பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க...

Rose Water For Skin Glow In Tamil: பல ஆண்டுகளாக சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கையான பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர். இது சருமத்தைப் புத்துணர்ச்சியாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும் தன்மைக்காகவும், இனிமையான நறுமணத்தாலும் பிரபலமாக உள்ளது. அதுவும் எண்ணெய் பசை சருமத்தினர், வறண்ட அல்லது பொலிவிழந்த சருமத்தைக் கொண்டவர்கள், இந்த ரோஸ் வாட்டரை தினசரி சரும பராமரிப்பில் பயன்படுத்தி வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் இருக்கும்.

Top 5 Ways To Use Rose Water To Improve Skin Glow

கிட்டத்தட்ட அனைத்து சருமத்தினருக்கும் ஏற்ற ரோஸ் வாட்டர் ஒரு இயற்கையான டோனராகச் செயல்பட்டு, சருமத்தின் pH சமநிலையைப் பராமரிக்கவும், துளைகளை இறுக்கவும், சுத்தம் செய்த பிறகு எஞ்சியிருக்கும் அசுத்தங்களை அகற்றவும் உதவுகிறது.

முக்கியமாக இந்த ரோஸ் வாட்டர் பிசுபிசுப்பு இல்லாமல், நல்ல நறுமணத்துடன் இருப்பதால் தினமும் பலமுறை இதை முகத்தில் ஸ்ப்ரேயாகவோ, டோனராகவோ பயன்படுத்தலாம். இது தவிர வேறு வழிகளிலும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இப்போது சரும அழகை மேம்படுத்த ரோஸ் வாட்டரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

1. ரோஸ் வாட்டர் டோனர்

* இதற்கு முகத்தை நீரில் கழுவிய பின், பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* பின் அதை அப்படியே உலர வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தும் போது, சருமத்துளைகள் இறுக்கமடைவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

2. ரோஸ் வாட்டர் + கிளிசரின்

* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரினை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவ வேண்டும்.
* இப்படி செய்வதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, சருமம் மென்மையாக இருக்கும்.

3. ரோஸ் வாட்டர் + முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடடிவ 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. இது சருமத்தில் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும், பிம்பிளைக் குறைக்க உதவும், சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும்.

4. ரோஸ் வாட்டர் + கற்றாழை ஜெல்

* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்ட, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி ஊற வைக்க வேண்டும்.
* இது சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது மற்றும் இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் குறைப்பதுடன், சருமத்திற்கு குளிர்ச்சியைத் தரும்.

5. ரோஸ் வாட்டர் + எலுமிச்சை

* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கருமையாக இருக்கும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைகக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள சருமையை போக்கி, சருமத்திற்கு பொலிவைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 29, 2026, 18:13 [IST]
Desktop Bottom Promotion