For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாஸ் வகைகள் நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரிக்க சிம்பிள் டிப்ஸ்!

ஹோட்டல்களில் பரிமாறப்படும் சாஸ் வகைகள் நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரிக்க சிம்பிள் டிப்ஸ்

By Staff
|

1. சிவப்பு மிளகாய் சாஸ்

தேவையான பொருட்கள்:

நெய் - 1 மேசைக் கரண்டி

பூண்டு - 6 பல்

தக்காளி சாஸ் - அரை குவளை

சீரகம் - அரை தேக்கரண்டி

காய்ந்த சிவப்பு மிளகாய் (வற்றல்) - 6

உப்பு

செய்முறை:

நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச் சாறு விட்டு, அரைத்து உப்பு,தக்காளிச் சாஸுடன் சேர்க்கவும். மிளகாய் சாஸ் ரெடி!

இதை சீன வகை உணவுகள், ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.


2. பச்சை மிளகாய் சாஸ்

தேவையான பொருட்கள்:

வினிகர் அல்லது எலுமிச்சம் பழச் சாறு - 9 தேக்கரண்டி

சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய், நறுக்கியது - 4

சீனி - அரை தேக்கரண்டி

உப்பு

செய்முறை:

எல்லா பொருட்களையும் சேர்த்துக் கலந்து அடுப்பு உஷ்ணத்தில் அல்லது எலக்ட்ரிக்ஸ்டெபிலைசர் மீது வைத்து உபயோகிக்கவும்.


3. ஒயிட் சாஸ்

தேவையான பொருட்கள்:

மைதா - 10 கிராம்

பால் - 100 மில்லி

வெண்ணை - 10 கிராம்

உப்பு, மிளகுத் தூள் - ருசிக்கேற்ப

செய்முறை:

வெண்ணையை இளக்கி அடுப்பிலிருந்து இறக்கி மாவைப் போட்டுக் கிளறி நல்ல பசை மாதிரிவந்தவுடன் பால் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் போட்டு சிறு தீயில் கெட்டியாக வரும்படிகிளறவும்.


4. பூண்டு சாஸ்

தேவையான பொருட்கள்:

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 50 கிராம் (இரண்டையும் மசித்துக் கொள்ளவும்)

வெங்காயம் - 100 கிராம்

செல்ல - 100 கிராம் (இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும்)

பெல்லா - 100 கிராம்

பச்சை மிளகாய் - 200 கிராம்

சிவப்பு மிளகாய் சாஸ் - 200 கிராம்

அஜினோ மோட்டோ - 3 தேக்கரண்டி

சீனி - 50 கிராம்

உப்பு, ராஸ் பெர் கலர் சிறிது.

செய்முறை:

100 கிராம் எண்ணையை காய வைத்து அதில், 50 கிராம் வற்றல் பொடி சேர்த்து மற்றஎல்லாப் பொருட்களையும் கலந்து விடவும். பூண்டு சாஸ் ரெடி!

English summary

Tips to make Sauce varieties

Tips to make Sauce varieties
Desktop Bottom Promotion