தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும்

Posted By:

Dhaba Style Rajma Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அவற்றிற்கு உருளைக்கிழங்கு குருமாவைத்தான் எப்போதும் சைடிஷாக செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சுவையில் தான் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை இந்த வித்தியாசமான பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா மசாலை செஞ்சு பாருங்க.

Dhaba Style Rajma Masala Recipe How to Make at Home in Tamil

ராஜ்மா மசாலா என்பது நார்த் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். நம்மூரிலும் தாபாக்களில் பெரும்பாலான மக்கள் சப்பாத்தி, புரோட்டா, நாண் என அனைத்து வகை டிபன்களுக்கும் இதை ஆர்டர் செய்கிறார்கள். இந்த தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. வழக்கமான சைடிஷ் சாப்பிட்டு போரடித்தவர்கள் இந்த சைடிஷை ஒருதடவை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் சிவப்பு ராஜ்மா
- 3 கப் தண்ணீர்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 இன்ச் பட்டை
- 4 கிராம்பு
- 1 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 இன்ச் இஞ்சி
- 8 பல் பூண்டு
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள்
- 1 ஸ்பூன் சன்னா மசாலா
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி

செய்முறை:

- ராஜ்மாவை நன்கு கழுவி, 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, ராஜ்மாவை ஒரு குக்கரில் போடவும்.

- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே அடங்கும் வரை காத்திருந்து, பின்னர் அதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சூடாக்கவும். அதில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையைச் சேர்க்கவும்.

- மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் நன்றாகப் பழுப்பு நிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

- அதேசமயம் இஞ்சி, பூண்டு, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

- அதை வாணலியில் சேர்த்து, தக்காளி வெந்து ஈரப்பதம் வற்றும் வரை வதக்குங்கள். பிறகு, மசாலாப் பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறவும்.

- சமைத்த ராஜ்மாவில் ஒரு கரண்டி அளவு பருப்பையும் அதிலுள்ள நீரையும் சேர்த்து, மெதுவாக மசித்துக்கொள்ளவும்.

- ராஜ்மாவை மசிப்பது கிரேவியை கெட்டியான பதத்திற்குக் கொண்டுவரும். பிறகு, மீதமுள்ள ராஜமா மற்றும் அதை வேகவைத்த நீரையும் இதில் சேர்க்கவும்.

- கிரேவியை 5 முதல் 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். இறுதியாக, கசூரி மேத்தி, மல்லித் தழைகள் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளைத் தூவி இறக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான தாபா ஸ்டைல் ராஜ்மா கிரேவி ரெடி. இதை சத்தம், சப்பாத்தி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 29, 2026, 21:20 [IST]
Desktop Bottom Promotion