உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் விருப்பமான உருளைக்கிழங்கில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதுவரை உருளைக்கிழங்கை சிப்ஸ், பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அத்தகைய உருளைக்கிழங்கை சற்று வித்தியாசமாக, அனைவருக்கும் பிடித்தவாறு சாண்ட்விச் செய்தும் சாப்பிடலாம்.

இத்தகைய சாண்ட்விச் செய்வது மிகவும் எளிமையானது. இதனை காலை உணவாகவோ அல்லது மாளை வேளையிலோ ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு சாண்ட்விச் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!

Potato Sandwich
தேவையான பொருட்கள்:

பிரட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சீஸ் - தேவையான அளவு (துருவியது)

செய்முறை:

முதலில் மசித்த உருளைக்கிழங்குடன், கொத்தமல்லி, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

பின்னர் ஒரு பிரட் துண்டின் மேல் மசித்த உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, தோசைக்கல்லின் மேல் வைக்க வேண்டும். இதேப் போல் மற்றொரு பிரட் துண்டின் மேலும் செய்து, தோசைக்கல்லில் வைக்க வேண்டும்.

பின் உருளைக்கிழங்கு கலவையின் மேல் வெண்ணெய் தடவ வேண்டும். அடுத்து அந்த பிரட்டை திருப்பிப் போட்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். (அதாவது பிரட்டின் மேல் தடவிய உருளைக்கிழங்கு கலவை தோசைக்கல்லை நோக்கி இருக்க வேண்டும்.)

பிறகு இரண்டு பிரட்டிலும் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையின் மீதும் துருவிய சீஸை வைத்து, இரண்டையும் ஒன்றாக இணைத்து, பின் இரண்டு புறமும் வெண்ணெய் தடவி, பொன்னிறமாக பிரட்டி எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு சாண்ட்விச் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

English summary

Potato Sandwich | உருளைக்கிழங்கு சாண்ட்விச்

Make delicious Potato Sandwich using this simple recipe from Awesome Cuisine.
Story first published: Monday, April 1, 2013, 18:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter