Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
உருளைக்கிழங்கு தயிர் கிரேவி
இதுவரை உருளைக்கிழங்கைக் கொண்டு குழம்பு, பொரியல், வறுவல், பஜ்ஜி என்று சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கை தயிருடன் சேர்த்து கிரேவி செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், அதனை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தயிர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
கடலை மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் கடலை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளறி விட வேண்டும்.
பின் அதில் தயிர் கலவையை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கலவையானது எண்ணெயில் இருந்து பிரியும் போது, அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் கொத்தமல்லியைத் தூவி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications