சுரைக்காயில் பாஸ்தா செஞ்சிருக்கீங்களா? இல்லைனா இப்படி செஞ்சு பாருங்க!!

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் சுவை இல்லாத உணவாகத் தான் இருக்கும் என்பது பலரது விமர்சனம். ஆனால் அது உண்மை இல்லை. ஆரோக்கியமான உணவினைக் வட சுவையாக செய்யலாம். அப்படிப்பட்ட உணவினை சாப்பிட ஆசைப்பட்டால் மதிய உணவு வேளையில் சுரைக்காய் சேர்த்த பாஸ்தா செய்து சாப்பிடலாம்.

அதனை செய்ய வெறும் 15 நிமிடங்கள் போதும். இதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் போதும் மிக சுலபமாக இந்த ரெஸிபியை செய்து விடலாம். வாருங்கள் இப்போது நாம் சுரைக்காய் பாஸ்தா செய்தற்குத் தேவையானப் பொருட்களையும் செய்முறையையும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானப் பொருட்கள் :

தேவையானப் பொருட்கள் :

சுரைக்காய் - 2

பூண்டு - 4

உப்பு - தேவையான அளவு

துளசி இலை - 2 கப்

ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

பார்மேசன் சீஸ் - 1/4 கப் (துருவியது)

ஸ்பெகட்டி பாஸ்தா - ஒரு கப்

கருப்பு மிளகுத் தூள் - சுவைக்கு ஏற்ப

செர்ரி தக்காளி - 5 முதல் 6

சாஸ் செய்முறை :

சாஸ் செய்முறை :

துளசி இலைகள் மற்றும் பூண்டு சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது ஆலிவ் ஆயிலை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவேண்டும்.

 சாஸ் செய்முறை :

சாஸ் செய்முறை :

பின்னர், பார்மேசன் சீஸ் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டால் சுவையான வீட்டில் செய்த பாஸ்தா சாஸ் தயார்.

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

ஸ்பெகட்டி பாஸ்தாவை தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில், உப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும்.

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

சுரைக்காயை நீரில் போட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஈரப்பதம் முழுவதுமாக நீங்கும படி ஒரு மெல்லிய துணியின் மீது வைத்து ஈரப்பதத்தை நீக்க வேண்டும்.

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

வதக்கி வைத்திருக்கும் மசாலாவுடன் வேக வைத்த சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர், செய்து வைத்திருக்கும் பாஸ்தா சாஸை சேர்த்து கலக்க வேண்டும்.

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

சுரைக்காய் பாஸ்தா செய்யும் முறை :

நன்கு கலக்கிப் பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பவுலில் செய்து வைத்திருக்கும் பாஸ்தாவை மாற்றி வைக்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் பாஸ்தா பரிமாற ரெடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Quick Pesto Zucchini Pasta Recipe,

Quick Pesto Zucchini Pasta Recipe,
Story first published: Thursday, May 25, 2017, 12:00 [IST]