1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்..

Posted By:

Kadala Paruppu Masala Recipe In Tamil: சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய வெங்காயம், தக்காளியைத் தவிர வீட்டில் வேறு எந்த காய்கறியும் இல்லையா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடலைப் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சைடு டிஷ் செய்யுங்கள். இந்த கடலைப்பருப்பு மசாலா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Kadala Paruppu Masala How To Make Channa Dal Masala For Chapati

உங்களுக்கு கடலைப் பருப்பு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கடலைப் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* கருப்பு ஏலக்காய - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நெய் - 2 ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீ)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த கடலைப் பருப்பு
* தண்ணீர் - 1 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் கடலைப்பருப்பை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 4 கப் நீரை ஊற்றி, அத்துடன் பட்டை, கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து, குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த கடலைப் பருப்பை லேசாக மசித்து சேர்த்து கிளறி, அத்துடன் 1 டம்ளர் நீரை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கடலைப் பருப்பு மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 29, 2026, 20:14 [IST]
Desktop Bottom Promotion