்புமா
உப்புமாவில் ரவையோடு, பிரட் மற்றும் காய்கறிகளை சேர்த்து, நன்கு கலர் புல்லாகவும், வித்தியாசமான சுவையிலும் சமைத்து சாப்பிடலாம்.

காய்கறி உப்புமா
உப்புமாவை வெஜிடேபிள் பிரியாணி போன்று செய்து சாப்பிட நினைத்தால், அதற்கு காய்கறி உப்புமா பொருத்தமானதாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியில் பிடித்த காய்கறிகளைப் போட்டு செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

கோதுமை ரவை உப்புமா
சிலருக்கு வெள்ளை ரவை பிடிக்காது. அத்தகையவர்கள் கோதுமை ரவை கொண்டு உப்புமா செய்து சாப்பிடலாம். இதன் செய்முறையும் மிகவும் ஈஸியானது.

இட்லி உப்புமா
இரவில் செய்த இட்லி எஞ்சியிருந்தால், அந்த இட்லிகளை காலையில் உதிர்த்து, நல்ல சுவையில் உப்புமா செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலை உணவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
